21. தன்னுள் கையாறு எய்திடு
கிளவி
|
|
|
|
நீர்
நிலை நின்று, கால் கறுத்து எழுந்து, |
|
திக்கு
நிலை படர்ந்த முகில்-பாசடையும்; |
|
இடை
இடை உகளும் மீன் ஆம் மீனும்; |
|
செம்
முகில் பழ நுரை, வெண் முகில் புது நுரை, |
|
எங்கும்
சிதறிப் பொங்கி எழு வனப்பும்; |
5
|
பல
தலை வைத்து முடியாது பாயும், |
|
எங்கும்,
முகம் வைத்த கங்கைக் காலும்; |
|
கொண்டு
குளிர் பரந்த மங்குல்-வாவிக்குள்-- |
|
முயல்
எனும் வண்டு உண அமுத நறவு ஒழுக்கி, |
|
தேவர்-மங்கையர்
மலர் முகம் பழித்து, |
10
|
குறையாப்
பாண்டில் வெண்மையின் மலர்ந்த |
|
மதித்
தாமரையே! மயங்கிய ஒருவேன், |
|
நின்பால்
கேட்கும் அளி மொழி ஒன்று உள: |
|
மீன்
பாய்ந்து மறிக்கத் திரையிடை மயங்கி, |
|
சூல்
வயிறு உளைந்து, வளை கிடந்து முரலும் |
15
|
புன்னைஅம்
பொதும்பரில்--தம்முடை நெஞ்சமும்; |
|
மீன்
உணவு உள்ளி இருந்த வெண் குருகு எனச் |
|
சோறு
நறை கான்ற கைதைய மலரும்; |
|
பல
தலை அரக்கர் பேர் அணிபோல, |
|
மருங்கு
கூண்டு எழுந்து, கருங் காய் நெருங்கி, |
20
|
விளை
கள் சுமந்த தலை விரி பெண்ணையும்; |
|
இன்னும்
காணாக் காட்சி கொண்டு இருந்த |
|
அன்னத்
திரளும்; பெருங் கரியாக, |
|
சொல்லா
இன்பமும் உயிருறத் தந்து, |
|
நாள்
இழைத்திருக்கும் செயிர் கொள் அற்றத்து-- |
25
|
மெய்யுறத்
தணந்த பொய்யினர், இன்று, |
|
(நெடு
மலை பெற்ற ஒரு மகள் காண, |
|
நான்முக-விதியே
தாளம் தாக்க, |
|
அந்த
நான்முகனை உந்தி பூத்தோன் |
|
விசித்து
மிறை பாசத்து இடக்கை விசிப்ப, |
30
|
மூன்று
புரத்து ஒன்றில் அரசுடை வாணன் |
|
மேருக்
கிளைத்த தோள் ஆயிரத்தொடும், |
|
எழு
கடல் கிளர்ந்த திரள் கலி அடங்க, |
|
முகம்
வேறு இசைக்கும் குடமுழவு இரட்ட; |
|
புட்
கால் தும்புரு, மணக் கந்திருவர், |
35
|
நான்மறைப்
பயன் ஆம் ஏழ் இசை அமைத்து, |
|
சருக்கரைக்
குன்றில் தேன்மழை நான்றென; |
|
ஏழு
முனிவர்கள் தாழும் மாதவர், |
|
அன்பினர்
உள்ளமொடு என்பு கரைந்து உருக; |
|
விரல்
நான்கு அமைத்த அணி குரல் வீங்காது, |
40
|
நான்
மறை துள்ளும் வாய் பிளவாது, |
|
காட்டி
உள் உணர்த்தும் நோக்கம் ஆடாது, |
|
பிதிர்
கனல் மணி சூழ் முடி நடுக்காது, |
|
வயிறு
குழி வாங்கி, அழு முகம் காட்டாது; |
|
நாசி,
காகுளி, வெடிகுரல், வெள்ளை, |
45
|
பேசாக்
கீழ்-இசை, ஒருபுறம் ஒட்டல், |
|
நெட்டுயிர்ப்பு
எறிதல், எறிந்து நின்று இரட்டல், |
|
ஓசை
இழைத்தல், கழி போக்கு, என்னப் |
|
பேசுறு
குற்றம் ஆசொடும் மாற்றி; |
|
வண்டின்
தாரியும், கஞ்ச நாதமும், |
50
|
சிரல்
வான்நிலையும், கழை இலை வீழ்வதும், |
|
அருவி
ஓசையும், முழவின் முழக்கமும், |
|
வலம்புரிச்
சத்தமும், வெருகின் புணர்ச்சியும், |
|
இன்னும்
என்று இசைப்பப் பன்னிய விதியொடு; |
|
மந்தரம்,
மத்திமம், தாரம், இவை மூன்றில், |
55
|
துள்ளல்,
தூங்கல், தெள்ளிதின் மெலிதல், |
|
கூடிய
கானம் அன்பொடு பரவ, |
|
பூதம்
துள்ள, பேய் கைமறிப்ப, |
|
எங்கு
உள உயிரும் இன்பம் நிறைந்து ஆட, |
|
நாடக-விதியொடு
ஆடிய பெருமான், |
60
|
மதுரை
மாநகர்ப் பூழியன் ஆகி, |
|
கதிர்
முடி கவித்த இறைவன் மா மணிக் |
|
கால்
தலைக் கொள்ளாக் கையினர் போல) |
|
நீங்கினர்;
போக்கும், ஈங்குழி வருவதும், |
|
கண்டது
கூறுதி ஆயின்; |
65
|
எண்தகப்
போற்றி, நின் கால் வணங்குதுமே. |
|