|
|
செய்யுள்
60
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
நிறைமதி
புரையாது நிறைமதி புரையாது
தேரான் றெளிவெனுந் திருக்குறட் புகுந்துங்
குறைமதி மனனே நிறைமதி புரையா
துவர்க்கடற் பிறந்துங் குறையுடற் கோடியுங்
கருங்கவைத் தீநாப் பெரும்பொறிப் பகுவாய்த் |
10
|
|
தழல்விழிப்
பாந்த டானிரை மாந்தியு
மிச்சி லுமிழ்ந்து மெய்யுட் கறுத்துந்
தணந்தோர்ச் சினந்து மணந்தோர்க் களித்துங்
குமுத மலர்த்தியுங் கமலங் குவித்துங்
கடல்சூ ழுடலகில் மதிநடு விகந்தும் |
15
|
|
பெருமறை
கூறி யறைவிதி தோறு
முத்தழற் குடையோன் முக்கட் கடவுளென்
றறுத்திடும் வழக்குக் கிடக்க வொருகால்
வான்வர நதிக்கரை மருண்மக மெடுத்த
தீக்குணத் தக்கன் செருக்களந் தன்னுட் |
20
|
|
காண்டொறும்
விசைத்த கருப்புத் தரளமும்
வளையுமி ழாரமுஞ் சுரிமுகச் சங்கும்
வலம்புரிக் கூட்டமுஞ் சலஞ்சலப் புஞ்சமு
நந்தினக் குழுவும் வளவயி னந்தி
யுழவக் கணத்தர் படைவா ணிறுத்தங் |
25
|
|
கூடற்
கிறையோன் குரைகழற் படையா
லீரெண் கலையும் பூழிபட் டுதிர
நிலனொடு தேய்ப்புண் டலமந் தலறியுஞ்
சிதைந்துறைந் தெழுபழித் தீமதி புரையாது
முண்டகம் விளர்த்தி முதிரா தலர்ந்து |
|
|
மமுதநின்
றுறைந்து மறிவறி வித்துந்
தீக்கதி ருடலுட் செல்லா திருந்துந்
திளையாத் தாரைகள் சேரா
முளையா வென்றி யவண்முக மதிக்கே. |
(உரை)
கைகோள். களவு. தலைவன் கூற்று
துறை: முகங்கண்டு மகிழ்தல்.
(இ-ம்.) இதற்கு, "முன்னிலை யாக்கல்" (தொல். களவி. 10) எனவரும் நூற்பாவின்கண் 'நன்னய முரைத்தல்' எனவரும் விதி கொள்க.
1 - 3: நிறைமதி.................புரையாது
(இ-ள்) தேரான் தெளிவு எனும் - தேராள்றெளிவு என்னும் முதற்குறிப்பையுடைய; திருக்குறள் புகுந்தும்- திருக்குறளின் பொருளை ஆராய்ந்தறிந்தும்; மதிகுறை மனனே-அறிவு குறைந்த என் நெஞ்சமே கேள் (இவள் முகமதிக்கு) நிறைமதி புரையாது நிறைமதி புரையாது-முழுத்திங்கள் என்றும் ஒவ்வாது முழுத்திங்கள் எத்துணையும் ஒவ்வாது நிறைமதி புரையாது - முழுத்திங்கள் எவ்வாற்றானும் ஒவ்வாது காண் என்க.
