பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 64

நேரிசையாசிரியப்பா

 
   
5
  செங்கோற் றிருவுடன் றெளிந்தறம் பெருக்கிய
மறுபுல வேந்த னுறுபடை யெதிர்ந்த
கொடுங்கோற் கொற்றவ னெடும்படை யனைத்துஞ்
சேர வறந்த திருத்தகு நாளி
லவன்பழி நாட்டு நடுங்குநற் குடிகள்
10
  கண்ணோடு கண்ணிற் கழறிய போல
வொருவரி னொருவ ருள்ளத் தடக்கித்
தோன்றா நகையுடன் றுண்டமுஞ் சுட்டி
யம்ப றூற்று மிவ்வூ ரடக்கிக்
கடல்நிடந் தன்ன நிரைநிரை யாய
15
  வெள்ளமு மற்றையர் கள்ளமங் கடந்து
தாயவர் மயங்குந் தனித்துயர் நிறுத்திப்
பறவை மக்களைப் பரியுநர்க் கொடுத்துக்
கிடைப்பல்வல் யானே நும்மைத் தலைத்தெழு
தாளியுங் கொன்றையுந் தழைத்தலின் முல்லையும்
20
  பாந்தளுந் தரக்கும் பயிறலிற் குறிஞ்சியு
முடைத்தலை யெரிபொடி யுடைமையிற் பாலையு
மாமையுஞ் சலமு மேவலின் மருதமுங்
கடுவுஞ் சங்கமு மொளிர்தலி நெய்தலு
மாகத் தனது பேரருண் மேனியிற்
25
  றிணையைந் தமைத்த விணையிலி நாயகன்
வருந்தொழி லனைத்தும் வளர்பெரும் பகலே
யெரிவிரிந் தன்ன விதழ்ப்பஃ றாமரை
யருண்முகத் திருவொடு மலர்முகங் குவிய
மரகதப் பாசடை யிடையிடை நாப்ப
30
  ணீலமு மணியு நிரைகிடந் தென்ன
வண்டொடு குமுத மலர்த்திதழ் விரிப்பக்
குருகுஞ் சேவலும் பார்ப்புடன் வெருவிப்
பாசடைக் குடம்பை யூடுகண் படுப்பத்
துணையுடைன் சகோதரங் களியுடன் பெயர்ந்து
  விடுமமு தருந்த விண்ணத் தணக்கச்
சுரிவளைச் சாத்து நிறைமதி தவழு
மெறிதிரைப் பழனக் கூடற்
செறிகவின் றம்ம திருவொடும் பொலிந்தே.

(உரை)
கைகோள்: களவு. தோழிகூற்று

துறை: வழிப்படுத்துரைத்தல்.

     (இ-ம்.) இதற்கு "தலைவரும் விழுமம்" (தொல்.) எனவரும் நூற்பாவின்கண் 'விடுத்தற் கண்ணும்' எனவரும் விதி கொள்க.

1 - 5: செங்கோல்................................. குடிகள்

     (இ-ள்) செங்கோல் திருவுடன் தெளிந்து அறம் பெருக்கிய - செங்கோலாகிய திருமகளுடனே அரசியல் நூலை ஆராய்ந்து தெளிந்து அரசியலறத்தை வளர்த்த; மறுபுல வேந்தன் - வேற்று நாட்டரசனது; உறுபடை எதிர்ந்த கொடுங்கோல் கொற்றவன் -பெரிய படைகளால் தாக்கப்பட்ட கொடுங்கோலரசனுடைய; நெடும்படை அனைத்தும் சேரவறந்த - அளவிறந்த படைகள் முழுவதும் ஒருசேர அழிந்துபட்ட; திருத்தகு நாளில் - நன்மை பயக்கும் நாளின்கண்; அவன் - அக்கொடுங்கோலரசனுடைய; பழிநாட்டு நடுங்கும் நல்குடிகள் - பழிபட்ட நாட்டின்கண் வாழுகின்ற துன்புற்று நடுங்கிய நல்ல குடிமக்கள் என்க.

     (வி-ம்.) செங்கோல் - செங்கோன்மை. அஃதாவது, அரசனாற் செய்யப்படும் முறையினது தன்மை. அம்முறை ஒருபாற் கோடாது செவ்விய கோல்போறலிற் செங்கோலெனப்பட்டது. வடநூலாரும் தண்டமென்றோர். திரு-திருமகள்; செல்வமுமாம். அரசனுக்குச் செங்கோன்மையிற் சிறந்த செல்வம் பிறிதின்மையின் அதனைத் திரு என்றார். "அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல்" எனவரும் திருக்குறளையும் (குறள்) நோக்குக. தெளிந்து என்பது அரசியல் நூல் முறைகளைத் தெளிந்து என்றவாறு. அறம் - அரசியலறம். மறுபுலம் - வேற்று நாடு. உறுபடை என்புழி உறு மிகுதிப்பொருட்டாய் உரிச்சொல். கொங்கோற் கொற்றவன் என்புழிக் கொற்றவன் என்பது இகழ்ச்சி. கொடுங்கோல்-செங்கோன்மையின் மறுதலை. இது வளைந்தகோல் போறலின் கொடுங்கோல் எனப்பட்டது. வறந்த - அழிந்துபட்ட. கொடுங்கோல் மன்னவன் இறந்த நாள் நாட்டிற்கு நன்மை தொடங்கு நாளாதலின் அதனைத் தருத்தகு நான் என்றார்.

