பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை

செய்யுள் 23

நேரிசையாசிரியப்பா

5
 
வானவர்க் கிறைவ னிலங்கிடைக் கொண்டு
திருவுட னிறைவிழி யாயிரத் திரளு
மிமையாது விழித்த தோற்றம் போலக்
கஞ்சக் கொள்ளை யிடையறை மலர்ந்து
மணஞ்சூழ் கிடந்த நீள்கருங் கழியே
  கருங்கழி கொடுக்கும் வெள்ளிற வருந்தக்
கைபார்த் திருக்கு மடப்பெடைக் குருகே
பேடைக்குரு கணங்கின் விடுத்தவெண் சினையொடு
காவலடை கிடக்கும் கைதையம் பொழிலே
வெம்மையொடு கூடியுந் தண்மை பொருந்தியு
15
  முலகவிரு டுரக்கஞ் செஞ்சுடர் வெண்சுடர்
காலங் கோடா முறைமுறை தோற்ற
மணிநிரை குயிற்றிய மண்டப மாகிப்
பொறைமாண் டுயிர்க்குந் தாயா மண்மகள்
களையா துடுக்கும் பைந்துகி லாகி
20
  வேனிற் கிழவன் பேரணி மகிழ
முழக்காது தழங்கு மாமுர சாகி
நெடியோன் றுயிலா தறிவொடு துயிலப்
பாயற் கமைந்த பள்ளியறை யாகிச்
சலபதி யாய்ந்து சேமநிலை வைத்த
25
  முத்துமணி கிடக்குஞ் செறியிரு ளரங்காய்ப்
புலவுடற் பரதவர் தங்குடி யோம்ப
நாளும் விளைக்கும் பெருவய லாகிக்
கலமெனு நெடுந்தேர் தொலையா தோட
வலப்பறப் பரந்த வீதிய தாகிச்
30
  சுரவ வேந்து நெடும்படை செய்ய
முழக்கமொடு வளைத்த வமர்க்கள மாகி
மகரத் தெய்வ நாணிறைந் துறைய
மணிவிளக்கு நிறைந்த வாலய மாகி
நர்ீநெய் வார்த்துச் சகர ரமைத்த
35
  தீவளர் வட்டக் குண்ட மாகி
யெண்டிகழ் பகுவா டினமணிப் பந்தாட்
டிண்டினின் றெரியுந் தகளிய தாகிப்
பஞ்சவ னிறைந்த வன்புடன் வேண்ட
மாறிக் குனித்த நீறணி பெருமாற்
40
  கமுத போனகங் கதுமென வுதவு
மடுந்தீ மாறா மடைப்பள்ளி யாகி
யின்னும் பலவாய் மின்னுங் கடலே
நுங்க ளின்பம் பெருந்துணை யென்பாற்
றண்ணந் துறைவற் கின்றவ ளொருத்தி
    நெருப்புறு மெழுகி னுள்ளம் வாடியு
மருவி தூங்கக் கண்ணீர் கொண்டு
மரவின்வா யரியிற் பலவு நினைந்து
  நிலையாச் சூளி னிலையா னெஞ்சுங்
கொணட்ன ளென்னென வென்முக நாடி
யுற்ற வாய்மை சற்றுந் தருகிலீ
ரன்றெனி னும்மி லொன்றுபட்ட டொருகா
வினவா திருககுங் கேண்மை
மனனா னாடிற் சொல்லினுங் கொடிதே.

(உரை)
கைகோள்: களவு; தலைவி
கூற்று

துறை: காமமிக்க கழிபடர் கிளவி

     (இ-ம்.) இதற்கு, “நோயும் இன்பமும்,,,,,,,,உரியபாற் கிளவி” என்னும் வழுவமைதி விதி கொள்க, (தொல், பொருளி, 2)

1-5: வானவர்க்,,,,,,,,,,,,,,,கழியே

     (இ-ள்) வானவர்க்கு இறைவன் நிலம் கிடை கொண்டு தேவர்களுக்கு அரசனான இந்திரன் நிலத்தின்மேற் கிடந்து; திருஉடல் நிறைவிழி ஆயிரம் திரளும்-தன்னுடைய அழகிய உடலின்கண் நிறைந்த ஆயிரம் கண்களின் கூட்டத்தையும்; இமையாது விழித்த தோற்றம் போல-இமைத்தலின்றி விழித்திருந்த காட்சியை ஒப்ப; கஞ்சக் கொள்ளை இடைஅற மலர்ந்து நின்பால் தோன்றிய தாமரை மலர்க் கூட்டம் இடையே அரும்புகளின்றி ஒருங்கே மலர்ந்து; மணம் சூழ் கிடந்த நீள் கருங்கழியே-யாண்டும் நறுமணம் கமழப்பெற்றுக் கிடந்த நெடிய கரிய கழியே என்க,

