49. விரவிக் கூறல்
 
 
வெயர்-அமுது அரும்பி, முயல் கண் கறுத்து,  
தண்ணம் நின்று உதவலின், நிறைமதி ஆகி;  
பொன்அம் பொகுட்டுத் தாமரை குவித்து,  
நிறை அளி புரக்கும் புது முகத்து அணங்கு!--நின்  
ஒளி வளர் நோக்கம் உற்றனை ஆயின்,
5
இன் உயிர் வாழக்கை உடலொடும் புரக்கலை:  
(ஒரு தனி அடியாற்கு உதவுதல் வேண்டி,  
மண்ணவர் காண, வட்டணை, வாள், எடுத்து,  
ஆதி சாரணை, அடர் நிலைப் பார்வை,  
வாளொடு நெருக்கல், மார்பொடு முனைத்தல்,
10
பற்றி நின்று அடர்த்தல், உள்-கையின் முறித்தல்,  
ஆனனத்து ஒட்டல், அணி மயிற் புரோகம்,  
உள் கலந்து எடுத்தல், ஒசிந்து இடம் அழைத்தல்,  
கையொடு கட்டல், கடிந்து உள் அழைத்தல், என்று  
இவ்வகைப் பிறவும், எதிர் அமர் ஏறி,
15
அவன் பகை முறித்த அருட் பெருங் கடவுள்  
கூடல் அம் கானல்) பெடையுடன் புல்லி,  
சேவல் அன்னம், திருமலர்க் கள்ளினை,  
அம் மலர் வள்ளம் ஆக நின்று உதவுதல்  
கண்டுகண்டு, ஒருவன் மாழ்கி,
20
விண்டு உயிர் சோர்ந்த குறி நிலை மயக்கே.
உரை