72.
வாய்மை கூறி வருத்தம் தணித்தல்
|
|
|
|
திருமலர்
இருந்த முதியவன் போல |
|
நான்முகம்
கொண்டு, அறி நன்னர் நெஞ்சு இருந்து, |
|
வேற்றருள்
பிறவி தோற்றுவித்து எடுத்து; |
|
நிலம்
இரண்டு அளந்த நெடுமுகில் மான, |
|
அரக்கர்தம்
கூட்டம் தொலைத்து, நெய் உண்டு; |
5
|
களிற்று
உரி புனைந்த கண்ணுதல் கடுப்ப |
|
அழல்
எடுத்து ஒன்னலர்புரம் எரி உட்டி; |
|
இனைய,
எவ் உலகும் தொழுது எழு திரு வேல், |
|
சரவணத்து
உதித்த அறுமுகப் புதல்வன்-- |
|
பரங்குன்று
உடுத்த பயம் கெழு கூடல் |
10
|
பெரு
நகர் நிறைந்த சிறு பிறைச் சென்னியன்; |
|
மால்
அயன் தேடி, மறை அறைந்து, அறியாத் |
|
தன்
உரு ஒன்றில் அருள் உரு இருத்திய |
|
ஆதி
நாயகன்; அகல் மலர்க் கழல் இணை |
|
நண்ணலர்
கிளைபோல் தன் மனம் திரிந்து, நம் |
15
|
துறைவன்
தணக்க, அறிகிலம் யாமே-- |
|
பிணர்
முடத் தாழை விரிமலர் குருகு என, |
|
நெடுங்
கழிக் குறுங் கயல், நெய்தலுள் மறைந்தும்; |
|
புன்னைஅம்
பொதும்பர்க் குழைமுகம் குழைமுகம் |
|
கருந்
திரை சுமந்து எறி வெண் தரளத்தினை |
20
|
அரும்பு
என, சுரும்பினம், அலர நின்று இசைத்தும்; |
|
கலம்
சுமந்து இறக்கும் கரி இனம் பொருப்பு என, |
|
பருகிய
முகிற்குலம், படிந்து கண்படுத்தும்; |
|
பவள
நன் கவைக் கொடி வடவையின் கொழுந்து என, |
|
சுரிவளை
குளிக்குநர் கலனிடைச் செறிந்தும்; |
25
|
வெள்
இற உண்ண விழைந்து புகு குருகினம், |
|
கருங்
கழி நெய்தலைக் காவல் செய் கண் என, |
|
அரவு
எயிற்று அணி முட் கைதையுள் அடங்கியும்; |
|
விண்
தொட எழுந்து விழுதிரைக் குழுவினைக் |
|
கடல்
வயிற்று அடங்கிய மலையினம் வரவு என, |
30
|
குழி
மணற் கேணியுள் கொம்பினர் படிந்தும்; |
|
முயங்கிய
உள்ளம் போகி, |
|
மயங்கிய
துறையினம் ஒருங்குழி வளர்ந்தே. |
|