பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 3

நேரிசையாசிரியப்பா

 
   
5
  பகையுடன் கிடந்த நிலைபிரி வழக்கினைப்
பொருத்தலும் பிரித்தலும் பொருபகை காட்டலு
முட்பகை யமைத்தலு முணர்ந்துசொற் பொருத்தலு
மொருதொழிற் கிருபகை தீராது வளர்த்தலுஞ்
செய்யா வமைச்சுடன் சேரா வரச
10
  னோடு கரிந்தன்ன காடுகடந் தியங்கி
யிடும்பை நிரப்பினார்க் கீதலி னிறந்தோர்க்
கிதழ்நிறை மதுவந் தாமரை துளித்தென
விழிசொரி நீருடன் பழங்கண் கொண்டா
லுலகிய னிறுத்தும் பொருண்மர பொடுங்க
15
  மாறனும் புலவரு மயங்குறு காலை
முந்துறும் பெருமறை முளைத்தருள் வாக்கா
லன்பினை திணையென் றறுபது சூத்திரங்
கடலமு தெடுத்துக் கரையில்வைத் ததுபோற்
பரப்பின் றமிழைச்சுவை திரட்டிமற் றவர்க்குத்
  தெளிதரக் கொடுத்த தென்றமிழ்க் கடவுள்
தழற்கட் டரக்கின் சரும வாடையன்
கூடலம் பெரும்பதி கூறார் கிளையென
நிறைநீர்க் கயத்து ளொருதா ணின்று
20
  தாமரை தவஞ்செய் தளியுடன் பெற்ற
திருமகட் கடுத்த தென்னென்
றொருமை காண்குவர் துகர்க்கிளைக் கொடியே.

(உரை)
கைகோள், களவு. தோழி கூற்று.

துறை: வழியொழுகி வற்புறுத்தல்.
(இ-ம்.) இதற்கு “ஆங்கதன் தன்மையின் வன்புறையுளப் பட” என்னும் (தொல்-கள. 23) விதிகொள்க.

22: துகிர்..........................கொடியே

     (இ-ள்) கிளை துகிர் கொடியே-கிளையினையுடைய பவளக்கொடியை ஒத்த நங்காய் என்க.

     (வி-ம்.) கிளைதுகிர் கொடி என மாறுக. துகிர்க்கிளைக்கொடி: பன்மொழித் தொகை. விளி: தோழி தலைவியை விளித்தபடியாம்.

1 - 9: பகை.....................................கொண்டால்

     (இ-ள்) பகையுடன் கிடந்த நிலை பிரி வழக்கினை-பழம் பகை உறவாகாது என்று எண்ணாமல் நெடுங்காலம் பகையோடு கிடந்த தன் ஆட்சி நிலை தன்னைவிட்டு நீங்குதற்கேதுவான வழக்கினை; பொருத்தலும்-ஒருவாறு தீர்த்து அப்பகைவரோடு கூடுதலும்; பிரித்தலும்-தனக்குத் துணையாவாரைத் தன்பானின்றும் விலக்குதலும்; பொருபகை காட்டலும்-வலியும் காலமும் இடமுமறியாது தன்னோடு போர் செய்தற்குரிய வலிய பகையை உண்டாக்கிஒ கோடலும்; உள் பகை அமைத்தலும்-புறப் பகைக்கிடனாக்கிக் கொடுத்து அவர் வெல்லுந்துணையும் உள்ளாய் நிற்கும் பகையை உண்டாக்கலும்; உணர்ந்து சொல் பொருத்தலும்-தன் பகையாயினார் தனக்கு நல்லன போல வஞ்சகமாகத் தனக்குணர்த்தும் சொல்லின் பயன் தெரியாது ஏற்றுக் கோடலும்; ஒரு தொழிற்கு இரு பகை தீராது வளர்த்தலும்-தன் ஆட்சித் தொழிலாகிய ஒன்றனுக்கு இருவேறு பகைவர் தோன்றியவழி அவ்விருவருள் ஒருவரோடு கேண்மைகொண்டு அவரை ஏனையோர்பால் எடுத்துவிட்டுத் தன் றெழிலைத்தீராமல் அவ்விருபகையையும் வளர்த்துக் கோடலும் ஆகிய இக்குற்றங்களையும்; செய்யா-செய்துவைத்து; அமைச்சுடன் சேரா-நல்லமைச்சரோடுங் கூடுதலில்லாத; அரசன்-அறிவிலியாகிய ஒரு மன்னவனுடைய ஆட்சியிலமைந்த; நாடுகரிந்தன்ன காடு-நாடானது தன் வளனெலாங் கெட்டுப் பாழாயினாற் போன்று பாழ்பட்டுக் கரிந்துகிடக்கும் காட்டினை; கடந்து இயங்கி-கடந்து போய்; இடும்பை நிரப்பினார்க்கு-நினக்குத் துன்பத்தையே நிரம்பச் செய்யும் நந்தமர்க்கு; ஈதலின்-பரியமாக வழங்குதற் பொருட்டே; இறந்தோர்க்கு-நம்மைப் பிரிந்து சென்ற நம்பெருமான் பொருட்டு; அம் தாமரை இதழ் நிறை மது துளித் தென-அழகிய செந்தாமரை மலர் தன் இதழ்களினிரம்பத் தேனைச் சொரிந்தாற்போன்று; விழி சொரி நீருடன்-நின் விழிகள் சொரியா நின்ற கண்ணீரோடே; பழங் கண் கொண்டால்-நீ இவ்வாறு வருந்தினால்; என்க.

