|
|
செய்யுள்
51
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
பெருமறை
நூல்பெறு கோன்முறை புரக்கும்
பெருந்தகை வேந்த னருங்குணம் போல
மணந்தோர்க் கமுதுந் தணந்தோர்க் கெரியும்
புக்குழிப் புக்குழிப் புலன்பெறக் கொடுக்கு
மலையத் தமிழ்க்கால் வாவியுட் புகுந்து |
10
|
|
புல்லிதழ்த்
தாமரைப் புதுமுகை யவிழ்ப்ப
வண்டினம் படிந்து மதுக்கவர்ந் துண்டு
சேயிதழ்க் குவளையி னிரைநிரை யுறங்கு
நிலைநீர் நாட னீயே யிவளே
மலையுறை பகைத்து வானுறைக் கணக்கும் |
15
|
|
புட்குலஞ்
சூழ்ந்த பொருப்புடைக் குறவர்தம்
பெருந்தேன் கவருஞ் சிறுகுடி மகளே
நீயே, ஆயமோ டார்ப்ப பரிகிணை முழக்கி
மாயா நல்லறம் வளர்நாட் டினையே
இவளே, தொண்டகம் துவைப்பத் தொழிற்புனம் வளைந்து |
20
|
|
பகட்டினங்
கெல்லும் பழிநாட் டவளே
நீயே, எழுநிலை மாடத் திளமுலை மகளிர்
நடஞ்செயத் தரள வடந்தெறு நகரோய்
இவளே, கடம்பெறு கரிக்குல மடங்கல் புக்ககழத்
தெறித்திடு முத்தந் திரட்டுவைப் பினளே |
25
|
|
நீயே,
அணிகெழு நவமணி யலரெனத் தொடுத்த
பொற்கொடித் தேர்மிசைப் பொலிகுவை யன்றே
இவளே, மணிவாய்க் கிள்ளை துணியா தகற்ற
நெட்டித ணேறு மிப்புனத் தினளே
யாதலிற் பெரும்புக ழணைகுதி யாயி |
30
|
|
னாரணன்
படரத் தேவர்கெட் டோட
வளிசுழல் விசம்பின் கிளர்முக டணவிக் கருமுகில் வளைந்து பெருகிய போல
நிலைகெடப் பரந்த கடல்கெழு விடத்தை
மறித்தவ ருயிர்பெறக் குறித்துண் டருளித் |
|
|
திருக்களங்
கறுத்த வருட்பெறு நாயகன்
கூடல் கூடினர் போல
நாட னீயிவள் கழைத்தோ ணசையே. |
(உரை)
கைகோள் : களவு. தோழிகூற்று
துறை: குலமுறை
கூறி மறுத்தல்.
(இ
- ம்.) இதற்கு "நாற்றமும் தோற்றமும்" (தொல், களவி. 23) எனவரும்
நூற்பாவின்கண் 'குறையுறற்கு எதிரிய கிழவனை மறையுறப் பெருமையிற் பெயர்ப்பினும்' எனவரும்
விதிகொள்க.
1
- 9: பெருமறை . . . . . . . . . . நீயே
(இ-ள்)
நீயே - பெருந்தகாய்! நீயோவெனில்; பெருமறை நூல் பெறு கோல்முறை புரக்கும் - பெரிய
வேதத்தினின்றும் பிறந்த மனுநூல் விதிவழியே பெற்ற செங்கோல் முறையினைப் பாதுகாக்கும்;
பொருந்தகை வேந்தன் அருங்குணம் போல- பெருந்தன்மையையுடைய மனன்னுடைய பெறற்கரிய நற்குணம்
போன்று; மணந்தோர்க்கு அமுதும் - நின்னைக் கூடியவர்க்கு அமிழ்தத்தையும்; தணந்தோர்க்கு
எரியும் - பிரிந்தவர்களுக்கு நெருப்பினையும்; புக்குழி புக்குழி புலன்பெற கொடுக்கும்-
அவரவர் சென்ற சென்ற இடங்களிலே பிலப்பட வழங்காநின்ற; மலையத் தமிழ்க்கால்-
பொதியமலையினின்றும் வருகின்ற செந்தமிழ்த் தென்றல்; வாவியுள் புகுந்து- நீர்நிலைகளிலே
படிந்து; புல்இதழ் தாமரை புதுமுகை அவிழ்ப்ப - புறவிதழையுடைய தாமரையின் நாளரும்புகளை
மலர்த்துதலாலே; வண்டு இனம் படிந்து மது கவர்ந்து உண்டு - வண்டுக் கூட்டங்கள் மொய்த்துத்
தேனைக் கவர்ந்து பருகி; சேய் இதழ் குவளையின் - சிவந்த இதழ்களையுடைய குவளை மலர்களிடத்தே;
நிரை நிரை உறங்கும் - வரிசை வரிசையாகத் துயில்தற் கிடனான; நீர்நிலை நாடன் -
தநீர் நிலையுதலையுடைய மருதநிலத் தோன்றல் ஆகுவை என்க.
