பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 55

நேரிசையாசிரியப்பா

 
   
5
  விடங்கொதித் துமிழும் படங்கெழு பகுவாய்க்
கண்டன்முண் முளைத்த கடியெயிற் றரவக்
குழுவினுக் குடைந்து குளிர்மதி யொதுங்கத்
தெய்வப் பிறையிருந்த திருநதற் பேதையைக்
கண்டுகண் டரவ மயிலெனக் கலங்க
10
  நெடுஞ்சடைக் காட்டினை யடுந்தீக் கொழுந்தெனத்
தலையே தலையா நகுதலை தயங்க
வணதிலை மாலையை நிறைமதித் திரளெனப்
புடைபுடை யொதுங்கி யரவுவாய் பிளப்ப
வொன்றினுக் கொன்று துன்றிய நடுக்கொடு
15
  கிடந்தொளி பிறழு நெடுஞ்சடைப் பெருமான்
படைநான் குடன்று பஞ்சவற் றுரந்து
மதுரை வவ்விய கருநடர் வேந்த
னருகர்ச் சார்ந்துநின் றரன்பணி யடைப்ப
மற்றவன் றன்னை நெடுந்துயில் வருத்தி
20
  யிறையவன் குலத்து முறையரின் மையினாற்
குருதித் தாரை கல்லொடு பிறங்க
மெய்யணி யளறாக் கைம்முழந் தேய்த்த
பேரன் புருவப் பசுக்கா வலனை
யுலகினிற் றமது முக்குறி யாக
25
  மணிமுடி வேணியு முருத்திரக் கலனு
நிலவுமிழ் புண்ணியப் பானிறச் சாந்தமு
மணிவித் தருள்கொடுத் தரச னாக்கி
யடுமா லகற்றி நெடுநாள் புரக்க
வையக மளித்த மணியொளிக் கடவு
30
  ணெடுமதிற் கூடல் விரிபுனல் வையையுட்
பிடிகுளி செய்யுங் களிறது போல
மயிலெனுஞ் சாய லொருமதி நுதலியை
மருமமுந் தோளினும் வரையற்ப் புல்லி
யாட்டுறு மூர னன்புகொ ணலத்தினைப்
35
  பொன்னுல குண்டவர் மண்ணுல கின்பந்
தலைநடுக் குற்ற தன்மை போல
வொன்றற வகற்றி யுடன்கலந் திலனே
லன்ன வூரனை யெம்மிற் கொடுத்துத்
தேரினுங் காவினு மடிக்கடி கண்டு
45
  நெட்டுயிர்ப் பெறிந்து நெடுங்கணீ ருகுத்துப்
பின்னுந் தழுவ வுன்னுமவ் வொருத்தி
யவளே யாகுவல் யானே தவலருங்
கருநீர்க் குண்டக ழுடுத்த
பெருநீ ராழித் தொல்லுல குழிக்கே.

(உரை)
கைகோள்: கற்பு, பரத்தை கூற்று.

துறை: தன்னை வியந்துரைத்தல்.

     (இ-ம்.) இதனை "புல்லுதல் மயக்கும்" (தொல்) எனவரும் நூற்பாவின்கண் இல்லோர் செய்வினை இகழ்ச்சிக் கண்ணும் என்பதனாற் கொள்க.

1 - 4: விடம்................... ஒதுங்க

     (இ-ள்) குளிர்மதி - தோழியீர்! ஈதொன்று கேண்மின்! குளிர்ந்த திங்களானது; விடம் கொதித்து உமிழும் - நஞ்சினைச் சினந்து வெளிப்படுத்துகின்ற; படமகெழு பகுவாய்-படமுடைய பிளவுபட்ட வாயினிடத்தே; கண்டல் முள் முளைத்த கடி எயிறு-தாழை முட்போல அரும்பி வளைந்துள்ள கடிக்கும் பற்களையுடைய; அரவக் குழுவினுக்கு உடைந்து ஒதுங்க - பாம்புக் கூட்டத்திற்கு அஞ்சி ஒதுங்கா நிற்பவும் என்க.

     (வி-ம்.) மதி குழுவினுக்கு ஒதுங்க என்க. தோரியீர்! ஈதொன்று கேண்மின் என வருவித்தோதுக.