     (வி-ம்.) இஃது எதிர் நிரனிறை உவமை. கருநிற முடைய தேவேந்திரன் கருநிறமமைந்த கழிக்கு உவமை. அவன் ஆயிரங் கண்ணும் விழித்திருத்தல் கழியின்கண் இடையற மலர்ந்த தாமரை மலர்க்கு உவமை, கிடைகொள்ளல்-கிடத்தல், திரு-அழகு, ஆயிரம் விழித்திரளும் என மாறுக, கஞ்சம்-தாமரை, கொள்ளை-கூட்டம்.

6-7: கருங்கழி.........குருகே

     (இ-ள்) கரு கழி கொடுக்கும் வெள்இற அருந்தக் கை பார்த்திருக்கும் மடப்பெடைக் குருகே-இந்தக கரிய கழியாகிய வள்ளல் வழங்கும் வெள்ளிய இறாமீனைத் தின்றற்கு அவனுடைய கையினை எதிர்பார்த்து வாடி இருக்கும் மடப்பத்தையுடைய பெண்ணாகிய கொக்கே! என்க.

     (வி-ம்.) முன்னர்க் கழியை விளித்தவள் அது ஏதுங் கூறாமையின் மீண்டும் அக்கழியின்கண் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருக்கும் கொக்கினை நோக்கிக் கூறுகின்றாள் என்க. கொடுக்கும் என்றதனால் அவனுடைய கையை என்றும் கூறிக்கொள்க. கருங்கழி கொடுக்கும் வெள்ளிற என்புழிச் செய்யுளின்ப முணர்க, இறா-இற என ஈறு குறுகி நின்றது. இறா-ஒருவகை மீன். அருந்தப் பிறருடைய கையைப் பார்த்திருக்கும் மடமையையுடைய குருகே எனவும் ஒரு பொருள் தோன்றுதலுணர்க. குருகு-கொக்கு. நீயும் என்போலப் பெண்னே என்பாள் பெடைக்குருகே என்றாள். கை என்பது ஈண்டுச் செவ்வியை.

8-9: பெடைக்குருகு..........பொழிலே

     (இ-ள்) பெடைக்குருகு அணங்கின் விடுத்த வெள்சினையொடு-பெடைக் கொக்குகள் வருந்தி ஈன்ற தம் வெள்ளிய முட்டைகளோடு; அடைகாவல் கிடக்கும் கைதை அம்பொழிலே-அடைகாத்துக் கிடத்தற்கு இடனான தாழையாகிய அழகிய பொழிலே என்க.

     (வி-ம்.) அக்குருகு தானம் ஏதுங் கூறாமையால் பின்னா அந் நினைவால் அவை அடைகிடக்கும் தாழையும் பொழிலே விளிக்கின்றாள் என்க, அணங்கின்-வருத்தத்தோடு. விடுத்த சினை-இட்டமுட்டை. கைதை-தாழை.

10-13: வெம்மை.........................ஆகி

     (இ-ள்) வெம்மையோடு கூடியும் தண்மை பொருந்தியும்- வெப்பத்தோடே பொருந்தி நின்றும் தட்பத்தோடே பொருந்தி நின்றும்; உலக இருள் துரக்கும் செஞ்சுடர் வெண்சுடர்- உலகத்தை மூடிய இருளை அகற்றும் செஞ்ஞாயிறும் வெண்திங்களும்; மணிநிரை குயிற்றிய-முத்து முதலிய மணிகளை நிரல்பட பதித்தியற்றினாற் போன்ற; மண்டபம் ஆகி மண்டபம் ஆகியும் என்க.

     (வி-ம்.) இது முறை நிரனிறை. வேம்மையொடு கூடி இருள் துரக்கும் செஞ்சுடரும் தண்மையொடு கூடி இருள் துரக்கும் வெண்சுடரும் என்க. கோடா- பலவறி சொல், இனித் துவ்வீறு தொக்கது எனினுமாம். செஞ்சுடரும் வெண்சுடருடம் ஆகிய தெய்வங்கள் இருந்து தோன்றுதற்கிடனாகலின் (கடலை) அவற்றின் மண்டபம் என்றாள். கடலின்கண் பவழம், முத்து முதலிய மணிகள் கிடத்தல் மண்டபம் என்றதற் கேற்ப மணிநிரை குயிற்றிய மண்டபம் என்றாள்.

