91. தோழிக்கு உரைத்தல்
 
   
வாய் வலம் கொண்ட வயிற்று எழு தழற்கு  
ஆற்றாது அலந்து, காற்று எனக் கொட்புற்று,  
உடைதிரை அருவி ஒளி மணி காலும்  
சேயோன் குன்றகத் திருப் பெறு கூடல்,  
கொடுஞ் சுடர் கிளைத்த நெடுஞ் சடைப் புயங்கன்
5
பவளம் தழைத்த பதமலர் சுமந்த நம்  
பொருபுனல் ஊரனை, பொது என அமைத்த  
அக் கடிகுடி மனையவர் மனை புகுத்தி,  
அறுவாய் நிறைந்த மதிப்புறந்தோ என,  
சுரை தலை கிடைத்த இசை உளர் தண்டு எடுத்து,
10
அளிக் கார்ப் பாடும் குரல் நீர் வறந்த  
மலைப் புள் போல நிலைக் குரல் அணந்து, ஆங்கு,  
உணவு உளம் கருதி ஒளி இசை பாட,  
முள்-தாள் மறுத்த முண்டகம் தலை அமைத்து  
ஒரு பால் அணைந்த இவ் விரிமதிப் பாணற்கு,
15
அடுத்தன உதவுழி வேண்டும்--  
கடுத் திகழ் கண்ணி! அக் கல்லை இக் கணமே.
உரை