4 - 7: தெய்வம் . . . . . . . . . . தயங்க

     (இ-ள்) அரவம் - அப்பாம்புக் கூட்டந் தானும்; தெய்வப் பிறை இருந்த திருநுதல் போதையை - அழிதலில்லாத பிறைத் திங்கள் இருந்தாற் போன்ற அழகிய நுதலையுடைய பார்ப்பதி யினை; கண்டு உகண்டு - பார்த்து நெளிந்து ; மயில் என கலங்கமயில் என்று அஞ்சி நெஞ்சு கலங்காநிற்பவும்; நகுதலை - விளங்குகின்ற வெண்டலைகள்; நெடுஞ்சடைக்காட்டினை - நெடியசடைத் திரளினைப் பார்த்து; அடுந்தீக் கொழுந்து என -இவை நம்மை நீறாக்கி அழிக்கும் தீக்கொழுந்துகள் என்று கருதி அஞ்சி; தலை ஏது என அலையா தயங்க - இனி யாம் அழியாதிருத்தற்குரிய இடம் யாதோ? என்று அஞ்சி அலைந்து தயங்கா நிற்பவும் என்க.

     (வி-ம்.) உலகப் பிறை போன்று அழிதலில்லாத பிறை என்பார் தெய்வப் பிறை என்றார். தெய்வம் - அழியாத் தன்மை. பேதை - இறைவி. உகண்டு உகளுதல் என்பதன் எச்சம். தலை - மாலையின்கண் உள்ள தலைகள். தலை ஏது - என்புழித் தலை இடம். அலையா - அலைந்து.

8 - 11 : அணி . . . . . . . . . . பெருமான்

     (இ-ள்) அரவு - பாம்புகள்; அணிதலை மாலையை - அணியப்பட்ட அத்தலை மாலையைக் கண்டு; நிறைமதி திரள் என -இவை நிறைந்த திங்கட் கூட்டம் என்று கருதி அவற்றை விழுங்கும் பொருட்டு; புடைபுடை ஒதுங்கி - செவ்வி நோக்கி அவை இயங்குந்தோறும் பக்கங்களிலே ஒதுங்கி; வாய் பிளப்பதம் வாயைத் திறவாநிற்பவும்; ஒன்றினுக்கு ஒன்று - இவ்வாறு ஒன்றின் பொருட்டு மற்றொன்று; துன்னிய நடுக்கொடு கிடந்து - பொருந்திய அச்சத்தோடே கிடப்ப; ஒளி பிறழும் நெடுஞ்சடைப் பெருமான்- ஒளி தவழா நின்ற நெடிய சடையினையுடைய சிவபெருமான் என்க.

     (வி-ம்.) மதி பாம்பிற்கும் அப்பாம்பு அம்மையாகிய மயிலுக்கும் தலை சடைக்கும் இங்ஙனம் ஒன்றற்கொன்று அஞ்சிக்கிடத்தற்கிடனான சடை என்க. கிடந்து - கிடப்ப. பிறழுதல் - தவழுதல். துன்னிய - பொருந்திய.

12 - 14: படை . . . . . . . . . . அடைப்ப

     (இ-ள்) நான்கு படை உடன்று - நால்வகைப் படையோடும் வந்து போர் புரிந்து; பஞ்சவன் துரத்து - பாண்டியனைத் துரத்திவிட்டு; மதுரை வவ்விய கருநடர் வேந்தன்-மதுரையைக் கைப்பற்றிய கருநடர் நாட்டு அரசன்; அருகர் சார்ந்து நின்று - சமணரைச் சார்ந்து ஒழுகி; அரன் பணி அடைப்ப - தசிவபெருனுக்குச் செய்யும் வழிபாடுகளைச் செய்யாமற் றடுத்ததனால் என்க.

     (வி-ம்.) நான்கு படைகளுடன் வந்து உடன்று என்க. உடன்று - போர் புரிந்து. பஞ்சவன் - பாண்டியன். கருநடம் - கர் மாகிய மயக்கம். அடுமால் : வினைத்தொகை. வையகம்: ஆகுபெயர். மணியும் ஒளியும் போலத் தானும் சத்தியும் பொருந்தியுள்ள கடவுள் என்க.

26 - 30: நெடுமதில் . . . . . . . . . . நலத்தினை

     (இ-ள்) நெடுமதில் சூழ்ந்த கூடல் - நெடிய மதில்களாற் சூழப்பட்ட நான்மாடக் கூடலின்கண்; விரிபுனல்வையையுள் - பரந்த நீராடல் செய்வித்த தலைவன்; அன்பு கொள் நலத்தினை - அன்பால் நுகர்ந்த இன்பத்தை என்க.

