64. வழிப்படுத்து உரைத்தல்
|
|
|
|
செங்கோல்-திருவுடன்
தெளிந்து அறம் பெருக்கிய |
|
மறு
புல வேந்தன் உறு படை எதிர்ந்த |
|
கொடுங்கோல்-கொற்றவன்
நெடும் படை அனைத்தும் |
|
சேர
இறந்த திருத்தகு நாளில், |
|
அவன்
பழி நாட்டு நடுங்கு நற் குடிகள் |
5
|
கண்ணொடு
கண்ணில் கழறிய போல, |
|
ஒருவரின்
ஒருவர் உள்ளத்து அடக்கித் |
|
தோன்றா
நகையுடன், துண்டமும் சுட்டி, |
|
அம்பல்
தூற்றும் இவ் ஊர் அடக்கி, |
|
கடல்
கிடந்தன்ன நிரைநிரை ஆய- |
10
|
வெள்ளமும்,
மற்றவர் கள்ளமும் கடந்து, |
|
தாயவர்
மயங்கும் தனித் துயர் நிறுத்தி, |
|
பறவை
மக்களைப் பரியுநர்க் கொடுத்து, |
|
கிடைப்பல்
யானே நும்மை: (தழைத்து எழு |
|
தாளியும்
கொன்றையும் தழைத்தலின் முல்லையும், |
15
|
பாந்தளும்
தரக்கும் பயில்தலின் குறிஞ்சியும், |
|
முடைத்தலை,
எரி, பொடி, உடைமையின் பாலையும், |
|
ஆமையும்
சலமும் மேவலின் மருதமும், |
|
கடுவும்
சங்கும் ஒளிர்தலின் நெய்தலும், |
|
ஆகத்
தனது பேர் அருள் மேனியில்,) |
20
|
திணை
ஐந்து அமைத்த இணைஇலி நாயகன் |
|
(வரும்
தொழில் அனைத்தும் வளர் பெரும் பகலே, |
|
எரி
விரிந்தன்ன இதழ்ப் பல் தாமரை |
|
அருள்
முகத் திருவொடு மலர்முகம் குவிய, |
|
மரகதப்
பாசடை இடை இடை நாப்பண் |
25
|
நீலமும்
மணியும் நிரை கிடந்தென்ன |
|
வண்டொடு
குமுதம் மலர்ந்து இதழ் விரிப்ப, |
|
குருகும்
சேவலும் பார்ப்புடன் வெருவிப் |
|
பாசடைக்
குடம்பையூடு கண்படுப்ப, |
|
துணையுடன்
சகோரம் களியுடன் பெயர்ந்து |
30
|
விடும்
அமுது அருந்த விண்ணகத்து அணக்க, |
|
சுரிவளைச்
சாத்து நிறைமதி தவழும்) |
|
எறிதிரைப்
பழனக் கூடல் |
|
செறிக
இன்று அம்ம, திருவொடும் பொலிந்தே! |
|