14-15: பொறை...............................ஆகி

     (இ-ள்) பொறை மாண்டு உயி்ர்க்கும் தாயாம் மண் மகள்- பொறுமையாலே பெரிதும் மாட்சிமை எய்தி எல்லா உயிரினங்களையும் ஈன்று வளர்க்கும் தாயாகிய நிலமகள்; களையாது உடுக்கும் பைந்துகில் ஆகி-ஒருபொழுதும் அகற்றாமல் உடுத்துக் கொள்ளும் பசிய ஆடை ஆகியும் என்க.

     (வி-ம்.)

“அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
 இகழவார்ப் பொறுத்த றலை”
(குறள். 151)

என்றாங்குப் பொறுமைக்கு நிலமகளே சிறந்தமை கருதிப் பொறை மாண்டு என்றாள். மாண்டு-மாட்சிமைப்பட்டு. உயிர்க்கும்-ஈனும். உயி்ர்க்கும் என்றமையால் எல்லா உயி்ர்களையும் என்க. தாய் என்றமையால் வளர்த்தலுங் கொள்க. துகில்-ஆடை.

19-17: வேனில்......................ஆகி

     (இ-ள்) வேனில் கிழவன் பேர்அணி மகிழ-வேனிற் பருவத்திற்குரிய காமவேளினுடைய பெரிய (மகளிராகிய) படைஞர் மனம் மகிழும்படி; முழுக்காது தழங்கும் மாமுரசு ஆகி-பிறரால் முழக்கப்படாமல் முழங்குமொரு பெரிய முரசம் ஆகியும் என்க.

     (வி-ம்.) வேனிற் கிழவன்-காமவேள். பேரணி-பெரியபடை வகுப்பு. காமவேளின் படைஞர் மகளிர் ஆதலின் மகளிராகிய படைஞர் என்க. கொழுகநனேடு கூடியிருக்கும் மகளி்ாக்குக் கடல் முழக்கம் பெரிதும் மகிழ்ச்சியூட்டுதல் இயலப்ாகலின் பேரணி மகிழ முழங்கும் முரசு என்றாள். கடல் முழக்குவாரையின்றித் தானே முழங்குதலின் முழக்காது முழங்கும் முரசு என்றாள். தழங்குதல்- முழங்குதல். முரசங்களுள் வைத்து மிகப்பெரிய முரசு என்பாள் மாமுரசு என்றாள்.

18-13: நெடியோன்............................ஆகி

     (இ-ள்) நெடியோன் துயிலாது அறிவொடு துயில-திருமால் பிற உயிர்கள் போல் மயங்கித் துயிலாமல் துயின்றும் துயிலாத அறிதுயில் செய்தற்கு; அமைந்த பாயல் பள்ளி அறை ஆகி-பொருந்திய (ஆதிசேடனாகிய) பாயல் கிடக்கும் பள்ளியறை யாகியும் என்க.

     (வி-ம்.) நெடியோன் என்றது திருமாலை அமைந்த பாயல் என முன்னுங் கூட்டுக. அறிவோடு துயிலலாவது அறிதுயில் கோடல். இதனை யோக நித்திரை என்பர் வடநூலார் ஆதிசேடனாகிய பாயல் என்க. பள்ளியறை-துயிலுமிடம்.

20-21: சலபதி.........................அரங்காய்

     (இ-ள்) சலபதி ஆயந்து சேமநிலை வைத்த-கடற் கிறைவனாகிய வருணன் ஆராய்ந்து பார்த்து இது தகுந்த காவலமைந்த இடம் என்று கருதிக் குவித்து வைத்த; முத்து மணி கிடக்குஞ் செறி இருள் அரங்காய்-முத்துக்களும் பவழமும் பிறவுமாகிய மணிகள் குவிந்து கிடக்கும் இருள் அடர்ந்த கருவூலம் ஆகியும் என்க.

     (வி-ம்.) சலபதி-கடலுக்கு இறைவனாகிய வருணன். “வருணன் மேய பெருமண லுலகம் “ என்று கடலும் கடல்சார்ந்த நிலமுமாகிய நெய்தலைக் கூறுதலுங் காண்க. நிதியாகலின் ஆய்ந்து வைத்தல் வேண்டிற்று. சேமநிலை-அரணமைந்த விடம். யாறுகள் குறிஞ்சி முதலிய இடங்களினின்று பிறமணிகளையும் வரன்றிக் கொணர்ந்து கடலிலே இடுதலுண்மையால் முத்தும் ஏனைய மணிகளும் என்றாள். இருள் செறி அரங்கு என மாறுக. அரங்கு-ஈண்டுக் கருவூல அறை என்க.

