|
|
செய்யுள்
47
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
கருங்குழற்
செவ்வாய்ச் சிற்றிடை மடந்தைக்
குளத்துய ரீந்து கண்டுயில் வாங்கிய
வானா வின்ன லழிபடக் காண்பான்
விரிபொரி சிந்தி மணமலர் பரப்பித்
தெய்வக் குலப்புகை விண்ணோடும் விம்ம |
10
|
|
விருநாற்
றிசையு முண்பலி தூவி
நானூன் மாக்க ணணிக்குறி சொற்றுப்
பக்கஞ் சூழ்ந்த நெடுநகர் முன்றிற்
கோடகழ்ந் தெடுத்த மறிநீர்க் காலும்
வெண்கார் பெய்யு நாள்குறித் துழுநருஞ் |
15
|
|
சூனிறைந்
துளையுஞ் சுரிவளைச் சாற்று
மினக்கய லுண்ணுங் களிக்குரு கினமும்
வரைப்பறை யரிந்த வாசவற் றொழுது
நிரைநிரை விளம்பி வழிமுடி நடுநரு
நாறுகழி துற்ற சகடீர்க் குநருந் |
20
|
|
தாமரை
பாடு மறுகாற் கிளியு
முறைத்தெறி கம்பலை யும்பரைத் தாவி
முடித்தலை முடிர்ப்ப வடிக்கடி கொடுக்கு மள்ளற்
பழனத் தணிநீர்க் கூட
னீங்கா துறையு நிமிர்சடைப் பெருமா |
25
|
|
னுரகன்வாய்
கீண்ட மாதவன் போல
மண்ணகழ்ந் தெடுத்து வருபுனல் வையைக்
கூலஞ் சுமக்கக் கொட்டா ளாகி
நரைத்தலை முதியோ ளிடித்தடு கூலிகொண்
டடைப்பது போல வுடைப்பது நோக்கிக் |
30
|
|
கோமக
னடிக்க வவனடி வாங்கி
யெவ்வுயி ரெவ்வுல கெத்துறைக் கெல்லா
மவ்வடி கொடுத்த வருணிறை நாயகன்
றிருமிடற் றிருளெனச் செறிதரு மாமுகி
லெனதுகண் கடந்து நீங்கித் |
|
|
துனைவுடன்
செல்ல லொருங்குபு புரிந்தே. |
(உரை)
கைகோள் : கற்பு. தலைவன் கூற்று
துறை: முகிலொடு
கூறல்.
(இ-ம்)
இதற்கு, "கரணத்தி னமைந்து முடிந்த காலை" (தொல். கற்பி.) எனவரும் நூற்பாவின் கண்
'மீட்டுவரவு ஆய்ந்த வகையின் கண்ணும்' என்னும் விதிகொள்க.
1
- 3: கருங்குழல் . . . . . . . . . . காண்பாள்
(இ-ள்)
கருங்குழல் செவ்வாய் சிறுஇடை மடந்தைக்குகரிய கூந்தலினையும் சிவந்த வாயினையும் நுண்ணிடையையுமுடைய
தலைவிக்கு; உளத்துயர் ஈந்து- நெஞ்சத்தில் துன்பத்தைக் கொடுத்து; கண்துயில் வாங்கிய
ஆனா இன்னல் அழிபடக் காண்பான் - கண் உறங்குதலை நீக்கிய ஒழியாத துன்பத்தால் அவள்
வருந்தலைக் காணும் பொருட்டு என்க.
(வி-ம்.)
கருங்குழற் செவ்வாய் என்புழிச் செய்யுளின்ப முணர்க. ஒன்றைக் கொடுத்துப் பண்டமாற்றாக
ஒன்றை வாங்கினாற் போல உளத்துயர் ஈந்து கண்துயில் வாங்கிய என்றான். இன்னல் -
துன்பம். அழிபட : ஒருசொல். அழிய என்றவாறு.
