33. உலகின்மேல் வைத்து உரைத்தல்  
 
இருளொடு தாரகை இரண்டினை மயக்கி,  
குழல் என, மலர் என, மயல்வரச் சுமந்து;  
வில்லினைக் குனித்து, கணையினை வாங்கி,  
புருவம், கண் என, உயிர் விடப் பயிற்றி;  
மலையினைத் தாங்கி, அமுதினைக் கடைந்து,
5
முலை என, சொல் என, அவா வர வைத்து;  
மெய்யினைப் பரப்பி, பொய்யினைக் காட்டி,  
அல்குல், இடை என, நெஞ்சு உழலக் கொடுத்து;  
முண்டகம் மலர்த்தி, மாந் தளிர் மூடி,  
அடி என, உடல் என, அலமரல் உறீஇ-
10
(மூரி வீழ்ந்த நெறிச் சடை முனிவர்,  
சருக்கம் காட்டும் அரு மறை சொல்லி,  
உள்ளம் கறுத்து, கண் சிவந்து, இட்ட  
மந்திரத்து, அழல் குழி தொடு வயிறு வருந்தி,  
முன்பின் ஈன்ற, பேழ்வாய்ப் புலியினை,
15
கைதை முள் செறித்த கூர்எயிற்று அரவினை,  
கார் உடல் பெற்ற தீ விழிக் குறளினை--  
உரி செய்து உடுத்து, செங்கரம் தரித்து,  
செம்மலர் பழித்த தாட் கீழ்க் கிடத்தி,  
திருநடம் புரிந்த தெய்வ நாயகன்,
20
ஒரு நாள், மூன்று புரம் தீக் கொளுவ,  
பொன்மலை பிடுங்கி, கார்முகம் என்ன  
வளைத்த ஞான்று, நெடு விண் தடையக்  
கால் கொடுத்தன்ன கந்திகள் நிமிர்ந்து,  
நெருக்கு பொழில் கூடல் அன்ன) செம் மகளிர்
25
கண் எனும் தெய்வக் காட்சியுள் பட்டோர்,  
வெண்பொடி, எருக்கம், என்பு, பனை, கிழியினை,  
பூசி, அணிந்து, பூண்டு, பரி கடவி,  
கரத்தது ஆக்கி, அந் நோ  
அருத்தி மீட்பர்--நிலை வல்லோரே.
30
உரை