22-23: புலவு ,,,,,,,,,,,,,ஆகி

     (இ-ம்.) புலவு உடல் பரதவ்ா தம் குடி ஓம்ப-புலால் நூறும் உடம்பினையுடைய நெய்தனில்மாக்கள் தம்முடைய குடிகளைப் பேணுதற் பொருட்டு: நாளும் விளைக்கும் பெரும் வயல் ஆகி-நாள்தோறும் தமக்குிாய உணவுப் பொருளை விளைக்கும் என்க. நண்டு உஉயவுன்ப பொருள் என்றது மீன் முதலியவற்றை் ஒவ்வொரு பொழுதே விளையும் நாட்டின்கண் உள்ள வயல் போலாது நாள் தோறும் விளையும் சிறப்புடைய வயல் என்பாள் நாளும் விளைக்கும் பெருவயல் என்றாள்.

24-2: கலம்..................ஆகி

     (இ-ம்.) கலம் எனும் நெடுதே்ிா தொலையாது ஓட-மரக்கலம் என்னும் பெிாய தே்ா இடைவிடாமல் ஓடுதற்கியன்ற;அளப்புட அற பரந்த வீதியது ஆகி-அளித்தற்கியலாத மிகவும் பரந்த தெரு ஆகியும் என்க.

     (வி-ம்.) கலம்-மரக்கல்ம் தொலைதல்-ஒட்டமொழிதல், எனவே ஒழிவன்றி ஓட என்றாயிற்று. வீதியது என்புழி அது பகுதிப் பொருளது.

23-27: சுறவம்....................ஆகி

     (இ-ம்.) சுறவவேந்து நெடும்படை செய்ய-சுறாமீன் ஆகிய வேந்தன் தனது நெடிய படைகளோடே பேர்ா செய்யும் பொருட்டு: முழக்கமொடு வளைத்த அமர்க்களம் ஆகி-ஆரவாரத்தோடே நிலத்தை முற்றுகை செய்த போக்களம் ஆகியும் என்க.

     (வி-ம்.) வேந்து-வேந்தன். படைபேர்ா செய்ய என்க. வளைத்தல் முற்றுகையிடுதல். அமர்-பேர்.

28-29: மகரம்............ஆகி

     (இ-ள்) மகரத்தெய்வம் நான் நிறைந்து உறைய-மகரம் ஆகிய தெய்வம் நீண்ட காலம் எழுந்தருளி இருத்தற்கு எடுத்த; மணிவிளக்கு நிறைந்த ஆலயம் ஆகி-பல்வேறு மணிகளாகிய விளக்குகள் நிறைந்துள்ள கோயில் ஆகியும் என்க.

     (வி-ம்.) மகரம்-ஒருவகை மீன். நாள் நிறைந்து என்புழி செய்தெனெச்சத்தைச் செயவெனெச்சமாக்குக. நாள் நிறைய உறைதலாவது நெடுஞ்காலம் தங்குதல் ஆலயம்-கோயில்.

30-31: நீர்..............................ஆகி

     (இ-ள்) நீர் நெய் வார்த்து-நீராகிய நெய்யைப் பெய்து; சகரர் அமைத்த-சகரர் என்பவரால் அமைக்கப்பட்ட; தீவளர் வட்டக்குண்டம் ஆகி-வடவைத் தீ வளர்வதற்கு இடமாகிய வட்டமான வேள்விக் குழியாகியும் என்க.

     (வி-ம்.) சகரர்-கதிரவங் குலத்துள் த்ன்றிய சகரன் என்னும் மன்னனுடைய மக்கள். கடல் இவர்களால் தோண்டப்பட்டது. அக்கடலின்கண் இவர் மரபில் தோன்றிய பகீரதன் என்னும் அரசன் மிகவும் முயன்று வானகங்கையைக் கொணர்ந்து அக்கடல் நிரம்பப் பாய்ச்சினான் என்பது வரலாறு. ஆதலின் பகீரதன் செயலையும் அச்சரகர் செயலாகக் கொண்டு நீர்நெய் வார்த்துச் சரகே அமைத்த எனப்பட்டது. கடலின்கண் எப்பொழுதும் வடவைத்தீ இருந்து அக்கடல் மிகாவண்ணம் அடக்கி வருகின்றது என்பவாகலின் தீவளர் குண்டம் என்றாள். குண்டம்-வேல்விக்குழி.

