55. தன்னை வியந்து உரைத்தல்
 
 
விடம் கொதித்து உமிழும் படம் கெழு பகு வாய்க்  
கண்டல் முள் முளைத்த கடி எயிற்று அரவக்  
குழுவினுக்கு உடைந்து குளிர் மதி ஒதுங்க,  
தெய்வப் பிறை இருந்த திரு நுதற் பேதையைக்  
கண்டு உகண்டு அரவம் மயில் எனக் கலங்க,
5
நெடுஞ் சடைக் காட்டினை அடும் தீக்கொழுந்து என,  
'தலை ஏது' அலையா நகு தலை தயங்க,  
அணி தலைமாலையை நிறைமதித் திரள் எனப்  
புடைபுடை ஒதுங்கி அரவு வாய் பிளப்ப,  
ஒன்றினுக்கு ஒன்று கன்றிய நடுக்கொடு
10
கிடந்து ஒளி பிறழும் நெடுஞ் சடைப் பெருமான்,  
(படை நான்கு உடன்று, பஞ்சவன்-துரந்து,  
மதுரை வவ்விய கருநட வேந்தன்  
அருகர்ச் சார்ந்து நின்று அருட்பணி அடைப்ப,  
மற்று-அவன்தன்னை நெடுந்துயில் வருத்தி;
15
இறையவன் குலத்து முறையர் இன்மையினால்,  
கருதி, தோரை கல்லொடு பிறங்க  
மெய் அணி அளறாக் கைம் முழம் தேய்த்த  
பேர் அன்பு உருவப் பசுக் காவலனை,  
உலகினில், தமது முக் குறி ஆக,
20
மணி முடி வேணியும், உருத்திரக் கலனும்,  
நிலவு உமிழ் புண்ணியப் பால் நிறச் சாந்தமும்,  
அணிவித்து, அருள் கொடுத்து, அரசன் ஆக்கி,  
அடுமால் அகற்றி, நெடு நாள் புரக்க  
வையகம் அளித்த மணி ஒளிக் கடவுள்)
25
நெடு மதிற் கூடல் விரிபுனல் வையையுள்  
பிடி குளிசெய்யும் களிறு-அது போல,  
மயில் எனும் சாயல் ஒரு மதி நுதலியை  
மருமமும், தோளினும், வரை அறப் புல்லி  
ஆட்டுறும் ஊரன் அன்பு கொள் நலத்தினை,
30
பொன்னுலகு உண்டவர் மண் உலகு இன்பம்  
தலைநடுக் குற்ற தன்மை போல,  
ஒன்று அற அகற்றி உடன் கலந்திலனேல்--  
அன்ன ஊரனை எம் இல் கொடுத்து,  
தேரினும், காலினும், அடிக்கடி கண்டு,
35
நெட்டுயிர்ப்பு எறிந்து, நெடுங் கண் நீர் உகுத்துப்  
பின்னும் தழுவ உன்னும் அவ் ஒருத்தி-  
அவளே ஆகுவள், யானே--தவல் அருங்  
கரு நீர்க் குண்டு அகழ் உடுத்த  
பெரு நீர் ஆழித் தொல் உலகுழிக்கே.
40
உரை