42.
வன்புறை எதிரழிந்து இரங்கல்
|
|
|
|
ஈன்ற
செஞ் சூழல், கவர்வழி பிழைத்த |
|
வெறிவிழிப்
பிணர் மருப்பு ஆமான் கன்றினை, |
|
மென்
நடைக் குழைசெவி பெறா, வெறுங் கரும் பிடி, |
|
கணிப்
பணைக் கவட்டும், மணற் சுனைப் புறத்தும், |
|
தழைக்
குற மங்கையர் ஐவனம் அவைக்கும் |
5
|
உரற்குழி
நிரைத்த கல் அறைப் பரப்பும், |
|
மானிட
மாக்கள் அரக்கி கைப்பட்டென, |
|
நாச்
சுவை அடுக்கும் உணவு உவவாது |
|
வைத்துவைத்து
எடுக்கும் சாரல் நாடன் |
|
அறிவும்,
பொறையும், பொருள் அறி கல்வியும், |
10
|
ஒழுக்கமும்,
குலனும், அழுக்கு அறு தவமும், |
|
இனிமையும்,
பண்பும், ஈண்டவும் நன்றே!-- |
|
வெடிவால்
பைங் கண் குறு நரியினத்தினை, |
|
ஏழ்
இடம் தோன்றி, இனன் நூற்கு இயைந்து, |
|
வீதி
போகிய வால் உளைப் புரவி |
15
|
ஆக்கிய
விஞ்சைப் பிறை முடி அந்தணன், |
|
(கொண்டோற்கு
ஏகும் குறியுடை நல் நாள், |
|
அன்னையர்
இல்லத்து, அணி மட மங்கையர் |
|
கண்டன
கவரும் காட்சி போல, |
|
வேலன்
பேசி, மறி செகுத்து, ஓம்பிய, |
20
|
காலம்
கோடா வரை வளர் பண்டம் |
|
வருவன
வாரி; வண்டினம் தொடர, |
|
கண்
கயல் விழித்து; பூத்துகில் மூடி; |
|
குறத்தியர்,
குடத்தியர்; வழி விட நடந்து; |
|
கருங்கால்
மள்ளர், உழவச் சேடியர், |
25
|
நிரை
நிரை வணங்கி மதகு எதிர்கொள்ள; |
|
தண்ணடைக்
கணவற் பண்புடன் புணரும் |
|
வையை
மா மாது மணத்துடன் சூழ்ந்த) |
|
கூடல்
பெருமான், பொன் பிறழ் திருவடி |
|
நெஞ்சு
இருத்தாத வஞ்சகர் போல, |
30
|
சலியாச்
சார்பு நிலை அற நீங்கி, |
|
அரந்தை
யுற்று, நீடநின்று இரங்கும்-- |
|
முருந்து
எயிற்று, இளம் பிறைக் கோலம் |
|
திருந்திய
திரு நுதல் துகிர் இளங்கோடியே. |
|