32-33: எண்.................................ஆகி

     (இ-ள்) எண்திகழ் பகுவாய் இனமணி பாந்தள் தண்டில் நின்றி எரியும் என்னும் பேரெண் உடையவாய் விளங்காநின்ற பிளவுபட்ட வாய்களையும் திரளான மணிகளையுடைய சூட்டினையுமுடைய ஆதிசேடன் என்னும் பாம்பாகிய தண்டின் மேலே கதிரவனாகிய விளக்கு நின்று எரிதற்கிடமாகிய; தகளியது ஆகி-அகலாகியும் என்க.

     (வி-ம்.) எண் என்றது ஈண்டுப் பேரென் என்பதுபட நின்றது. பகுவாஉ: வினைத்தொகை. பசுந்தாள்-பாம்பு. ஈண்டு ஆதிசேடங் தகளி-அகல். இதனைத் தகழி என்றும் வழங்குபவ. நிலத்தை ஆதிசேடன் சுமப்ப, அவன் தலையில் அமைந்த கடலின்கண் கதிரவன் தோன்றி ஒளிவீசுதலால் ஆதிசேடனை (விளக்குத்) தண்டாகவும் கடலை நெய்பெய்த தகழியாகவும் கதிரவனை விளக்காகவும் உருவகித்தபடியாம். தகளியது என்புழி அது பகுதிப் பொருள் விகுதி.

34-37: பஞ்சவங்................................ஆகி

     (இ-ள்) நிறைந்த அன்புடன் பஞ்சவன் வேண்ட-தன்பால் நிறைந்த, அன்புடனே ஒரு பாண்டிய மன்னன் பிறவுமாகிய மணிகள் குவிந்து கிடக்கும் இருள் அடர்ந்த கருவூலம் ஆகியும் என்க.

     (வி-ம்.) சலபதி-கடலுக்கு இறைவனாகிய வருணன். “வருணன் மேய பெருமண லுலகம் “ என்று கடலும் கடல்சார்ந்த நிலமுமாகிய நெய்தலைக் கூறுதலுங் காண்க. நிதியாகலின் ஆய்ந்து வைத்தல் வேண்டிற்று. சேமநிலை-அரணமைந்த விடம். யாறுகள் குறிஞ்சி முதலிய இடங்களினின்று பிறமணிகளையும் வரன்றிக் கொணர்ந்து கடலிலே இடுதலுண்மையால் முத்தும் ஏனைய மணிகளும் என்றாள். இருள் செறி அரங்கு என மாறுக. அரங்கு-ஈண்டுக் கருவூல அறை என்க.

22-23: புலவு ,,,,,,,,,,,,,ஆகி

     (இ-ம்.) புலவு உடல் பரதவ்ா தம் குடி ஓம்ப-புலால் நூறும் உடம்பினையுடைய நெய்தனில்மாக்கள் தம்முடைய குடிகளைப் பேணுதற் பொருட்டு: நாளும் விளைக்கும் பெரும் வயல் ஆகி-நாள்தோறும் தமக்குிாய உணவுப் பொருளை விளைக்கும் என்க. நண்டு உஉயவுன்ப பொருள் என்றது மீன் முதலியவற்றை் ஒவ்வொரு பொழுதே விளையும் நாட்டின்கண் உள்ள வயல் போலாது நாள் தோறும் விளையும் சிறப்புடைய வயல் என்பாள் நாளும் விளைக்கும் பெருவயல் என்றாள்.

24-2: கலம்..................ஆகி

     (இ-ம்.) கலம் எனும் நெடுதே்ிா தொலையாது ஓட-மரக்கலம் என்னும் பெிாய தே்ா இடைவிடாமல் ஓடுதற்கியன்ற;அளப்புட அற பரந்த வீதியது ஆகி-அளித்தற்கியலாத மிகவும் பரந்த தெரு ஆகியும் என்க.

     (வி-ம்.) கலம்-மரக்கல்ம் தொலைதல்-ஒட்டமொழிதல், எனவே ஒழிவன்றி ஓட என்றாயிற்று. வீதியது என்புழி அது பகுதிப் பொருளது.

23-27: சுறவம்....................ஆகி

     (இ-ம்.) சுறவவேந்து நெடும்படை செய்ய-சுறாமீன் ஆகிய வேந்தன் தனது நெடிய படைகளோடே பேர்ா செய்யும் பொரு்ட்டு:முழக்கமொடு வளைத்த அமர்க்களம் ஆகி-ஆரவாரத்தோடே நிலத்தை முற்றுகை செய்த போக்களம் ஆகியும் என்க.