(வி-ம்.)
மறை - வேதம். நூல் - மனுநூல். கோல்முறை - செங்கோல் முறை. பெருந்தகை வேந்தன் நட்டோர்க்கு
இன்பமும் பகைவர்க்குத் துன்பமும் செய்யுமாறுபோலத் தமிழ்த் தென்றல் மணந்தோர்க்கு
அமுதும் தணந்தோர்க்கு எரியும் வழங்கும் என்பது கருத்தாகக்
கொள்க. மணந்தோர் - கூடியிருக்கங் காதலர், தணந்தோர் -பிரிந்து தனித்துறையுங்
காதலர். புலன்பெறக் கொடுத்தலாவது பொறிகளுக்குப் புலனாகச் செய்தல். மலையம் - பொதியமலை.
தமிழும் தென்றலும் மலையத்திற் பிறந்து வருதலால் மலையத் தமிழ்க்கால் என்று உரிமை
கூறினார். கால் - ஈண்டுத் தென்றல். புல்லிதழ் - புறவிதழ். பிதுமுகை - நாளரும்பு.
நீர்நிலை நாடன் எனமாறுக. நீ மருதநிலத் தோன்றல் என்றவாறு. எனவே நீ உயர்குடித்
தோன்றல் என்றாளாயிற்று.
9
- 12: இவளே . . . . . . . . . . மகளே
(இ-ள்)
இவளே மலை உறைபகைத்து வான்உறைக்கு அணக்கும் - இவள்தானும் மலையில் வீழும் அருவிநீரை
வெறுத்து மழைத்துளிக்கு வாயங்காக்கும்; புட்குலம் சூழ்ந்த - பறவையினங்களாற் சூழுப்பட்ட;
பொருப்புஉடை குறவர் தம் - மலைகளை உறைவிடமாகக் கொண்ட குறவர்கள் ஈன்ற; பெருந்தேன்
கவரும் சிறுகுடி மகள்-பெரிய தேனிறாலை அழித்துத் தேனைக் கவருகின்ற சிறுகடியில் பிறந்த
பெண்ணாவாள் என்க.
(வி-ம்.)
மலையுறை என்புழி உறை நீர்க்கு ஆகுபெயர். வான் உறை என்புழி வான்முகிலுக்கும் உறை நீர்த்துளிக்கும்
ஆகுபெயர். அணத்தல் - அண்ணாந்து நோக்குதல். வானுறைக்கு அணக்கும் புட்குலம் எனவே வானம்பாடி
என்னும் பறவைகள் என்பது பெற்றாம். பொருப்பு - மலை. தசிறுகுடி - குறிஞ்சி நிலத்தூர்கள்.
13
- 14: நீயே . . . . . . . . . . நாட்டினையே
(இ-ள்)
இன்னும்; நீயே ஆயமோடு ஆர்ப்ப அரிகிணை முழக்கி - நீயோவெனில் மகளிர் வட்டம்
ஆரவாரிக்கும்படி மரவைரத்தாற் செய்த மருதப்பறையைக் கொட்டி; மாயாநல் அறம் வளர்
நாட்டினை - அழியாத நல்ல அறத்தை வளர்க்கின்ற நாட்டினையுடையோய் என்க.
(வி-ம்.)
ஆயம் - மகளிர் கூட்டம். அரி - மரவைரம். கிணை - மருதப்பறை. அறம் வளர்க்கும் நாடெனவே
மருதநாடு என்பது பெற்றாம்.
15
- 16: இவளே . . . . . . . . . . நாட்டவளே
(இ-ள்)
இவளே தொண்டகம் துவைப்ப தொழில்புனம் வளைந்து - இனி இவளோவென்றால் கறிஞ்சிப்பறை
முழங்கத் தொழில் செய்யப்பட்ட தினைக் கொல்லைகளைச் சுற்றிவந்து; பகடு இனம் கொல்லும்
பழிநாட்டவள் - ஆங்குத் தினைப்பயிர்களைத் தின்னவரும் யானைக் கூட்டங்களைக் கொல்லும்
பழிச்செயலைச் செய்யும் குறிஞ்சி நிலத்தே தோன்றியவள் என்க.