     (வி-ம்.) “பகை நட்பாங் காலம் வருங்கான் முகநட்டு அகநட்பு ஒரீஇ விட”லே முறையாகவும் அங்ஙனம் செய்யாது அவரோடு உறஉறக் கேண்மை கொள்ளுதலும் செய்த அரசன் என்க. பிரித்தல் என்றமையால் தங்கேளிர் என்பது பெற்றாம். “பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்” என வரும் திருக்குறளையும் (450) நினைக.

     உட்பகையாவது-புறப்பகைக்கு இடனாக்கிக் கொடுத்து அது வெல்லுந்துணையும் உள்ளய் நிற்கும் பகை. இது களைந் தொழிக்க வேண்டியதாகவும் அதனை வளர்ப்பது குற்றமாயிற்று. ஈண்டு,

“எட்பக வன்ன சிறுமைத்தே யாயினும்
 உட்பகை யுள்ளதாங் கேடு”
(குறள் - 889)

எனவும்,

“வாள்போல் பகைவரை யஞ்சற்க வஞ்சுக
 கேள்போல் பகைவர் தொடர்பு”

(குறள் - 882)

எனவும் வரும் திருக்குறள்களையும் நினைக.

     ஒரு தொழில்-ஆட்சித் தொழில். தான் மேற்கொண்டதொரு போர்த் தொழிற்கு எனினுமாம். ஒரு தொழிற்கு இருபகை தீராது வளர்த்தலாவது-தனக்கு இரு பகைவர் தோன்றியவழி அவ்விருவருள் ஒரு பகைவனை உபாயத்தால் தனக்குத் துணையாக்கிக் கொண்டு எஞ்சிய பகைவனை அழித்தல். இங்ஙனம் செய்யாமல் அவ்விருவரையுமே தனக்குப் பகைவராக்கிக் கோடல் என்றவாறு. ஈண்டு

“தன்றுணை யின்றால் பகையிரண்டால் தானொருவ
 னின்றுதுணையாக் கொள்கவற்றி னொன்று”   (குறள் - 875)

எனவரும் திருக்குறளை நினைக.

     “வழக்கினைப் பொருத்தல் முதலிய குற்றங்களைச் செய்து வைத்து அமைச்சருடனும் கூடாது அறிவிலியாகிய அரசன்” என்க. இனி இங்ஙன்மின்றி, பொருத்தல் முதலியவற்றைச் செய்யாத அமைச்சன் என்று பழைய வுரையாசிரியர் கூறுவர். செய்யா-செய்து; செய்யா: என்னும் வாய்ப்பாட்டுத் தெரிநிலை வினையெச்சம். தலைப்பட்டுக் கொணர்ந்து, ‘பொருளதிகாரம் வல்லாரை எங்குந் தலைப்பட்டிலேம்’ என்று வந்தார். வர அரசனும் புடை படைக்கவன்று,” எனவரும் இறையனார் களவியலுரையானும் உணர்க. மாறன்-பாண்டியன். புலவர்-கடைச்சங்கப் புலவர்.

12 - 16: முந்நூறு........................................கடவுள்

     (இ-ள்) கடல் அமுது எடுத்து கரையில் வைத்தது போல்-திருப்பாற் கடலைக் கடைந்து அதன்கணமைந்த அமிழ்தத்தைத் திரட்டி எடுத்துத்தேவர்கள் எளிதில் உண்ணும்படி கரையிடத்தே வைத்தாற்போன்று; முந்துறும் பெருமறை முளைத்து அருள்வாக்கால்-எல்லா நூலுக்கும் முந்திய பெரிய வேதங்கள் தோன்றுதற்கிடனான அருள் நிரம்பிய மொழியினாலே: பரப்பு இன்சுவை தமிழ்-பரப்பும் இனிய சுவையுமுடைய தமிழாகிய கடலினின்றும்; ‘அன்பினைந்திணை’ என்று-அன்பினைந்திணை என்று தொடங்கி; அறுபது சூத்திரம் திரட்டி-அறுபது சூத்திரமாகிய அமிழ்தத்தைத் தொகுத்து; மற்று அவர்க்கு-அப்பாண்டிய மன்னனுக்கும் சங்கப் புலவர்களுக்கும்; தெளிதரக் கொடுத்த-பொருளியலை நன்கு தெளிந்து கொள்ளும்படி வழங்கியருளிய; தென் தமிழ்க் கடவுள்-தென் தமிழின் நூலாசிரியனாகிய இறைவனும் என்க.

