89.
பாணனொடு வெகுளுதல்
|
|
|
|
உளம்
நகைத்து உட்க ஊக்கும் ஓர் விருந்தினை, |
|
குவளை
வடி பூத்த கண் தவள வாள் நகைக் |
|
குறுந்
தொடி மடந்தை நம் தோழியும் கேண்மோ! |
|
கவிர்
அலர் பூத்த செஞ் செம்மை வில் குடுமி, |
|
மஞ்சு
அடை கிளைத்த வரிக் குறு முள்-தாள் |
5
|
கூர்அரிவாளின்,
தோகைஅம் சேவற் |
|
கொடியோன்
குன்றம் புடைவளர் கூடல், |
|
கணிச்சி
அம் கைத்தலத்து அருட் பெருங் காரணன், |
|
உலகு
உயிர் மகவுடைப் பசுங் கொடிக்கு ஒருபால் |
|
பகுத்து,
உயிர்க்கு இன்பம் தொகுத்த மெய்த் துறவினன், |
10
|
முளரி
நீர்ப் புகுத்திய பதமலர்த் தாள்-துணை |
|
மணி
முடி சுமந்த நம் வயல் அணி ஊரர் பின், |
|
வளர்
மறித் தகர் எனத் திரிதரும் பாண்மகன் |
|
எனக்
குறித்து அறிகிலம் யாமே: எமது |
|
மணி
ஒளிர் முன்றில் ஒரு புடை நிலை நின்று, |
15
|
அன்ன
ஊரர் புல்லமும், விழுக் குடிக்கு |
|
அடாஅக்
கிளவியும், படாக் கரும் புகழும், |
|
எங்கையர்
புலவியில் இகழ்ச்சியும், நம்பால் |
|
தனது
புன் புகழ் மொழி நீளத் தந்தும், |
|
ஒன்று
பத்து ஆயிரம் நன்று பெறப் புனைந்து |
20
|
கட்டிய
பொய் பாப் புனைந்து நிற்கு உறுத்தின்-- |
|
பேர்
எழிற் சகரர் ஏழ் எனப் பறித்த |
|
முரிதிரை
வடிக்கும் பரிதிஅம் தோழம் |
|
காட்டையுள்
இம்பரும் காணத் |
|
தோட்டி
நின்று அளக்கும் தொன்மை-அது பெறுமே. |
25
|