31. நெஞ்சோடு நோதல்
 
 
பொருள் செயல் அருத்தியின், எண் வழி தடைந்து,  
நால் திசை நடக்கும், அணங்கின் அவயவத்து,  
அலை தரு தட்டைக் கரும் புறம், மலை, மடல்,  
கடல் திரை உகளும் குறுங் கயல் மானும்  
கடுங் கான் தள்ளி, தடைதரு நெஞ்சம்!
5
(கயிலைத் தென்பால் கானகம், தனித்த  
தேவர் நெஞ்சு உடைக்கும், தாமரை யோகின்  
மணக் கோல் துரந்த குணக்கோ மதனை,  
திருக் குளம் முளைத்த கண் தாமரை கொடு  
தென் கீழ்த் திசையோன் ஆக்கிய தனிமுதல்
10
திரு மா மதுரை எனும்) திருப் பொற்றொடி,  
என் உயிர் அடைத்த பொன் முலைச் செப்பின்  
மாளா இன்பம் கருதியோ? அன்றி,  
புறன் பயன் கொடுக்கும் பொருட்கோ? வாழி!  
வளர் முலை இன்பு எனின், மறித்து நோக்குமதி:
15
பெரும்-பொருள் இன்பு எனின், பெரிது தடை இன்றே:  
யாதினைக் கருதியது? ஒன்றை  
ஓதல் வேண்டும்; வாழிய பெரிதே!  
உரை