24.
இடம் அணித்துக்கூறி வற்புறுத்தல் |
|
|
|
பொருப்பு
வளன் வேண்டி, மழைக்கண் திறப்ப, |
|
குருகு
பெயர்க் குன்றத்து உடல் பக எறிந்த |
|
நெடு
வேற் கடவுள் மயில், கொடி, முன்றில் |
|
பெருங்கிளை
கூண்டு, வெட்சி மலர் பரப்பி, |
|
இறால்
நறவு அளாய செந் தினை வெள் இடி, |
5
|
தேக்கு
இலை விரித்து, நால் திசை வைத்து, |
|
மனவு
அணி முதியோள், வரை அணங்கு அயர்ந்து, |
|
மூன்று
காலமும் தோன்றக் கூற, |
|
வேலன்
சுழன்று குறு மறி அறுப்ப, |
|
கருவி
நுதிகொள் நெறி இலை ஈந்தின் |
10
|
முற்றிய
பெரு நறவு எண்ணுடன் குடித்து, |
|
நெட்டிலை
அரம்பைக் குறுங் காய் மானும் |
|
உளியம்
தணித்த கணை கொள் வாய்த் திரிகல் |
|
ஒப்பு
உடைத்தாய வட்ட வாய்த் தொண்டகம், |
|
கோல்
தலை பனிப்ப, வான்விடு பெருங் குரல் |
15
|
வீயாது
துவைக்கும் கடன் மலை நாடர் |
|
வருந்தி
ஏற்று எடுத்த செந்திரு மட மகள்! |
|
ஒருவுக,
உளத்துப் பெருகிய நடுக்கம்: |
|
எம்
ஊர்ச் சேணும், நும் ஊர்க் குன்றமும், |
|
பெருந்
தவர் குழுவும், அருங் கதி இருப்பும்; |
20
|
பொதியமும்,
களிப்ப விரிதரு தென்றலும்; |
|
கனைகடல்
குடித்த முனிவனும், தமிழும்; |
|
மேருவும்,
மூவர்க்கு ஓதிய புரமும்; |
|
உலகம்
ஈன்று அளித்த உமையும், மா அறனும்; |
|
தேவர்க்கு
அரசனும், காவல் தருவும்; |
25
|
வழுவா
விதியும், எழுதா மறையும்; |
|
செங்கோல்
வேந்தும், தங்கிய குடியும்; |
|
தவம்
சூழ் இமயமும், கமஞ் சூல் மழையும்: |
|
எல்லையில்
ஈங்கு இவை சொல்லிய அன்றி, |
|
கண்ணன்
கரமும் வெண்ணெயும் போலப் |
30
|
பாசடை
புதைத்த நெட்டாற்று எரியுள், |
|
பூத்து
அலர் விரித்த சேப் படு தாமரை- |
|
உள்
வளை உறங்கும் வள்ள வாய்க் கூடல் |
|
நிறைந்து
உறை முக் கண் பெருந் திறல் அடிகள், |
|
அடியவர்க்கு
எவ்வளவு" அது ஆம்-- |
35
|
கொடி
புரை நுசுப்பின் பெரு முலையோளே! |
|