     (வி-ம்.) கடல்-திருப்பாற் கடல். இது பரப்புடைய இனிய தமிழ் மொழிக்குவமை. அமிழ்தம் இறையனார் அகப்பொரு நூலுக் குவமை. எல்லா நூல்களுக்கும் முந்திய பெரிய வேதங்கள் என்க. தமிழ்க் கடவுள்-தமிழ் நூலாசிரியனாகிய இறைவன். இறைவன் அகப்பொருள் இலக்கணம் செய்தருளிய வரலாற்றினை, “மதுரை ஆலவாயில் அழல் நிறக்கடவுள் சிந்திபான்: என்னை பாவம்! அரசற்குக் கவற்சி பெரிதாயிற்று; அதுதானும் ஞானத்திடையதாகலான், யாம் அதனைத் தீர்கற் பாலம் என்று இவ்வறுபது சூத்திரத்தையுஞ் செய்து மூன்று செப்பிதழகத்து எழுதிப் பீடத்தின் கீழிட்டான்” (இறையனார் அகப்பொருள். களவு. சூத்திரம். 1. உரை) எனவரும் களவியலுரைப் பகுதியானுணர்க.

17 - 18: தழல்....................................கிளை

     (இ-ள்) தழல்கண் தரக்கின் சரும ஆடையன்-தீயை யொத்த கண்ணையுடைய புலியினது தோலாகிய ஆடையை யுடையவனும் ஆகிய சோமசுந்தரக் கடவுள் எழுந்தருளியுள்ள: கூடல் அம்பெரும்பதி கூறார் கிளைஎன்-நான்மாடக் கூடலாகிய பெரிய அழகிய மதுரை மாநகரத்தைப் புகழ்ந்து வாழ்த்தாத மடவோருடைய சுற்றத்தார் வருந்துதல் போன்று வருந்துவதற்கு என்க.

     (வி-ம்.) தழல்போன்ற கண்ணையுடைய தரக்கு என்க. தரக்கு-புலி. (சூ. நிகண். 3: 3). கூறார்-புகழ்ந்து வாழ்த்தாத மடவோர். கிளை வருந்துதல் போன்று வருந்துதற்கு என விரித்துக் கொள்க.

19 - 22: நிறை.................................காண்குவர்

     (இ-ள்) நிரை நீர் கயத்துள்-நிறைந்த நீரையுடைய மடுவின்கண்; தாமரை-செந்தாமரையானது; ஒருநாள் நின்று தவம் செய்து-ஒரு காலில் நீண்ட காலம் நின்று தவம் செய்து; அன்புடன் பெற்ற திருமகட்கு-அன்போடு பெற்ற திருமகளை ஒத்த இவளுக்கு; அடுத்தது என் என்று ஒருமை காண்குவர்-இப்பொழுது பொருந்திய வேறுபாடு என்ன என்று நொதுமலர் எல்லோரும் கூடி ஐயுற்று ஆராய்குவர்; அதனால் நீ ஆற்றி இருத்தல் வேண்டும் என்க.

     (வி-ம்.) துகிர்க் கிளைக் கொடியே என்பது முன்னர்க் கூட்டப்பட்டது. திருமகள் தலைவிக்குவமை. வாளா திருமகளென்னாது கயத்துள் ஒருதாள் நின்று தாமரை தவம் செய்து அளியுடன் பெற்ற திருமகள் என்றமையால் இவளையும் இவள் தாய் தந்தையர் பெரிதும் தவம் செய்து பெற்றனர் என்பது கருத்தாகக் கொள்க. கயம்-மாடு. அளி-அன்பு. அடுத்தது-உண்டாகிய வேறுபாடு. ஆதலால் நீ ஆற்ற வேண்டும் என்பது குறிப்பெச்சம். இளிவரலைச் சார்ந்த பெருமிதம். பயன்-தலைமகளை ஆற்றுவித்தல்

     இதனை, கொடியே நீ மாந்தர்க்கு ஈதற்பொருட்டுக் காடு கடந்து சென்ற நம்பெருமான் பொருட்டுப் பழங்கண் கொண்டால் நொதுமலர் இவள் பெரும்பதி கூறார் கிளைபோல வருந்துதற்கு இவட்கு நேர்ந்தது என்னை என்று ஆராய்ந்து அலர் தூற்றுவர், ஆதலால் ஆற்றுக என வினை முடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.