27.
நகர் அணிமை கூறல் |
|
|
|
புயற்கார்ப்
பாசடை, எண்படப் படர்ந்த, |
|
வெள்ளப்
பெரு நதி கொள்ளை முகம் வைத்து, |
|
நீட,
நிறை பாயும் வான வாவிக்குள் |
|
ஒரு
செந்தாமரை நடு மலர்ந்தென்ன, |
|
மூஅடி
வழக்கிற்கு ஓர் அடி மண் கொண்டு, |
5
|
ஒரு
தாள் விண்ணத்து இருமை பெற நீட்டிய |
|
கருங்
கடல் வண்ணன் செங் கருங் கரத்து |
|
ஒன்றால்
இரு மலை அன்று ஏந்தியதென, |
|
உந்தி
ஒழுக்கு ஏந்திய வன முலையாட்டியும் |
|
வரை
பொரும் மருமத்து ஒரு திறன் நீயும், |
10
|
முழை
வாய் அரக்கர் பாடு கிடந்தொத்த |
|
நிறை
கிடைப் பொற்றை வரை கடந்து இறந்தால்-- |
|
எரி
தழற் குஞ்சி, பொறி விழி, பிறழ் எயிற்று, |
|
இருள்
உடல் அந்தகன் மருள் கொள உதைத்த |
|
மூவாத்
திருப் பதத்து ஒரு தனிப் பெருமான், |
15
|
எண்ணில்
பெறாத அண்டப் பெருந் திரள் |
|
அடைவு
ஈன்றளித்த பிறை நுதற் கன்னியொடும் |
|
அளவாக்
கற்பம் அளி வைத்து நிலைஇய-- |
|
பாசடை
நெடுங் காடு காணிகொள் நீர்நாய், |
|
வானவில்
நிறத்த நெட்டுடல் வாளைப் |
20
|
பேழ்வாய்
ஒளிப்ப, வேட்டுவப்பெயர் அளி- |
|
இடை
உறழ் நுசுப்பின் குரவை வாய்க் கடைசியர் |
|
களை
கடுந் தொழில் விடுத்து, உழவு செறு மண்ட, |
|
பண்கால்
உழவர் பகடு பிடர் பூண்ட |
|
முடப்
புது நாஞ்சில் அள்ளல் புக நிறுத்தி, |
25
|
சூடு
நிலை உயர்த்தும் கடுங் குலை ஏற, |
|
பைங்
குவளை துய்க்கும் செங் கட் கவரி |
|
நாகொடு
வெருண்டு கழைக் கரும்பு உழக்க, |
|
அமுத
வாய் மொழிச்சியர் நச்சுவிழி போல |
|
நெடுங்
குழை கிழிப்பக் கடுங் கயல் பாயும் |
30
|
தண்ணம்
பழனம் சூழ்ந்த-- |
|
கண்
இவர் கூடல் பெரு வளம் பதியே! |
|