86.
ஐயம் உற்று ஓதல்
|
|
|
|
பாசடைக்
கருங் கழி படர் மணல் உலகமும் |
|
எழு
மலை பொடித்தவர்க்கு இசைத்தல் வேண்டி |
|
வரை
உலகு அனைத்தும் வருவது போல, |
|
திரை
நிரை திரைத்துக் கரை கரைக் கொல்லும் |
|
வையை
நீர் விழவு புகுந்தனம் என ஒரு |
5
|
பொய்யினள்
அன்றி மெய்யினை நீயும்; |
|
பொலம்பூண்
பெயர்ந்து உறை பூணை; அருள்தரும் |
|
மலர்ச்சி
நீங்கிக் கொடுங்கோல் வேந்து எனச் |
|
சேக்கொள்
கண்ணை; செம்மொழிப் பெயர்தந்து |
|
ஒன்றுடன்
நில்லா மொழியை; மதுத்த |
10
|
முதிரா
நாள் செய் முண்டகம் மலர்ந்து |
|
கவிழ்ந்த
முகத்தை; எம் கண் மனம் தோன்ற |
|
அரும்பிய
நகையை அன்றே? நின் கெழு |
|
என்கண்
கண்ட இவ் இடை, என் உளம் |
|
மன்னி
நின்று அடங்காக் குடுமிஅம் பெருந்தழல் |
15
|
பசுங்
கடல் வளைந்து பருகக் கொதித்த |
|
தோற்றமும்
கடந்தது என்றால், (ஆற்றல் செய் |
|
விண்ணகம்
புடைத்து, நெடு வரை கரக்கும் |
|
கொடுஞ்
சூர்க் கொன்ற கூர் இலை நெடு வேல் |
|
குன்றக்
குறவர் கொம்பினுக்கு இனியோன், |
20
|
குருகு
ஒலி ஓவாப் பனி மலர் வாவி |
|
வயிறு
வாய்த்த குழவிஅம் கிழவோன், |
|
வாழ்
பரங்குன்று எனும், மணி அணி பூண்ட |
|
நான்மறை
புகழும் கூடல் எம்பெருமான் |
|
வான்முதல்
ஈன்ற மலைகள்தன்னொடும், |
25
|
முழுது
உணர் ஞானம், எல்லாம் உடைமை, |
|
முழுது
அனுக்கிரகம், கெழு பரம், அநாதி, |
|
பாசம்
இலாமை, மாசு அறு நிட்களம், |
|
அவிகாரக்
குறி, ஆகிய தன் குணம் |
|
எட்டும்
தரித்து; விட்டு, அறு குற்றமும்; |
30
|
அருச்சனை,
வணக்கம், பர உயிர்க்கு அன்பு அகம், |
|
பேர்
அருள் திரு நூல், பெருந் துறவு, எங்கும் |
|
நிறை
பொருள் அழுந்தல், அருளினர்க் கூட்டம், |
|
இருள்
பவம் நடுங்கல், எனும் குணம் எட்டும், |
|
தமக்கும்
படைத்த விதிப் பேற்று அடியவர் |
35
|
நிலை
அருள் கற்பு என,) நெடுங் கற்பு உடையோள் |
|
முன்
உறின், அவள் மனம் ஆங்கே |
|
நன்னரில்
கொண்டு குளிரும் பெறுமே? |
|