(வி-ம்.) தேரான் தெளிவெனும் திருக்குறள்-"தேரான் றெளிவுந் தெளிந்தான்க ணையுறவுந், தீரா விடும்பை தரும்" (குறள்.) எனவரும் திறக்குறள். நீ ஆராயாமல் இவள் முகத்தை நிறைமதி ஒக்கும் என்கின்றனை. ஆதலால் நினக்குக் கற்றிருந்தும் அறிவில்லை என்றவாறு. தெளிவுபற்றி மும்முறை அடுக்கினான். இனி மேலே அத்திங்கள் ஒவ்வாமைக்கும் காரணம் கூறுகின்றான் என்க,
4 - 7 : உவர்க்கடல்......................கறுத்தும்
(இ-ள்) உவர்கடல் பிறந்தும்-இத்திங்களோ வெனில் உப்புக்கடலிற் பிறந்தும்; குறைஉடல் கோடியும் - நாளதொறும் தேய்கின்ற தன் உடலானது கூனியும்; கரு கவை தீ நா பெரு பொறி பகுவாய் தழல்விழி பரந்தள் - கரிய பிளவுள்ள நெருப்புமிழ்கின்ற நாக்கையும் பெரிய புள்ளி பரந்த பிளந்த வாயையும் கனலும் கண்களையுமுடைய இராகுவென்னும் பாம்பினால்; இரைமாந்தியம்- இரையாக உண்ணப்பட்டும் மிச்சில் உமிழ்ந்து-மிச்சிலாக உமிழப்பட்டும்; மெய்உள் கறுத்தும் தன உடலினுள்ளே மறுப்பட்டும் என்க.
(வி-ம்.) திங்கள் உவர்க்கடல் பிறந்தது என்றதனால் தலைவியோ ஏசாச் சிறப்பின் இசை விளங்கு பெருங்குடிப் பிறப்பினள் காண் என்றானானும். திங்கள் குறைஉடல் கோடியும் என்றதனால் தலைவியோ எழுச்சியுடைய நேரிய உடல் படைத்தவள் என்றானாம். திங்கள் பாம்பால் பற்றப்பட்டு உமிழப்படும் என்றதனால் தலைவி எஞ்ஞான்றும் தீயோராற் றீண்டப்படாத தூயவள் என்றானாம். திங்கள் களங்கமுடைத்தெனவே தலைவி வசை சிறிதும் இல்லாதாள் என்றானாம். உவர்-
உப்பு. கோடுதல்-கூனுதல், தழல்விழி-வினைத்தொகை. பாந்தள் தான்-என்புழிதான்: அசை. பாந்தள்-பாம்பு. அஃதாவது இராகுக்கோள், மாந்தல்-உண்ணுதல். உமிழ்தல் என்றதனால் மிச்சில் என்பது பெற்றாம்.
8
- 10: தணந்தோர்ச் .............................. இகந்தும்
(இ-ள்) தணந்தோர் சினந்தும் - தம்முட் பிரிந்த காதலர்களை வெகுண்டு வருத்தியும்; மணந்தோர்க்கு அளித்தும் - மம்முட் கூடியுள்ள காதலர்க்குத் தண்ணளி செய்தும் குமுதம் அலர்த்தியும்-குமுதமலரை மலரச்செய்தும்; கமலம் குவித்தும்- தாமரை மலரைக் கூம்பச்செய்தும்; கடல்சூழ் உலகில் - இங்ஙனம் கடலாற் சூழப்பட்ட இவ்வுலகத்தின்கண்; மதிநடு இகந்தும் - தன தறிவின்கண் நடுவுநிலைமையை விலக்கியம் (மதிநடு இகந்தும்-திங்களின் நடுவே மறைந்தொழிந்தும்); என்க.
(வி-ம்.) தணந்தோரைச் சினத்தலும் மணந்தோரை அளித்தலும் குமுதத்தை அலர்த்தலும் கமலத்தைக் குவிததலும் ஆகிய இச்செயல்கள் நடுநிலையற்ற செயல் ஆதலின் திங்கள் இக்குறைபாடுடைத்து. தலைவியோ இக்குறை சிறிதும் இலள் எனத் திங்கட்கும் தலைவிக்கும் வேறுபாடுணர்த்தியபடியாம். இன்னும் தலைவி குமுதமாகிய கண்ணையும் தாமரையாகிய முகத்தையும் ஒருசேர மலர்த்துவாள்காண் என்றானுமாயிற்று. மதிநடு இகந்தும் என்றதற்கு அறிவின்கண் நடுநிலைமையை யகற்றியும் எனவும் திங்களின் நடுவில் மறைந்தும் எனவும் சிலேடை வகையாற் பொருள் காண்க. மதி - அறிவு; திங்கள், (மாதம்).