     (வி-ம்.) வேந்து-வேந்தன். படைபேர்ா செய்ய என்க. வளைத்தல் முற்றுகையிடுதல். அமர்-பேர்.

28-29: மகரம்............ஆகி

     (இ-ள்) மகரத்தெய்வம் நான் நிறைந்து உறைய-மகரம் ஆகிய தெய்வம் நீண்ட காலம் எழுந்தருளி இருத்தற்கு எடுத்த; மணிவிளக்கு நிறைந்த ஆலயம் ஆகி-பல்வேறு மணிகளாகிய விளக்குகள் நிறைந்துள்ள கோயில் ஆகியும் என்க.

     (வி-ம்.) மகரம்-ஒருவகை மீன். நாள் நிறைந்து என்புழி செய்தெனெச்சத்தைச் செயவெனெச்சமாக்குக. நாள் நிறைய உறைதலாவது நெடுஞ்காலம் தங்குதல் ஆலயம்-கோயில்.

30-31: நீர்..............................ஆகி

     (இ-ள்) நீர் நெய் வார்த்து-நீராகிய நெய்யைப் பெய்து; சகரர் அமைத்த-சகரர் என்பவரால் அமைக்கப்பட்ட; தீவளர் வட்டக்குண்டம் ஆகி-வடவைத் தீ வளர்வதற்கு இடமாகிய வட்டமான வேள்விக் குழியாகியும் என்க.

     (வி-ம்.) சகரர்-கதிரவங் குலத்துள் த்ன்றிய சகரன் என்னும் மன்னனுடைய மக்கள். கடல் இவர்களால் தோண்டப்பட்டது. அக்கடலின்கண் இவர் மரபில் தோன்றிய பகீரதன் என்னும் அரசன் மிகவும் முயன்று வானகங்கையைக் கொணர்ந்து அக்கடல் நிரம்பப் பாய்ச்சினான் என்பது வரலாறு. ஆதலின் பகீரதன் செயலையும் அச்சரகர் செயலாகக் கொண்டு நீர்நெய் வார்த்துச் சரகே அமைத்த எனப்பட்டது. கடலின்கண் எப்பொழுதும் வடவைத்தீ இருந்து அக்கடல் மிகாவண்ணம் அடக்கி வருகின்றது என்பவாகலின் தீவளர் குண்டம் என்றாள். குண்டம்-வேல்விக்குழி.

32-33: எண்.................................ஆகி

     (இ-ள்) எண்திகழ் பகுவாய் இனமணி பாந்தள் தண்டில் நின்றி எரியும் என்னும் பேரெண் உடையவாய் விளங்காநின்ற பிளவுபட்ட வாய்களையும் திரளான மணிகளையுடைய சூட்டினையுமுடைய ஆதிசேடன் என்னும் பாம்பாகிய தண்டின் மேலே கதிரவனாகிய விளக்கு நின்று எரிதற்கிடமாகிய; தகளியது ஆகி-அகலாகியும் என்க.

     (வி-ம்.) எண் என்றது ஈண்டுப் பேரென் என்பதுபட நின்றது. பகுவாஉ: வினைத்தொகை. பசுந்தாள்-பாம்பு. ஈண்டு ஆதிசேடங் தகளி-அகல். இதனைத் தகழி என்றும் வழங்குபவ. நிலத்தை ஆதிசேடன் சுமப்ப, அவன் தலையில் அமைந்த கடலின்கண் கதிரவன் தோன்றி ஒளிவீசுதலால் ஆதிசேடனை (விளக்குத்) தண்டாகவும் கடலை நெய்பெய்த தகழியாகவும் கதிரவனை விளக்காகவும் உருவகித்தபடியாம். தகளியது என்புழி அது பகுதிப் பொருள் விகுதி.

34-37: பஞ்சவங்................................ஆகி

     (இ-ள்) நிறைந்த அன்புடன் பஞ்சவன் வேண்ட-தன்பால் நிறைந்த, அன்புடனே ஒரு பாண்டிய மன்னன் வேண்டிக்கொள்ளுதலாலே; மாறிக் குனித்த நீறு அணி மெருமாற்கு- கான்மாறிக் கூத்தாடியருளிய திருநீறணிந்த சிவபெருமானுக்கு; அமுத போனகம் கதும் என உதவும்-நஞ்சேயாயினும் அவன் திரத்தில் அமுதமேயாகிய உணவினை விரைந்து அளித்தற்குக் காரணமான; அடும் தீ மாறாமடைப்பள்ளி ஆகி-அடுத்தற்றெழில் செய்யும் நெருப்பு ஒரு காலத்து மாறுதலில்லாத அட்டில் ஆகியும் என்க.