     (வி-ம்.) விரிபுனல்: வினைத் தொகை. குளி செய்தல் - குளிக்கச் செய்தல். பிடி -பெண்யானை. களிறது என்புழி அது பகுதிப் பொருளது. ஒருத்தி - ஒரு பரத்தை. மருமம் - மார்பு. வரை - அளவு, வரையறப்புல்லி எனவே பலகாலுந் தழுவி என்றாயிற்று ஊரன் - தலைவன். நலம் - இன்பம்.

31 - 40: பொன்னுலகு . . . . . . . . . . தொல்லுலகுழிக்கே

     (இ-ள்) பொன் உலகு உண்டவர் - விண்ணுலகத்தின் கண் இன்பம் நுகர்ந்தவர்; மண் உலகு இன்பம் தலை நடுக்குற்றதன்மை போல - மண்ணுலகத்தே நுகர்ந்த இன்பத்தை நினைத்துழி இருவருத்துத் தலை நடுங்கினாற்போல ஆகும்படி; ஒன்று அற அகற்றி - ஒருசேர நீக்குவித்து; உடன் கலந்திலனேல் - அத்தலைவனுடன் யான் கலவேனாயின்; தவல் அரும் கருநீர் கண்டு அகழ் உடுத்த-வற்றுதலில்லாத தரிய நீரையுடைய ஆழ்கடலை ஆடையாக உடுத்த; பெரு நீர் ஆழி - பெருமைப் பண்புடைய வட்ட வடிவிற்றாகிய; தொல் உலகு உழிக்கு - பழமையான இவ்வுலகினிடத்தே; யானே - நான்றானே; அன்ன ஊரனை எம் இல்கொடுத்து- அத்தலைவனை எமதில்லைன்கண் வரும்படி செய்து; தேரினும் - யாங்கள் விளையாடுதற் பொருட்டுத் தேரில் ஏறிச் செல்லுங் காலத்தும்; காவினும் - பொழில் விளையாடுமிடத்தும்; அடிக்கடி கண்டு - மறைந்திருந்து இடைவிடாமல் பார்த்து; நெடு உயிர்ப்பு எறிந்து - ஏங்கிப் பெருமூச் செறிந்து; நெடு கண் நீர் உகுத்து - நெடிய கண்ணினிடத்தே மிகவும் நீர் சிந்தி; பின்னுந் தழுவ உன்னும் - மீண்டும் அத்தலைவனைப் புணரக் கருதுகின்ற; அவ் வொருத்தி அவளே ஆகுவல்- அத்தகைய ஒருத்தியாகிய அத்தலைவியே ஆகக் கடவன் என்க.

     (வி-ம்.) இது தலைவி தலைவன் ஒரு பரத்தையோடு நீராடினமைகேட்டு இச்செய்தியைத் தன் பாங்காயினார்க்குக் கூற அச்செய்தியைப் பரத்தையின் தோழியர் கேட்டு அப்பரத்தைக்குக் கூற அது கேட்ட அப்பரத்தை தலைவி தன்னை இகழ்ந்தாளாகக் கருதி அத்தோழியர்க்குத் தன்னை வியந்தும் தலைவியை இகழ்ந்தும் கூறியபடியாம். பொன்னுலகு - மேனிலையுலகம். ஒன்று அற - ஒன்றாக நீங்க. தவல் - அழிதல். ஈண்டு வற்றுதல் என்க. குண்டு - ஆழ்ந்த. பெருநீர் - பெருமைப் பண்பு. ஆழி - வட்டம். உலகுழிக்கு என்புழி நான்கனுருபு வேற்றுமை மயக்கம்.

     இதனை, செஞ்சடைப் பெருமான், வேந்தன் சார்ந்து, பணியடைப் பத் துயில்வருத்தி, முழங்கை தேய்த்த பசுக் காவலனை முக்குறியாக வேணியுங் கலனுஞ் சாந்தமு மணிவித் தரசனாக்கிப் புரக்கவளித்த கடவுளது கூடல் வையையுள், களிறுபோல மதி நுதலியைப் புல்லியாட்டுற மூரனது நலத்தை யகற்றிக் கலந்திலனேல், ஊரனைக் கொடுத்துக் கண்டு எறிந்து நீருகுத்துத் தழுவ வுன்னுமவளே யானாகுவல் இத் தொல்லுககிலென வினை முடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.