81.
வறும் புனம் கண்டு வருந்தல்
|
|
|
|
உள்
இருந்து எழுந்து புறம்பு நின்று எரியும் |
|
அளவாத்
திரு மணி அளித்த லானும், |
|
கொலை
முதிர் கடமான் முதிர்முகம் படர்ந்து |
|
கொழுஞ்
சினை மிடைந்து களிரொடு பொதுளிய |
|
நெடு
மரத்து இளங்கா நிலைத்தலானும், |
5
|
பாசடை
உம்பர் நெடுஞ் சுனை விரிந்த |
|
பேர்
இதழ்த் தாமரை பெருகலானும், |
|
நெடு
விசும்பு அணவும் பெரு மதி தாங்கி, |
|
உடையா
அமுதம் உறைத லானும், |
|
இளமையும்,
தொங்கலும், இன்பமும் ஒருகால் |
10
|
வாடாத்
தேவர்கள் மணத்த லானும், |
|
நூறுடை
மகத்தில் பேறு கொண்டிருந்த |
|
புரந்தரன்
போலும்--பொன் எயில் எறிந்த |
|
மணி
வேற் குமரன்--திரு வளர் குன்றம் |
|
பேர்
அணி உடுத்த பெரு நகர்க் கூடல் |
15
|
கோயில்
கொண்டிருந்த குணப் பெருங் குன்றம், |
|
(அருந்
தவக் கண்ணினோடு இருந்த மா முனிபால், |
|
பேர்
இருள் மாயைப்பெண், மகவு இரக்க, |
|
உவர்
முதல் கிடந்த சுவை ஏழ் அமைத்துக் |
|
கொடுத்த
மெய்ப் பிண்டம் குறியுடன் தோன்றிய |
20
|
ஏழு
நீர்ச் சகரர்கள், ஏழ் அணி நின்று, |
|
மண்
புக மூழ்கிய வான் பரி பிணிக்க, |
|
பல்
முக விளக்கின் பரிதியில் தோட்டிய |
|
வேலைக்
குண்டு அகழ் வயிறு அலைத்து எழுந்த |
|
பெருங்
கார்க் கருங் கடு அரும்பிய மிடற்றோன்; |
25
|
எறிந்து
வீழ் அருவியும், எரிமணி ஈட்டமும், |
|
உள்ளுதோறு
உள்ளுதோறு உள்நா அமுது உறைக்கம் |
|
திரு
முத்தமிழும், பெருகு தென் மலயத்து |
|
ஆரப்
பொதும்பர் அடை குளிர் சாரல், |
|
சுரும்புடன்
விரிந்த துணை மலர்க் கொடியே! |
30
|
விண்
விரித்து ஒடுக்கும் இரவி வெண் கவிகைக்கு |
|
இட்டு
உறை காம்பு என விட்டு எழு காம்பே! |
|
மரகதம்
சினைத்த சிறை மயிற்குலமே! |
|
நீலப்
போதும் பேதையும் விழித்த |
|
பொறி
உடல் உழையே! எறிபரல் மணியே! |
35
|
பாசிழைப்
பட்டு நூல் கழி பரப்பிய |
|
கிளைவாய்க்
கிளைத்த வளைவாய்க் கிளியே! |
|
மைந்தர்கண்
சென்று மாதர் உள் தழைத்த |
|
பொழி
மதுப் புது மலர்ப் போக்குடைச் சுரும்பே! |
|
வெறி
முதிர் செம் மலர் முறிமுகம் கொடுக்கும், |
40
|
சந்தனப்
பொதும்பர்த் தழை சினைப் பொழிலே! |
|
கொள்ளை
அம் சுகமும் குருவியும் கடிய |
|
இரு
கால் கவணிற்கு எறி மணி சுமந்த |
|
நெடுங்
கால் குற்றுழி நிழல் வைப்பு இதணே! |
|
நெருநல்
கண்ட எற்கு உதவுழி இன்பம் |
45
|
இற்றையின்
கரந்த இருள் மனம் என்னை? |
|
இவண்
நிற்க வைத்த ஏலாக் கடுங்கண் |
|
கொடுத்து
உண்டவர் பின் கரந்தமை கடுக்கும்; |
|
ஈங்கு
இவை கிடக்க: என் நிழல் இரும் புனத்து |
|
இருந்து
ஒளிர் அருந் தேன் இலதால்; நீரும், |
50
|
'நின்
புனம் அல்ல' என்று என் புலம் வெளிப்பட |
|
அறைதல்
வேண்டும்: அப் புனம் நீரேல், |
|
முன்னம்
கண்டவன் அன்று என்று |
|
உன்னா,
உதவுதல் உயர்ந்தோர் கடனே. |
|