4
- 7: விரிபொரி . . . . . . . . . . சொற்று
(இ-ள்)
விரிபொரி சிந்தி மணமலர் பரப்பி - வாய்விரிந்த பொரியைத் தெளித்து நறுமணங்
கமழும் மலர்களைப் பரப்பி; தெய்வக் குலப்புகை - தேவகோட்டங்களில் புகைக்குங் குங்கி லியப் புகை; விண்ணொடும்
விம்ம - வானமெங்கும் பரவா நிற்ப; இருநாள் திசையும் உண்பலி தூவி - எட்டுத் திசைகளினும்
சோற்றுப் பலியினை இறைத்து; நால்நூல் மாக்கள் - நாலு கின்ற பூணூலையுடைய பார்ப்பனர்;
நணி குறிசொற்று - வந்து குறிகளைச் சொல்லியதால் என்க.
(வி-ம்.)
விரிபொரி: வினைத்தொகை. தெய்வகுலம் - தேவ கோட்டம். உண்பலி- தெய்வம் உண்ணும்
பலி; என்றது சோற்றுப் பலியை. நால்நூல்; வினைத்தொகை. நால்நூல் மாக்கள் என்றது
இகழ்ச்சி. வேதம் ஒதாமல் பூணூல் மட்டும் தாங்கித் திரிகின்ற பார்ப்பனர் என்றவாறு.
நண்ணி - நணி என இடைகுறைந்து நின்றது. சொற்று - சொல்லி. இதனைச் செயவெனெச்சமாக்கி
ஏதுவாக்குக.
8
- 12: பக்கம் . . . . . . . . . . குருகினமும்
(இ-ள்)
நெடுநகர் முன்றில் - நெடிய நகரத்தினது முற்றத்தின்; பக்கம் சூழ்ந்த- பக்கங்களிலே
சூழ்ந்துள்ள; கோடு அகழ்ந்து எடுத்த மறி நீர்க்காலும் - கரையை அகழ்ந்து எடுத்த மறிக்கப்பட்ட
நீரோடும் வாய்க்காலும்; வெள்கார்ப் பெய்யும் நாள் குறித்து - வெள்ளிய கார்நெல்லை
விதைக்கும் நாளைக் குறித்துக்கொண்டு; உழுநரும்- உழுகின்றவர்களும்; சூல் நிறைந்து உளையும்
சுரிவளை சாற்றும்-கருமுதிர்ந்து வருந்தா நின்ற சுரிந்த முகமுடைய சங்குகளின் ஆரவாரமும்;
இனம்கயல் உண்ணும் களிகுருகு இனமும் - கூட்டமான கயல்மீனைத் தினன்ாநின்ற களிப்பினையுடைய
பறவைக் கூட்டங்களும் என்க.
(வி-ம்.)
நகர் - ஈண்டு மதுரை. கோடு - கரை. மறிநீர்: வினைத்தொகை. நீர்க்கால் - வாய்க்கால்.
கார் - ஒருவகை நெல். உளைதல் - வருந்துதல். வளை- சங்கு. குருகு - பறவை. நாரை எனினுமாம்.
13
- 15: வரை . . . . . . . . . . . . . ஈர்க்குநரும்
(இ-ள்)
வரை பறை அரிந்த வாசவன் தொழுது - மலைகளின் சிறகுகளை அரிந்த இந்திரனை வணங்கி;
நிரைநிரை விளம்பி - வரிசை வரிசையாக நின்று குரவைபாடி; வழிமுடி நடுநரும் - முறையே
நாற்றுமுடியினை அவிழ்த்து நடுகின்ற உழத்தியரும்; நாறுகழிதுற்ற சகடு - நாற்று முடிகளை
நிரம்பப் பெய்த வண்டிகளை; ஈர்க்குநரும் - இழுத்துச் செல்கின்றவர்களும் என்க. (வி
- எம்.) பறை - சிறகு. வாசவன் - இநதிரன். இவன் மருத நிலத்துத் தெய்வமாதலால் நாற்று
நடுகின்ற உழத்தியர் இவனைத் தொழுது நடுவாராயினர் என்க. இவன் மருதநிலத் தெய்வமாதலை
'வேந்தன் மேய தீம்புன லுலகமும்' (தொல். அகத். ரு) எனவரும் சொல்காப்பியத்தானும்
உணர்க. நாறு - நாற்று. கழி : மிகுதி குறித்த உரிச்சொல். துற்றுதல் - நிறைத்தல்.
