41.
அவயவங்கூறல்
|
|
|
|
வீதி
குத்திய குறுந் தாட் பாரிடம் |
|
விண்
தலை உடைத்துப் பிறை வாய் வைப்ப, |
|
குணங்கினம்
துள்ள, கூளியும் கொட்ப; |
|
மத்தியந்தணன்
வரம் சொலி விடுப்பத் |
|
தில்லை
கண்ட புலிக்கால் முனிவனும், |
5
|
சூயை
கை விடப் பாஞ்சலி ஆகிய |
|
ஆயிரம்
பணாடவி அருந்தவத்து ஒருவனும், |
|
கண்ணால்
வாங்கி, நெஞ்சு அறை நிறைப்ப; |
|
திருநடம்
நவின்ற உலகு உயிர்ப் பெருமான்; |
|
(கடல்
மாக் கொன்ற தீப் படர் நெடு வேல் |
10
|
உருள்இணர்க்
கடம்பின் நெடுந் தார்க் கண்ணியன், |
|
அரி-மகள்
விரும்பிப் பாகம் செய்து, |
|
களியுடன்
நிறைந்த ஒரு பரங்குன்றமும்; |
|
பொன்அம்
தோகையும், மணி அரிச் சிலம்பும், |
|
நிரைத்
தலைச் சுடிகை நெருப்பு உமிழ் ஆரமும், |
15
|
வண்டு
கிளை முரற்றிய பாசிலைத் துளவும், |
|
மரகதம்
உடற்றிய வடிவொடு மயங்க, |
|
மரக்கால்
ஆடி அரக்கர்க் கொன்ற |
|
கவைத்
தலை மணி வேல் பிறைத் தலைக் கன்னி |
|
வடபால்
பரிந்த பலி மணக் கோட்டமும்; |
20
|
சூடகம்,
தோள்வளை, கிடந்து வில் வீச, |
|
யாவர்தம்
பகையும், யாவையின் பகையும், |
|
வளனின்
காத்து, வருவன அருளும், |
|
ஊழியும்
கணம் என, உயர் மகன் பள்ளியும்; |
|
உவா
மதி கிடக்கும் குண்டு கடல் கலக்கி, |
25
|
மருந்து
கைக் கொண்டு வானவர்க்கு ஊட்டிய, |
|
பாகப்பக்க
நெடியோன் உறையுளும்; |
|
தும்பி
உண்ணாத் தொங்கல்-தேவர் |
|
மக்களொடு
நெருங்கிய வீதிப் புறமும்; |
|
மது
நிறை பிலிற்றிய பூவொடு நெருங்கி, |
30
|
சூரரக்கன்னியர்
உடல் பனி செய்யும் |
|
கடைக்கால்
மடியும் பொங்கர்ப் பக்கமும்; |
|
ஊடி
ஆடுநர்த் திரையொடு பிணங்கித் |
|
தோழியின்
தீர்க்கும் வையைத் துழனியும்; |
|
அளவா
ஊழி மெய்யொடு சூழ்ந்து, |
35
|
நின்றுநின்று
ஓங்கி, நிலை அறம் பெருக்கும் |
|
ஆனாப்
பெரும் புகழ் அருள் நகர்க் கூடல்) |
|
பெண்
உடல் பெற்ற சென்னிஅம் பிறையோன்; |
|
பொற்றகடு
பரப்பிய கருமணி நிரை என, |
|
வண்டும்,
தேனும், மருள் கிளை முரற்றி, |
40
|
உடைந்து
உமிழ் நறவு உண்டு, உறங்கு தார்க் கொன்றையன்- |
|
திருவடி
புகழுநர் செல்வம் போலும், |
|
அண்ணாந்து
எடுத்த அணி உறு வன முலை; |
|
அவன்
கழல் சொல்லுநர் அரு வினை மானும், |
|
மலை
முலைப் பகை அட மாழ்குறும் நுசுப்பு; |
45
|
மற்று-அவன்
அசைத்த மாசுணம் பரப்பி |
|
அமைத்தது
கடுக்கும், அணிப் பாம்பு அல்குல்; |
|
ஆங்கு-அவன்
தரித்த கலைமான் கடுக்கும், |
|
இரு
குழை கிழிக்கும் அரிமதர் மலர்க் கண்-- |
|
புகர்
முகப் புழைக்கை துயில் தரு கனவில் |
50
|
முடங்குளை
கண்ட பெருந் துயர் போல, |
|
உயிரினும்
நுனித்த அவ் உருக் கொண்டு, |
|
பொன்மலை
பனிப்பினும் பனியா |
|
என்
உயிர் வாட்டிய தொடி இளங்கொடிக்கே. |
|