(வி-ம்.)
தொண்டகம் - குறிஞ்சிப்பறை. துவைத்தல் - முழக்குதல். தொழில்- பயிர்த்தொழில்.
புனை - தினைப்புனம். பகடு - யானை.
பழிநாடு - பழிச்செயலைச் செய்யும் நாடு. அஃதாவது கொலைத் தொழில் செய்யும் நாடு
என்றவாறு. நீயோ அறம்வளர் நாட்டினை இவளோ பழிவளர்க்கும் நாட்டினள் என்றவாறு.
13
- 14: நீயே . . . . . . . . . . நகரோய்
(இ-ள்)
நீயே எழுநிலை மாடத்து இளமுலை மகளிர் நடம்செய-இனி நீ தானும் வானுறவெழுந்த நிலைமையினையுடைய
மாளிகையிடத்தே இளமையுடைய மகளிர் கூத்தாடாநிற்ப; தரளவடம் தெறும் நகரோய் - அவர்களுடைய
முத்துவடங்கள் அறுந்து சிந்துதற்கிடமாகிய வளமிக்க நகரத்தையுடையோய் என்க.
(வி-ம்.)
எழுநிலை மாடம்: வினைத்தொகை. இனி ஏழு மேனிலைகளையுடைய மாடமுமாம். நடம் - கூத்து.
தரளவடம் - முத்துமாலை.
19
- 20: இவளே . . . . . . . . . . வைப்பினளே
(இ-ள்) இவளே கடம்
பெறு கரிக்குலம் மடங்கல் புக்கு அகழ - இனி இவள்தான் மதத்தையுடைய யானைக் வட்டங்களைச்
சிங்கம் எதிர்ந்து அவற்றின் மத்தகத்தைப் பிளத்தலாலே; தெரித்திடும் முத்தம் திரட்டு
வைப்பினள் - சிதறா நின்ற முத்துக்களைப் பொறக்கிச் சேர்க்கின்ற வன்னிலத்தினள்
ஆவள் என்க.
(வி-ம்.)
கடம்-மதம். கரி - யானை, மடங்கல் - தசிங்கம். வைப்பு-நிலம். நீ நகரத்தையுடையோய்;
இவள் காட்டினள் என்றவாறு.
21
- 22: நீயே . . . . . . . . . . அன்றே
(இ-ள்)
நீயே அணிகெழு நவமணி அலர் எனத் தொடுத்த - இனி நீதானும் அழகு பொருந்திய ஒன்பது
வகைப்பட்ட மணிகளை மலர்மாலை போலத் தூக்கிய; பொன்கொடி தேர்மிசைப் பொலிகவை
- பொன்னாலியன்ற கொடிகளையுடைய தேரின்மேல் ஏறிப் பொலிவுறுகின்ற சிறப்பினையுடையை
என்க.
(வி-ம்.)
நவமணி - ஒன்பதுவகை மணிகள். அவையாவன: கோமேதகம், நீலம், பவளம், புருடராகம், மரகதம்,
மாணிக்கம், முத்து, வயிரம், வயிடூரியம் என்பன. அவர்: மாலைக்கு ஆகுபெயர். மலர்மாலையைத்
தூங்கவிடும் அத்துணை எளிமையாக நவமணி மாலைகளையே தூங்கவிடும் தேர்என அவனுடைய திருவுடைமையைச்
சிறப்பித்த படியாம். தொடுத்தல் - தொங்கவிடுதல். பொன்தேர், கொடித்தேர் எனத்
தனித்தனி கூட்டுக. அன்று ஏ: அசைகள்.
23
- 25: இவளே . . . . . . . . . . . . . . . ஆதலின்
(இ-ள்)
இவளே மணிவாய்க் கிள்ளை துணியாது அகற்ற - இனி இவளோவெனில் அழகிய அலகினையுடைய
கிளிகள் தினைக்கதிரைக்
கொய்யாமல் ஓட்டுதற்கு; நெடுஇதண் ஏறும் இப்புனத்தினள்- நெடிய பரண்மேலே ஏறும் சிறுமையினையுடைய
இத்தினைப் புனத்தின்கண் இருப்பவள்; ஆதலின் - இங்ஙனமிருத்தலின் என்க.
(வி-ம்.)
