48. தழை விருப்பு உரைத்தல்
 
   
அறுகும் தும்பையும் அணிந்த செஞ் சடையும்,  
கலைமான், கணிச்சியும், கட்டிய அரவமும்,  
பிறிதும் கரந்து, ஒரு கானவன் ஆகி,  
அருச்சுனன் அருந் தவம் அழித்து அமர் செய்து, அவன்  
கொடுமரத் தழும்பு திருமுடிக்கு அணிந்து,
5
பொன்னுடை ஆவம் தொலையாது சுரக்கப்  
பாசுபதக் கணை பரிந்து அருள் செய்தோன்--  
வாசவன் மகட் புணர்ந்து, மூன்று எரி வாழ,  
தென் கடல் நடுத் திடர் செய்து உறைந்து இமையவர்  
ஊர் உடைத்து உண்ணும் சூர் உடல் துணித்த
10
மணி வேற் குமரன் களிமகிழ் செய்த  
பேர் அருட் குன்றம் ஒரு பால் பொலிந்த  
அறப் பெருங்கூடல் பிறைச் சடைப் பெருமான்--  
திருவடிப் பெருந்தேன் பருகுநர் போல,  
மணமுடன் பொதுளிய வாடா மலர்த் தழை
15
ஒரு நீ விடுத்தனை; யான் அது கொடுத்தனன்;  
அவ்வழிக் கூறின்; அத் தழை வந்து  
கண் மலர் கவர்ந்தும், கைமலர் குவித்தும்,  
நெட்டுயிர்ப்பு எறிந்தும் முலைமுகம் நெருக்கியும்,  
ஊடியும், வணங்கியும், உவந்து அளி கூறியும்,
20
பொறை அழி காட்சியள் ஆகி  
நிறை அழிந்தவட்கு நீ ஆயினவே!  
உரை