     (வி-ம்.) பஞ்சவன்-பாண்டியங் குறிஞ்சி முதலிய ஐந்துவகை நிலங்களையுமுடைய நாட்டிற்கு அரசன் என்பதுபற்றிப் பாண்டியனுக்குப் பஞ்சவன் எனவும் பெயர் வழங்கப்படுகின்றது. மாறிக்குனித்தல் காலை மாற்றி நடித்தல். இவ்வரலாற்றினைத் திருவிளையாடற் புராணத்தில் கான்மாறியாடின படலத்தில் விளக்கமாக உணர்க. நீறு-திருநீறு. பெருமான்-ஈண்டுச்சிவபெருமான். திருப்பாற் கடையுங் காலத்தே கடைகயிறாகவமைந்த வாசுகி என்னும் பாம்பு மெய்வருந்திக் கடலின்கண் நஞ்சை உமிழ்ந்தது. அந்நஞ்சு உயிரினங்ககைக் கொல்லலுற்றமை கண்டு சிவபெருமான் அதனை அள்ளிப்பருகி உலகினை உய்யக்கொண்டார் என்பது வரலாறு. எனவே ஈண்டு அமுதபோனகம் என்பது நஞ்சேயாயினும் அவன் திறத்திலே அமுதமாகிய என்பதுபட நின்றது. போனகம்-உணவு. அவ்வுணவு கடலின்கண் சமைதலின் அதனை உணவு சமைக்கும் மடைப்பள்ளி என்றாள். மடைப்பள்ளிகளுள்ளும் சிவபெருமானுக்குரிய மடைப்பள்ளியாதலால் ஈண்டுச் சிறப்பு என்க. அடுந்தீ என்பது கொல்லுந் தீ சமைக்குந் தீ என்னும் இருபொருளும்பட நின்றது. தீ என்றது வடவைத்தீயை.

38: இன்னும்............................கடலே

     (இ-ள்) இன்னும் பலவாய்-யான் ஈண்டுக் கூறிய பொருள்களேயன்றி மேலும் வலவேறு பொருள்களும் ஆகி; மன்னும் கடலே-நிலைபெறுகின்ற கடலே! என்க.

     (வி-ம்.) 10 முதல் 37 வரையில் பல பொருள்களாகக் கடலை உருவகித்துக் கூறுதலின் இது பலபொருள் உருவகம். மண்டபமாகியும் துகிலாகியும் முரசாகியும் பள்ளியறையாகிய அரங்காகியும் வயலாகியும் வீதியாகியும் அமர்க்களமாகியும் ஆலயமாகியும் குண்பமாகியும் தகளியாகியும் மடைப்பள்ளியாகியும் நீ கதிரவன் முதலாகச் சிவபெருமான் ஈறாக உள்ள கடவுளர்களுக்கும் உதவி செய்கின்றனை; அங்ஙன மிருந்தும் இவள் எளியவள் பெண் அளியள் என்று என்றிறத்திலே இரங்கி யாதும் உதவுகின்றிலை என்பது கருத்து என்க.

39-46: நுங்கள்..............................தருகிலீர்

     (இ-ள்) நுங்கள் இன்பம் பெருந்துணை என்பால்-நுங்கள்பாற் பழகி நீவிர் தரும் இன்பங்களையே பெரிய துணையாகக் கொண்டு வாழுமியல்புடைய என்னிடத்து இரங்கி; என்முகம்நாடி- என் முகத்தை நோக்கி; இவள் ஒருத்தி-நம்பாற் கேண்மை கொண்ட ஒருத்தியாகிய இவள்; இன்று தண்ணம் துறைவற்கு-இற்றைநாள் குளிர்ந்த கடற்றுறையினுடைய ஒரு தலைவன் பொருட்டு; உள்ளம் நெருப்பு உறு மெழுகின் வாடியும்-தன் நெஞ்சம் தியிலிட்ட மெழுகுபோல் உருகியும்; அருவி தூங்க கண்ணீர் கொண்டும்- அருவி யொழுகினாற்போல ஒழுகும்படி அண்ணீர் சொரிந்தும்; அரவின்வாய் அரியில் பலவும் நினைந்தும்-பாம்பின் வாயில் அகப்பட்ட தவளைபோல பற்பல நினைவுகளையும் நினைந்தும்; நிலையாச் சூளின் நிலையா நெஞ்சும் கொண்டனள் என் என-அவளுடைய தலைவன் கூறிய சூள் நிலைஆதது போல நிலை நில்லாத நெஞ்சமும் உடையாள் ஆயினள்; இங்ஙனம் வருந்து இவள் பெறும் பயன்தான் என்னையோ! என்று; உற்ற வாய்மை சற்றும் தருகிலீர்-என் துன்பத்திற்கு ஆறுதலாயமைந்த மொழி சிறிதேனும் த்ருகின்றிலீர் என்க.