6 - 9: கண்ணொடு...........................அடக்கி

     (இ-ள்) கண்ணொடு கண்ணில் கழறியபோல - மாந்தர் அச்சத்தால் வாய்விட்டுச் சொல்லாமல் பிறர் கண்களோடு தம் கண்களால் பேசிக்கொண்டதுபோல; இவ்வூர்- இந்த ஊர் மக்கள்; ஒருவரின் ஒருவர் சொல்ல - ஒருவரோடொருவர் சொல்லி; உள்ளத்து அடக்கி - தத்தம் நெஞ்சிலேயே வெளிவிடாதடக்கி; தோன்றா நகையுடன் துண்டமும் சுட்டி - வெளிப்படாத நகைப்போடே மூக்கின்மேல் விரல் இட்டுக் குறித்து; தூற்றும் அம்பல் அடக்கி- புறங்கூறுகின்ற அலர்மொழியைக் கூறாது அடக்கி என்க.

     (வி-ம்.) கொடுங்கோல் மன்னனுக்கு அழிவு வந்துற்றபொழுது அவனால் இன்னலுற்ற குடிமக்கள் அஞ்சி ஒருவரோ டொருவர் கண்களால் பேசிக்கொள்வது தலைவியின் ஒழுக்கம் பற்றி ஊர் மாக்கள் தம்முள் ஒருவரோடொருவர் பேசும் அம்பலுக்குவமை. அம்பல்-ஒலி வெளிப்படாது தம்முள் மெல்ல முகிழ் முகிழ்த்துப் பேசுதல். இங்ஙனம் பேசுவோர் மூக்கில் விரலைவைத்துப் பேசுதல் வழக்கம். இதனை,

"சிலரும் பலருங் கடைக்க ணோக்கி
 மூக்கி னுச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி
 மறுகிற் பெண்டி ரம்ப றூற்ற"        (நற்றினை.. 149)

எனவரும் செய்யுளானும் உணர்க.

10 - 14: கடல்...................... நும்மை

     (இ-ள்) கடல் கிடந்து அன்ன நிரைநிரை ஆயவெள்ளமும் - கடல் கிடந்தாற்போல அணி அணியாக நின்ற தோழிமார் கூட்டத்தையும்; மற்றையர் கள்ளமும் கடந்து- பிறசுற்றத்தாருடைய வஞ்சத்தையும் நீங்கி; தாயவர் மயங்கும் தனித்துயர் நிறுத்தி-நம் தாய்மார் நின் பிரிவினால் மயங்காநின்ற ஒப்பற்ற துன்பத்தையும் ஆற்றி; பறவை மக்களை பரியுநர் கொடுத்து-யாம் அன்புடன் வளர்த்த கிளி முதலிய பறவையாகிய குஞ்சுகளை நம்போல் அன்புறுவோரிடத்துப் பேணும்படி ஒம்படை செய்து; வல் நும்மை யானே கிடைப்பல்-விரைவில் நுங்களிடத்தே யானே வந்து சேருவேனாக என்க.

     (வி-ம்.) கடல்போல மிக்க ஆயவெள்ளம் என்றவாறு. ஆய வெள்ளம்- தோழியமார் கூட்டம். மற்றையர் என்றது ஏனைச் சுற்றத்தாரை. கள்ள்ம்- வஞ்சகம். தாயவர் என்புழி அவர் பகுதிப்பொருட்டு. நற்றாயும் செவிலித் தாயாரும் எனத் தாய்மார் பலராகலின் பன்மை கூறினள். தனித்துயர் - ஒப்பற்ற துன்பம். மகப் பிரிதலால் வரும் துன்பமாகலின் அங்ஙனம் கூறினாள். மக்கள் போல வளர்த்தலின் பறவைகளையே மக்கள் என்றாள் எனினுமாம். குஞ்செனின் வழுவமைதியாகக் கொள்க. பரியுநர்- அன்புறுவோர். இனி பரிக்குநர் என்பது பரியுநர் என்று மருவி நின்றது எனினுமாம். பரிக்குநர்- பாதுகாப்பவர். இது அம்மகளிரின் பேரன்பினைப் புலப்படுத்துகின்றது. இதனோடு தன் கணவனுடன் நாடிறந்து காடு நோக்கிச் செல்லும் சீதை சுமந்திரனை நோக்கி.