83.
கண் துயிலாது மொழிதல்
|
|
|
|
கடு
வினை அங்குரம் காட்டி, உள் அழுக்காறு |
|
எண்
திசைச் சாகை கொண்டு, இருள் மனம் பொதுளி, |
|
கொடுங்
கொலை வடுத்து, கடும் பழிச் சடை அலைந்து, |
|
இரண்டு
ஐஞ்ஞூறு திரண்ட அக் காவதம் |
|
சுற்றுடல்
பெற்று, துணைப் பதினாயிரம் |
5
|
மற்று
அதின் நீண்டு மணி உடல் போகி, |
|
ஐம்பது-நூறுடன்
அகன்று சுற்று ஒழுக்கி, |
|
பெருங்
கவிழ் இணர் தந்து அவை கீழ்க் குலவிய |
|
அடல்
மாக் கொன்ற நெடு வேற் குளவன், |
|
குன்றவர்
வள்ளிஅம் கொடியொடு துவக்கிப் |
10
|
பன்னிரு
கண் விரித்து, என் வினை துரக்கும் |
|
அருட்
பரங்குன்றம் உடுத்து அணி கூடல் |
|
குறும்
பிறை முடித்த நெடுஞ் சடை ஒருத்தனைத் |
|
தெய்வம்
கொள்ளார் சிந்தை-அது என்னக் |
|
கிடந்த
வல் இரவில், கிளர்மழை கான்ற |
15
|
அவலும்,
உம்பரும், அடக்குபுனல் ஒருவி, |
|
தே
அருள் கல்லார் சிந்தையின் புரண்ட |
|
கவலையும்
காற் குறி கண்டு, பொழில் துள்ளும் |
|
இமையாச்
சூரும் பல கண்டு, ஒருங்காத் |
|
துடியின்
கண்ணும் துஞ்சாக் கண்ணினர் |
20
|
கடியும்
துனைவில் கையகன்று, எரிமணித் |
|
தொகை
இருள் கொல்லும் முன்றில் பக்கத்து, |
|
இணை
முகப் பறை அறை கடிப்புடைத் தோகை |
|
வயிற்றுள்
அடக்கி வளை கிடை கிடக்கும், |
|
முழக்கி
மெய் கவரும் முகக் கொலை ஞாளி |
25
|
அதிர்
குரைப்பு அடக்கி, இற்புறத்து அணைந்த நம் |
|
பூம்
புனல் ஊரனை, பொருந்தா நெடுங் கண் |
|
அன்னையின்
போக்கிய அரும் பெருந் தவறு-- |
|
மாலையும்
கண்ணும் மேனியும் உள்ளமும் |
|
மயங்காத்
தேவர், மருந்து வாய்மடுக்க |
30
|
முகம்
கவிழ் வேலையில், அறம் குடிபோகிய |
|
மாய
வல் அரக்கர், தட்டிக் |
|
காய்
பார் உகுத்த விதி ஒத்தனவே. |
|