சகடு - வண்டி.
16 - 20: தாமரை . . . . . . . . . . பொருமான்
(இ-ள்)
தாமரை பாடும் அறுகால் கிளியும் - தாமரை மலரிலிருந்து இசைபாடா நின்ற வண்டுகளும்;
உறைத்து - அதிர்த்து; ஏறி கம்பலை - ஒலிக்கின்ற பேரொலியானது; உம்பரைத் தாவி
முடித்தலை திமிர்ப்ப அடிக்கடி கொடுக்கும்- தேவர்களை அடைந்து அவர்களுடைய முடியணிந்த
தலைகளைத் திமிர்த்துப் போம்படி இடைவிடாமற் செய்கின்ற; அள்ளல் அணிநீர் பழனத்துக்
கூடல் - உழுத சோற்றினையும் அழகிய நீரையுமுடைய கழனிகளாற் சூழப்பட்ட மதுரையின்கண்;
நீங்காது உறையும் நிமிர்சடை பெருமான் - ஒருபொழுதும் நீங்காதே எழுந்தருளியிருக்கின்ற
நிமிர்ந்த சடையையுடைய சொக்கப் பெருமானும் என்க.
(வி-ம்.)
அறுகாற் கிளி என்றது வண்டுகளை. கம்பலை - பேரெலலி, உம்பர்- தேவர். திமிர்த்தல்
- திமிரேறச் செய்தல். அள்ளல் - சேறு. அணிபழனம் நீர்ப்பழனம் எனத் தனித்தனி
கொள்க. நிமிர்சடை: வினைத்தொகை. நகர்முன்றில் சூழ்ந்த வாய்க்காலும் உழுநரும்
வளைச்சாற்றும் குருகினமும் முடிநடுநரும் சகடீர்ப்போரும் அறுகாற் கிளியும் எறிகம்பலை
என இயைக்க.
21
- 25: உரகன் . . . . . . . . . . நோக்கி
(இ-ள்)
உரன் வாய்ண்ட மாதவன்போல-பாம்பினது வாயைக்கிழித்த திருமால் போல; மண் அகழ்ந்து
எடுத்துவருபுனல் - மண்ணைத் தோண்டி எடுத்து வருகின்ற; வையைக் கூலம் சுமக்க - வையையாற்றின்
கரையை அடைத்தற்கு மண் சுமக்கும் பொருட்டு; கொட்டுஆள் ஆகி - மண்வெட்டியினையுடைய
கூலியாளாகி வந்து; நரைதலை முதியோள் இடித்து அடுகூலி கொண்டு - நரைத்த தலையினையுடைய
மூதியோள் இடித்து அடுகூலி கொண்டு - நரைத்த தலையினையுடைய மூதாட்டியாகிய வந்தி என்பவள்
மா இடித்து அட்ட பிட்டுணவைக் கூலியாகப் பெற்று; அடைப்பதுபோல - கரையினை அடைப்பதுபோலத்
தொழில் செய்யவும் அடைபடாமே; உடைப்பது நோக்கி - அக்கரை உடைபடுவதனைப் பார்த்து
என்க.
(வி-ம்.)
உரகன் - பாம்புருக் கொண்டு வந்த ஓர் அசுரன். மாதவன்: திருமால். இவன் இறைவனுடைய
அடியைக் காணும் பொருட்டுப் பன்றியாகி மண்ணகழ்ந்தமையாலே மாதவன் போல மண் அகழ்ந்தெடுத்து
வருபுனல் வையை என்றார். கூலம் - கரை. மண் சுமக்க என்க. கொட்டாள் - கொட்டினையுடைய
ஆள். கொட்டு - மண்வெட்டி. இனி மண்கொட்டும் ஆள் எனினுமாம். இடித்தடு வலிஇடித்துச்
சமைக்கின்ற பிட்டாகிய கூலி. கொன்றாளாகி என்பதும் பாடம். கொற்றுஆள் - கூலியாள்
இஃது இக்காலத்துக் கொத்தாள் என வழங்குகிறது.