     (வி-ம்.) நுங்கள் இன்பத்தைப் பெறும் துணையாகக் கொள்ளும் என்பால் இரங்கி என்முகம் நாடி இவள் ஒருத்தி துறைவற்கு வாடியும் கண்ணீர் கொண்டும் நினைந்தும் நிலையா நெஞ்சுங் கொண்டனள்-இஃதென் என வாய்மை தருகிலீர் என இயைபு காண்க. துறைவன்-நெய்தலின் தலைவன். அருவிபோலத் தூங்கவென்க. அரி-தவளை; இவள் தலைவன் செய்த சூள்போல நிலையாத நெஞ்சும் என்க. வாய்மை-மொழி என்னு மாத்திரையாய் நின்றது.

47-50: அன்றெனில்...........................கொடிதே

     (இ-ள்) அன்று எனில்-அங்ஙனம் இரங்கி ஆறுதல் மொழி வழங்குவீரல்லீராயினும்; நும்மில் ஒன்றுபட்டு ஒருகால்-நீங்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒருமுறையேனும்; ஓ இவள் துயரம் பெறுவது என் என்று வினவாது இருக்கும் கேண்மை-அந்தோ! நந்தோழியாகிய இவள் இங்ஙனம் துன்பப்படுவதற்குக் காரணந்தான் யாதோ என்று வினவுதலும் செய்யாது இருக்கின்ற நும்முடைய கேண்மைப் பண்பினை; மனனால் நாடின் சொல்லினும் கொடிது-யான் என் நெஞ்சத்தால் நினைக்கு மிடத்தும் அன்றி நாவாற் சொல்லுமிடத்தும் மிகவும் கொடிய தொன்றாய் இருந்தது; என்னே நுங்கேண்மை இருந்தவாறு? என்க.

     (வி-ம்.) ஓ இவள் துயரம் பெறுவது என் என்று மாறுக. கேண்மை என்றது இகழ்ச்சி. மனன்: போலி. நாடினும் என உம்மையை முன்னுங் கூட்டுக.

“கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை யடுங்காலை
 யுள்ளினு முள்ளுஞ் சுடும்”                 (குறள். 799)

என்பது பற்றி நுங்கேண்மை நாடினும் சொல்லினும் கொடிது என்றாள்.

     இனி, கழியை நோக்கி நீ ஆயிரங் கண்ணுடைய இந்திரனைப் போன்றிருந்தும் என் திறத்தில் குருடாய்க் கிடண்டனை என்பாள் இந்திரன் நிலத்திற் கிடந்து விழித்த தோற்றம் போலக் கஞ்சம் மலர்ந்து கிடந்தனை என்றாள். இனி, குருகை நோக்கி நீ நின் நலம் பேணும் மடவோய் ஆதலின்றிப் பிறர் நலம் பேன அறியாய் என்பாள் அருந்தக் கைபார்த்திருக்கும் மடப்பேடைக் குருகே என்றாள். இனி, கைதையை நோக்கி நீ குருகிற்கு உதவுவை எனக்குதவு கின்றிலை என்பாள் குருகு அடைகிடக்கும் கைதை என்றாள். இனி கடலை நோக்கி நீ தெய்வங்களுக்கும் உதவு சிறப்புடையை; அங்ஙனமிருந்தும் பெண்ணாகிய எனக்குச் சிறிதும் உதவுகின்றிலை என்பாள் வெம்மையொடு.........கடலே என்றாள்; எனவும் நுண்ணிதின் உணர்க.

     இனி, கழியே! குருகே! கைதையே! கடலே இவளொருத்தி துறைவற்கு உருகியும் கொண்டும் நினைந்தும் நிலைபெறா நெஞ்சும் கொண்டனள் என்? என்று வாய்மை சிறிதேனும் தருகிலீர். அங்ஙனம் தாரீராயினும் நும்மில் ஒன்றுபட்டு வினவாதிருக்குங் கேண்மை நாடினும் சொல்லினும் கொடிதே. இதுவோ நுங்கள் கேண்மைப் பண்பு இருந்தவாறு? என இயைபு காண்க. மெய்ப்பாடும் பயனும் அவை.