3. பாங்கி அஞ்சி அச்சுறுத்தல்
 
   
பகையுடன் கிடந்த நிலை பிரி வழக்கினைப்  
பொருத்தலும், பிரித்தலும், பொருபகை காட்டலும்,  
உட்பகை அமைத்தலும், உணர்த்து சொல் பொருத்தலும்,  
ஒரு தொழிற்கு இரு பகை தீராது வளர்த்தலும்,  
செய்யா அமைச்சுடன் சேரா அரசன்
5
நாடு கரிந்தன்ன காடு கடந்து இயங்கி--  
இடும்பை நிரப்பினர்க்கு ஈதலின்--இறந்தோர்க்கு,  
இதழ் நிறை மதுவம் தாமரை துளித்தென,  
விழி சொரி நீருடன் பழங்கண் கொண்டால்,  
(உலகு இயல் நிறுத்தும் பொருள் மரபு ஒடுங்க,
10
மாறனும் புலவரும் மயங்குறு காலை,  
முந்துறும் பெரு மறை முளைத்தருள் வாக்கால்,  
'அன்பின் ஐந்திணை' என்று அறுபது சூத்திரம்,  
கடல் அமுது எடுத்துக் கரையில் வைத்ததுபோல்,  
பரப்பின் தமிழ்ச் சுவை திரட்டி, மற்று அவர்க்குத்
15
தெளிதரக் கொடுத்த தென் தமிழ்க் கடவுள்,  
தழற்கண் தரக்கின் சரும ஆடையன்  
கூடல் அம் பெரும் பதி கூறார் கிளை என)  
'நிறை நீர்க் கயத்துள் ஒரு தாள் நின்று,  
தாமரை, தவம் செய்து, அளியுடன் பெற்ற
20
திருமகட்கு அடுத்தது என்?' என்று,  
ஒருமை காண்குவர்--துகிர்க் கிளைக் கொடியே!  
உரை