26 - 29: கோமகன் . . . . . . . . . . முகில்
(இ-ள்)
கோமகன் அடிக்க - பாண்டியன் சினந்து பிரம்பாலடிக்க; அவன் அடி வாங்கி - அவன் அடியை
முதுகில் ஏற்று; அ அடி - அந்த அடியை; எவ்வுலகு எவ்வுயிர் எத்துறைக்கு எல்லாம் கொடுத்த
- எந்தவுலகத்திற்கும் எல்லா வுயிர்களுக்கும் எவ்வகைக் கருவினுக்கும் முழுதுமாகப் படும்படி
செய்தருளிய; அருள்நிறை நாயகன்- அருள் நிறைந்த தலைவனும் ஆகிய சோமசுந்தரக் கடதவுளினது;
திருமிடற்று இருள் என்ன - அழகிய மிடற்றின்கண் அமைந்த இருள்போல இருண்டு; செறிதரும்
மாமுகில் -நெருங்கி வந்த பெரிய முகிலே! என்க.
(வி-ம்.)
கோமகன் - ஈண்டுப் பாண்டிய மன்னன். பாண்டியன் கூலியாளாய் வந்த இறைவனைப் பிரம்பால்
அடித்தபொழுது அவ்வடி எல்லா உலகினும் எல்லாவுயிர்களுக்கும் எவ்வகைக் கருவினுக்கும் பட்டது
என்பதனை,
"வானவர் மனிதர்
நரகர்புள் விலங்கு மாசுணஞ் சிதலெறும் பாதி
ஆனபல் சரமு மலைமரங் கொடிபுல் லாதியா மசரமும் பட்ட
ஊனடை கருவும் பட்டன தழும்போ டுதித்தன வுயிரிலோ வியமுந்
தானடி பட்ட சராசர சடங்க டமக்குயி ராயினோன் றழும்பு"
(திருவிளை.
மண்சுமந்த - 55) |
எனவரும் பரஞ்சோதி
முனிவர் வாக்கானும் உணர்க. சடைப்பொருமானும் அருள்நிறை நாயகனுமாகிய இறைவனது மிடற்றிருள்போல
இருண்ட முகிலே என்க. முகில்: அண்மை விளி.
30
- 31: எனது . . . . . . . . . . புரிந்தே
(இ-ள்)
எனதுகண் கடந்து நீங்கி - எனது கண்ணைக் கடந்துபோய்; ஒருங்குபு புரிந்து - ஒன்றாய்க்
கூடி; துனைவுடன் செல்லல்-என்னைக் காட்டிலும் நீ விரைந்து செல்லற்க, அங்ஙனம் செல்லின்
அவள் ஒரோவழி இறந்துபடுதலுங் கூடும் என்க.
(வி-ம்.)
எனவே என்னோடு வருக. என்னினும் முநது செல்லற்க என்றானாம். அங்ஙனம் செல்லின் அவள்
ஒரோவழி இறந்து படுதலுங்கூடும் என்பது குறிப்பெச்சம்.
இனி,
இதனைச் சிந்திப்பரப்பி விம்மத்தூவிச் சொற்று, நகர் முன்றிலில், நீர்க்காலும்,
உழுநரும், வளைச்சாற்றும், குருகினமும், பகடீர்க்குநரும், அறுகாற் கிளியும், தாவித் திமிர்ப்பக்
கொடுக்கும் நீர்க் கூடற் பெருமான், மாதவன்போல வரும் வையைக் கூலஞ்சுமக்க ஆளாகிக்
கூலிகொண்டு அடிவாங்கி அவ்வடி கொடுத்த நாயகன், மிடற்றிருளெனச் செறிதரு முகிலே! கண்கடந்து
நீங்கி மடந்தைக்குத் துயரீந்து, துயில் வாங்கிய இன்னல் காண்பான், புரிந்து சொல்லலென
வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.
|