35.
நலம் புனைந்து உரைத்தல் |
|
|
|
அருள்
தரும் கேள்வி அமையத் தேக்க, |
|
பற்பல
ஆசான் பாங்கு செல்பவர் போல், |
|
மூன்று
வகை அடுத்த தேன் தரு கொழு மலர் |
|
கொழுதிப்
பாடும் குணச் சுரும்பினங்காள்! |
|
உளத்து
வேறு அடக்கி, முகமன் கூறாது, |
5
|
வேட்கையின்
நீயிர் வீழ் நாள்-பூவினத்துள்-- |
|
கார்
உடல் பிறை எயிற்று அரக்கனைக் கொன்று |
|
வச்சிரத்
தடக்கை வரைப் பகை சுமந்த |
|
பழ
உடல் காட்டும் தீராப் பெரும் பழி, |
|
பனி
மலை பயந்த மாதுடன், தீர்த்தருள் |
10
|
பெம்மான்
வாழும் பெரு நகர்க் கூடல் |
|
ஒப்புறு
பொற்றொடிச் சிற்றிடை மடந்தைதன்-- |
|
கொலையினர்
உள்ளமும் குறைகொள இருண்டு, |
|
நானம்
நீவி, நாள்மலர் மிலைந்து, |
|
கூடி
உண்ணும் குணத்தினர் கிளைபோல் |
15
|
நீடிச்
செறிந்து, நெய்த்து உடல் குளிர்ந்த |
|
கருங்
குழற் பெரு மணம் போல |
|
ஒருங்கும்
உண்டோ? பேசுவிர் எமக்கே! |
|