45.
தெளிதல் |
|
|
|
நின்று
அறி கல்வி ஒன்றிய மாந்தர் |
|
புனை
பெருங் கவியுள் தருபொருள் என்ன |
|
ஓங்கி,
புடை பரந்து, அமுதம் உள் ஊறி, |
|
காண்
குறி பெருத்து, கச்சு-அவை கடிந்தே, |
|
எழுத்து,
மணி, பொன், பூ, மலை, என யாப்புற்று |
5
|
அணி
பெரு முலைமேல் கோதையும் ஒடுங்கின; |
|
செங்கோல்
அரசன் முறைத் தொழில் போல, |
|
அமுதமும்,
கடுவும், வாளும், படைத்த |
|
மதர்
விழித் தாமரை மலர்ந்து, இமைத்து, அமர்த்தன; |
|
செய்
குறை முடிப்பவர் சென்மம் போலப் |
10
|
பதமலர்
மண்மிசைப் பற்றிப் பரந்தன; |
|
அமுதம்
பொடித்த முழுமதி என்ன |
|
முகம்
வியர்ப்பு உறுத்தின; உள்ளமும் சுழன்றன-- |
|
(இதழியும்,
தும்பையும், மதியமும், கரந்து |
|
வளை
விலை மாக்கள் வடிவு எடுத்தருளி, |
15
|
முத்தமிழ்
நான்மறை முளைத்தருள் வாக்கால் |
|
வீதி
கூறி, விதித்த முன் வரத்தால்-- |
|
கரு
முகில் விளர்ப்ப, அறல் நீர் குளிப்ப, |
|
கண்
புகை யாப்புத் திணி இருள் விடிய, |
|
உடல்தொறும்
பிணித்த பாவமும் புலர, |
20
|
கண்ட
நீள் கதுப்பினர் கை குவி பிடித்து-- |
|
குருகு
அணி செறித்த தனி முதல் நாயகன், |
|
குருகும்
அன்னமும் வால் வளைக் குப்பையை. |
|
'அண்டமும்
பார்ப்பும் ஆம்' என அணைக்கும், |
|
அலை
நீர்ப் பழன முது நகர்க்) கூடல் |
25
|
ஒப்புடைத்து
ஆய இப் பொற்றொடி மடந்தை, |
|
'அணங்கினள்
ஆம்' என நினையல், |
|
பிணங்கி
வீழ்ந்து மாழ்குறும் மனனே! |
|