மணிவாய் - மாணிக்கம் போன்ற அலகுமாம். கிள்ளை - கிளி. துணியாது என்பது துயித்தலின்
எதிர்மறை, துணித்தல் - கொய்தல். இதண் - பரண். நீ பொன்தேரில் ஏறும் பெருமையுடையை;
இவள் கிளிகடியப் பரண் ஏறும் சிறுமையுடையள் என்றவாறு.
25
- 33: பெரும்புகழ் . . . . . . . . . . . . . . . நசையே
(இ-ள்)
பெரும்புகழ் அணைகுதி ஆயின் - தநீதானும் நின் தகுதிக்கேற்ற பெரிய புகழை அடைய வேண்டினையெனின்;
நாரணன் படர தேவர் கெட்டு ஓட - கடல் கடைந்த திருமால் என்செய்கோ எனக் கையற்று
வருந்தவும் வடந்தொட்டீர்த்த அமரர்கள் அஞ்சி ஓடாநிற்பவும்; வளிசுழல் விசும்பின்
கிளர் முகடு அணவி கருமுகில் வளைந்து பெருகியபோல - காற்றுச் சுழன்று வீசுதற்கிடனான
வானத்தினது உயர்ந்த முகட்டினை அளாவி கரிய முகில்கள் சூழ்ந்து பெருனினாற்போன்று;
நிலைகெட பரந்த கடல்கெழு விடத்தைமறித்து - தனது அமைதி நிலைமைகெடக் கலக்குண்டு பரவிய
திருப்பாற்கடலில் தோன்றிய நஞ்சினைத் தடுத்து; அவர் உயிர்பெற குறித்து- அத்திருமால்
முதலியோர் உயிருடன் வாழ்தலைக் கருதி; உண்டு அருளி திரு ளம் கறுத்த அருள்பெரு நாயகன்
- அள்ளி உட்கொண்டருளித் தனது அழகிய மிடறு கறுத்த அருளையுடைய முதற்கடவுளது; கூடல் கூடினர்போல
- மதுரை நகரத்தையடைந்த மெய்யடியார் அவாவறுத்தாற்போல நீதானும்; இவள் கழைத்தோள்
நசைநாடல் - இழிகுலத்தாளாகிய இவளுடைய மூங்கிலையொத்த தோளைத் தழுவும் ஆசையை நாடாதொழிக
என்க.
(வி-ம்.)
நாரணன் - திருமால். படர்தல் - நினைவான் வருந்துதல். வளி - காற்று. விசும்பு - வானம்.
கிளர்முகடு - உயர்ந்த முகடு. அணவுதல் - அளாவுதல். நஞ்சிற்கு முகில்கள் உவமை. கடல்-ஈண்டுப்
பாற்கடல். அவர் - அந்நாரணன் முதலியோர். களம் -மிடறு களம் கறுத்தமைக்குக் காரணமான
அருளையுடைய நாயகன் என்றும் பெருநாயகன் என்றும் தனித்தனி இயைக்க. மதுரையை எய்திய
அடியார் நசையை நாடாமையோல நீயும் இவள்தோள் நசையை நாடற்க என்றவாறு. நாடல்: அல்ஈற்று
எதிர்மறை வயிங்கோள். இவன் என்றது தலைவியை. கழை-மூங்கில். இச்செய்யுளோடு
"இவளே, கான
னண்ணிய காமர் சிறுகுடி
நீனிறப் பொருங்கடல் கலங்கவுள் புக்கு
மீனெறி பரதவர் மகளே நீயே நெடுங்கொடி
நுடக்கு நியம மூதூர்
கடுந்தேர்ச் செல்வன் காதன் மகனே
நிணச்சுறா வறுத்த வுணக்கல் வேண்டி
யினப்பு ளோப்பு மெமக்குநல னெவனோ
புலவு நாறுதுஞ் செலநின் றீமோ
பெருநீர் விளையுளெஞ் சிறுநல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ வன்றே
யெம்ம னோரிற் செம்மலு முடைத்தே" |
எனவரும் (நற்றிணை.
45) செய்யுளை ஒப்புக் காண்க.
இனி
நீயே நிலைநீர் நாடன், இவளே சிறுகுடி மகள், நீயே அறம்வளர் நாட்டினை, இவள் பழி
நாட்டவள்; நீ நகரோய், இவள் முத்தந்திரட்டு வைப்பினள், நீ தேர்மிசைப் பொலிகுவை,
இவள் இதணேறு மிப்புனத்தினள்; ஆதலின், நீ புகழணைகுதியாயின், அருட்பெருநாயகன் கூடல்
கூடினர்போல, இவள் தோணசை நாடல் என வினைமுடிவு செய்க, மெய்ப்பாடும் பயனும் அவை.
|