46. பருவம் கண்டு பெருமகள்
புலம்பல்
|
|
|
|
பசி
மயல் பிணித்த பிள்ளை வண்டு அரற்ற, |
|
ஆசையின்
செறிந்த பொங்கர்க் குலத்தாய் |
|
அருப்புமுலைக்
கண் திறந்து உமிழ் மதுப் பால், |
|
சினை
மலர்த் துணைக் கரத்து அன்புடன் அணைத்து, |
|
தேக்கிட
அருத்தி, அலர்மலர்த் தொட்டில் |
5
|
காப்புறத்
துயிற்றும் கடி நகர்க் கூடல் |
|
அருளுடன்
நிறைந்த கரு உயிர் நாயகன் |
|
(குரவு
அரும்பு உடுத்த வால் எயிற்று அழல்விழிப் |
|
பகுவாய்ப்
பாம்பு முடங்கல் ஆக, |
|
ஆலவாய்
பொதிந்த மதிமுடித் தனி முதல்) |
10
|
சேக்கொள்
முளரி அலர்த்திய திருவடி |
|
கண்
பருகாத களவினர் உளம் போல், |
|
காருடன்
மிடைந்த குளிறு குரல் கண முகில் |
|
எம்
உயிர் அன்றி இடை கண்டோர்க்கும் |
|
நெஞ்சு
அறை பெருந் துயர் ஓவாது உடற்றக் |
15
|
கவையா
நெஞ்சமொடு பொருவினைச் சென்றோர் |
|
கண்ணினும்
கவரும் கொல்லோ-- |
|
உள்
நிறைந்து இருந்து வாழிய மனனே? |
|