84. தலைவன் வரவு உரைத்தல்
 
 
நாற் கடல் வளைத்த நானிலத்து உயிரினை,  
ஐந்தருக் கடவுள், அவன் புலத்தினரை,  
நடந்து புக்கு உண்டும், பறந்து புக்கு அயின்றும்,  
முத் தொழில் தேவரும் முருங்க உள் உறுத்தும்,  
நோன் தலைக் கொடுஞ் சூர்க் களவு உயிர் நுகர்ந்த
5
தழல் வேற் குமரன் சால் பரங்குன்றம்,  
மணியொடும் பொன்னொடும் மார்பு அணி அணைத்த  
பெருந் திருக் கூடல் அருந் தவர் பெருமான்  
இரு சரண் அகலா ஒருமையர் உளம் என--  
சுடர் விளக்கு எடுமின்! கோதைகள் தூக்குமின்!
10
பூவும் பொரியும் தூவுமின்! தொழுமின்!  
சுண்ணமும் தாதும் துனைத்துகள் தூற்றுமின்!--  
கரும் பெயல் குளிறினம் களி மயில் என்னக்  
கிடந்து அயர்வாட்கு, முன் கிளர்வினைச் சென்றோர்  
உடல் உயிர் தழைக்கும் அருள் வரவு உணர்த்த,
15
முல்லைஅம் படர் கொடி நீங்கி, பிடவச்  
சொரி அலர் தள்ளி, துணர்ப் பொலம் கடுக்கைக்  
கிடைதரவு ஒருவி, களவு அலர் கிடத்தி,  
பூவைஅம் புடைமலர் போக்கி, அரக்கு அடுத்துக்  
கழுவிய திரு மணி கால் பெற்றென்ன,
20
நற் பெருந் தூது காட்டும்  
அற்புதக் கோபத் திருவரவு-அதற்கே.
உரை