(இ-ள்) பெருமறை கூறி அறை-விதிதோறும் பெரிய வேதங்கள் வெளிப்படுத்துக் கூறி முழங்குகின்ற விதிகளெல்லாம்; முத்தழற்கு உடையோன் முக்கண் கடவுள் என்று-மூன்றாகிய வேள்வித்தீக்குத் தலைவன் மூன்று கண்களையுடைய சிவபெருமானே என்று; அறுத்திடும் வழக்கு கிடக்க-வரையறுத்துக் கூறும் முறைமை ஒருசார் இருக்க என்க.
(வி-ம்.)
முதல் நூலாதலான் வேதத்தைப் பெருமறை என்றான். சொல்லி உணர்த்தும் விதி என்பார்
கூறி அறைவிதி என்றார். உடையோன்-ஈண்டுத் தலைவன் என்பதுபட நின்றது. முத்தீ-ஆகநீயம்,
தக்கணாக்கிநி, காருகபத்தியம் என்பது. முக்கண்-திங்களும் ஞாயிறுங் தீயுமாகிய மூன்று
கண்கள். அறுத்தல்-வரையறை செய்தல்.
11
- 13: பெருமறை ................................. கிடக்க
(இ-ள்) ஒருகால் - பண்டொரு காலத்தே; வான்வர நதிக்கரை - வானத்தினின்றும் இறங்கிய வரந்தரும் இயல்புடைய கங்கைப் பேரியாற்றின் கரையிடத்தே; மருள்மகம் எடுத்த தீ குணம் தக்கன் - தனது அறியாமையால் வேள்வி செய்யத் தொடங்கிய தீய குணத்தையுடைய தக்கனுடைய என்க.
(வி-ம்.) வரநதி - வரந்தரும் இயல்புடைய கங்கையாறு, மருள் - அறியாமை. மகம் - வேள்வி.
15
- 24: செருக்களம் ............................. புரையாது
(இ-ள்) செருக்களந் தன்னுள் - போர்க்களத்தின்கண்; கண்தொறும் விசைத்த கருப்புத் தரளமும-கணுக்கள் தோறும் சிதறிய கரும்பின் முத்துக்களும்; வளைஉமிழ் ஆரமும்-சங்களீன்ற முத்துக்களும்; சுரிமுகச் சங்கும் வலம்புரிக் கூட்டமும்; சுரிந்த முகமுள்ள இடம்புரிச் சங்குகளும், வலம்புரிச் சங்கின் கூட்டமும்; சலஞ்சலப் புஞ்சமும் -சலஞ்சலம் என்னும் சங்குக் கூட்டமும்; நந்து இனக் குழுவும் - இப்பி என்னும் சங்குக் கூட்டமும் வளம்வயின் நந்தி-வளமுற்ற இடங்களிலே பெருகி; உழவக்கணத்தர் படைவாள் நிறுத்தம்-உழவர் கூட்டத்தார் உழாநின்ற கலப்பைக் கொழுவைத் தடுக்கும் மருதம் சூழ்ந்த; கூடற்கு இறைவன் மதுரைப் பெருமானது; குரைகழல் படையால்- முரலுகின்ற வீரக்கழலணிந்த திருவடியாகிய படைககலத்தால்; ஈர் எண் கலையும் பூழிபட்டு உதிர-தன்னுடைய பதினாறு கலைகளும் துகளாகி யுதிரும்படி; நிலனொடு தேய்ப்புண்டு-நிலத்தோடு தேய்க்கப்பட்டு; அலமந்து அலறியும் - புகலிடங் காணாது நெஞ்சு சுழன்று கதறியும்; சிதைந்து உழைந்து எழும்-அழிந்து சாகாதிருந்து பின்னர் நாணமின்றி எழாநின்ற; பழி தீ மதி புரையாது . பழியினை யுடைய தீய இத்திங்கள் நந்தலைவியின் முகத்தை ஒவ்வாது காண்! என்க.
