92. பாங்கி அன்னத்தோடு அழுங்கல்
 
   
வெறி மறி மடைக்குரல் தோல் காய்த்தென்ன  
இருக்கினும் இறக்கினும் உதவாத் தேவர்தம்  
பொய் வழிக் கதியகம் மெய் எனப் புகாத  
விழியுடைத் தொண்டர்-குழு முடி தேய்ப்ப,  
தளிர்த்துச் சிவந்த தண்டைஅம் துணைத் தாள்
5
சேயோன் பரங்குன்று, இழை எனச் செறித்து,  
தமிழ்க்கலை மாலை சூடி, தாவாப்  
புகழ்க்கலை உடுத்து, புண்ணியக் கணவர்  
பல் நெறிவளனின் பூட்சியின் புல்லும்  
தொல் நிலைக் கூடல், துடிக் கரத்து ஒருவனை,
10
அன்பு உளத்து அடக்கி, இன்பம் உண்ணார் என,  
சேவல் மண்டலித்துச் சினை அடைகிடக்கும்  
கைதை வெண் குருகு எழ மொய்திரை உகளும்  
உளைகடற் சேர்ப்பர், அளி விடத் தணப்ப,  
நீலமும், கருங் கொடி அடம்பும், சங்கமும்;
15
கண்ணிற்கு, இடையில், களத்தில், கழிதந்து  
அலர்ந்தும், உலர்ந்தும், உடைந்தும், அனுங்கலின்,  
வட்குடை மையல் அகற்றி, இன்பு ஒரு கால்  
கூறவும் பெறுமே! ஆறு-அது நிற்க--  
இவள் நடைபெற்றும், இவட் பயின்று இரங்கியும்,
20
ஓர்உழி வளர்ந்த நீர இவ் அன்னம்  
அன்று என, தடையாக் கேண்மை  
குன்றும், அச் சூளினர் தம்மினும் கொடிதே!  
உரை