70.
தேறாது புலம்பல்
|
|
|
|
புட்பெயர்க்
குன்றமும், எழு வகைப் பொருப்பும், |
|
மேல்
கடல் கவிழ் முகப் பொரி உடல் மாவும், |
|
நெடுங்
கடல் பரப்பும், அடும் தொழில் அரக்கரும், |
|
என்
உளத்து இருளும், இடைபுகுந்து உடைத்த |
|
மந்திரத்
திரு வேல் மறம் கெழு மயிலோன், |
5
|
குஞ்சரக்
கொடியொடும் வள்ளிஅம் கொழுந்தொடும் |
|
கூறாக்
கற்பம் குறித்து நிலை செய்த, |
|
புண்ணியம்
குமிழ்த்த குன்றுடைக் கூடல் |
|
நிறைந்து
உறை கறை மிடற்று அறம் கெழு பெருமான் |
|
பேர்
அருள் விளைத்த மாதவர் போல, |
10
|
முன்
ஒரு நாளில், உடல் உயிர் நீ என |
|
உள்ளம்
கரிவைத்து, உரை செய்த ஊரர் |
|
தம்
மொழி திரிந்து தவறு நின்றுளவேல், |
|
அவர்
குறை அன்றால்; ஒருவன் படைத்த |
|
காலக்
குறிகொல்? அன்றியும், முன்னைத் |
15
|
தியங்கு
உடல் ஈட்டிய தரும் கடு வினையால், |
|
காலக்
குறியை, மனம் தடுமாறிப் |
|
பின்
முன் குறித்த நம் பெரு மதி அழகால், |
|
நனவிடை
நவிற்றிக் கனவிடைக் கண்ட |
|
உள்
எழு கலக்கத்துடன் மயங்கினமால்; |
20
|
குறித்த
இவ் இடைநிலை ஒன்றே-- |
|
மறிக்
குலத்து உழையின் வழி நோக்கினளே! |
|