(வி-ம்.) தக்கன் போர்க்களத்தில் இறையோன் குரைகழற்படையால் தேய்ப்புண்டு அலறியும் இவ்வாறு பல்வேறு பழிகளையுடைய மதி ஒவ்வாது என்றவாறு. செருக்களம்-போர்க்களம். கண்-கணு. கருப்புத் தரளம்-கரும்பிற் பிறக்கும் முத்து, வளை-சங்கு. வலம்புரிக் கூட்டம் எனப் பின் கூறுதலால் சுரிமுகச் சங்கு, நந்து என்றது இப்பியை. குரைகழல்-அன்மொழித்தொகை. சிதைந்து உறைந்து என்றது இங்ஙனம் சிதைந்தும் சாகாதிருந்து என்பதுபட நின்றது. எழும் என்றது நாணமின்றி எழும் என்பதுபட நின்றது. தீ மதி - தீய மதி. புரைதல் - நிகர்த்தல்.
25 - 29: முண்டகம்............................மதிக்கே
(இ-ள்) முண்டகம் விளர்த்தி-செந்தாமரைப் பூவை வெளுக்கச் செய்து; முதிராது அலர்ந்தும்-முதிர்ந்து வாடாமல் எப்பொழுதும் மலர்ந்தும்;
அமுதம் நின்று உறைந்தும்- தங்கண் அமிழ்தம் ஒழியாமல் பொருந்தப்பட்டும்; அறிவு அறிவித்தும்
- தன் கருத்தினை மெய்ப்பாட்டால் உணர்த்தியும்; தீக்கதிர் உடலுள் செல்லாதிருந்தும்
- தீப்பிழம்பாகிய கதிரவன் உடலில் சென்று மறையாதிருந்தும்; தாரைகள் திளையா விண்மீன்களோடு
கூடிச் சேராமலும்; முளையா-(பகலில் அழிந்து) இரவில் தோன்றாமலும்; வென்றி கொண்ட
இவள் முகமதிக்கு - இவ்வாற்றால் இத்திங்களை வெற்றிகொண்ட இவள் முகமாகிய திங்களுக்கு
என்க,
(வி-ம்.)
முண்டகம்-தாமரை. திங்களில் வானோர் உண்ணுதலால் அமுதம் குறைவதாம். இவள் முகத்தில்
அங்ஙனம் குறைவதில்லை என்பான் அமுதம் நின்று உறைந்தும் என்றான். திங்கள் உயிரில்
பொருள், இவள் முகமதி உயிரும் உணர்ச்சியும் உடைத்து என்பான் அறிவறிவித்தும் என்றான்.
இவள் திங்கள்போல் தீயோருடன் சேர்தல் இலள் என்பான் தீக்கதிர் உடலுள் செல்லாதிருந்தும்
என்றான். தாரை- தாரகை. இவள் இழிந்தாரோடு சேர்தலிலள். திங்கள் இழிந்தாரோடு
கூடும் என்பான், தாரகை திளையா சேரா என்றான். முளையா என்றது அழிந்து தோன்றாத என்றவாறு.
சேராத முறையாத எனல்வேண்டிய பெயரெச்சங்களின் ஈறுகள் தொக்கன.
இனி,
குறைமதி மனனே! இவள் முகமதிக்கு, கூடற் பெருமான் கழற்படையால் தக்கன் யாகசாலையாகிய
செருக்களத்தில் நிலனொடு தேய்ப்புண்டலறிச் சிதைந்தெழுந் தீமதியாகிய நிறைமதி புரையாது
புரையாது என வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.
|