|
|
செய்யுள்
78
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
மதியமுடல்
குறைந்த வெள்ளாங் குருகினம்
பைங்கா றடவிச் செங்கய றுரந்துண்டு
கழுக்கடை யன்னதங் கூர்வாய்ப் பழிப்புல
வெழின்மதி விரித்தவெண் டளையிதழ்த் தாமரை
மலர்மலர் துவட்டும் வயலணி யூர |
10
|
|
கோளகைக்
குடிலிற் குனிந்திடைந் தப்புறத்
திடைநிலை யற்ற படர்பெரு வெளியகத்
துடன்முடக் கெடுத்த தொழில்பெறு வாழ்க்கைக்
கவைத்தலைப் பிறையெயிற் றிருளெழி லரக்க
னமுதமுண் டிமையா தவருமங் கையருங் |
15
|
|
குறவருங்
குறவத் துணையரு மாகி
நிலம்பெற் றிமைத்து நெடுவரை யிரும்பிடைப்
பறவையுண் டீட்டிய விறானற வருந்தி
யந்நிலத் தவரென வடிக்கடி வணங்கும்
வெள்ளியங் குன்றக முள்ளுறப் புகுந்தொரு |
20
|
|
தேவனு
மதன்முடி மேவு முளனா
மெனப்புயங் கொட்டி நகைத்தெடுத் தார்க்கப்
பிலந்திறந் தன்ன பெருவா யொருபது
மலைநிரைத் தொழுக்கிய கரமிரு பத்தும்
விண்ணுடைத் தரற்றவுந் திசையுட்க முரியவுந் |
25
|
|
தாமரை
யகவயிற் சேயிதழ் வாட்டிய
திருவடிப் பெருவிரற் றலைநக நுதியாற்
சிறிதுமலை யுறுத்த மதிமுடி யந்தணன்
பொன்னணி மாடம் பொலிநகர்க் கூட
லாவண விதி யனையவ ரறிவுறி |
|
|
னூருணி யன்னநின் மார்பகந் தோய்ந்தவென்
னிணைமுலை நன்ன ரிழந்தன வதுபோன்
மற்றவர் கவைமன மாழ்கிச்
செற்றநிற் பகர்வரிக் காறீண் டலையே. |
(உரை)
கைகோள்: கற்பு. தலைவி கூற்று
துறை: அணைந்தவழியூடல்.
(இ-ம்)
இதற்கு அவனறிவு ஆற்ற அறியு மாகலின் (தொல். கற்பி. 6) எனவரும் நூற்பாவின்கண்
புதுவோர் சாயற்கு அகன்ற கிழவனைப் புலம்பு நானிகட்டி இயன்ற நெஞ்சம் தலைப்பெயத்
தருக்கி எதிர்பெய்து மறுத்த வீரத்து மருங்கினும் எனவரும் விதிகொள்க.
1-5:
மதியம்.....................ஊர
(இ-ள்)
மதியம் உடல் குறைந்த வெள்ளாங் குருகு இனம்-திங்களினது உடலின் நிறத்தைக் குறைபடுத்திய
நிறத்தையுடைய வெள்ளைக் கொக்கினங்கள்; பைங்காழ் தடவி செங்கயல் துரந்து உண்டு-தமது
பசிய காலால் தடவிச்சிவந்த கயல்மீன்களைத் துரத்தியுண்டு; கழுக்கடை அன்ன தம் கூர்வாய்
வழிப்புலவு-ஈட்டி நுனியையொத்த தமது கூரிய அலகிலுள்ள பழிக்கத்தகுந்த புலாலை; மதி எழில்
விரித்த வெண்தளை இதழ் தாமரை மலர்மலர்-திங்களினது அழகைத் தன்னிடத்தே காட்டிய
வெள்ளிய கட்டமைந்த இதழையுடைய தாமரையின் மலர்ந்த மலரிலே; துவட்டும் வயல்அணிஊர
- துடைத்துக் கொள்வதற்கிடமான வயல்கள் அழகு செய்கின்ற ஊரையுடையோய் என்க.
(வி-ம்.)
வெள்ளாங் குருகின் நிறத்தை நோக்குழித் திங்களின் நிறம் குறைந்தவெண்மையாகத் தோன்றுதலின்
மதியம் உடல் குறைந்த வெள்ளாங் குருகு என்றாள். மதியம்-திங்கள். வெள்ளாங் குருகு-வெள்ளைக்கொக்கு.
பைங்கால் தடவி செங்கயல் துரந்துண்டு என்புழிச் செய்யுளின்பம் உணர்க. கழுக்கடை-ஈட்டியின்
நுனி. புலவு-புலனாற்றம். மதிபோல ஒளிவிரித்த வெண்டாமரை என்க. மலர்மலர்: வினைத்தொகை.
துவட்டல்-துடைத்தல்.
6-9:
கோளகை....................அரக்கன்
(இ-ள்)
கோளகைக் குடிலில் குனிந்து இடைந்து- அண்டகோளகையாகிய குடிலின்கண் செல்லும்போது தலை
குனிந்து சென்று விலகி; அப்புறத்து இடைநிலை அற்ற பெருவெளி அகத்து- அவ்வண்டகோளகைக்குப்
புறத்தின்கன் அமைந்த தடையற்ற பெரிய பரந்த வெளியிடத்து; முடக்கு உடல் எடுத்த தொழில்
பெறுவாழ்க்கை- முடங்கிய உடம்பொடு தோன்றிய இடையறாத தொழிலைப்பெற்ற வாழ்க்கையினையுடைய;
கவைத்தலைப் பிறை எயிறு-பிளவான நுனியினையுடைய பிறைபோன்ற பற்களையும்; இருள் எழில்
அரக்கன்-இருண்ட நிறத்தையுங் கொண்ட இராவணன் என்க.
(வி-ம்.)
கோளகை-அண்டம். குடில்-சிறுவீடு. சிறுவீட்டினுட் செல்வோர் குனிந்து நுழைதல் இயல்பாகலின்
குனிந்து விலகி என்றாள். அப்புறம்- அண்டகோளகைக்கு அப்பால். உடலெடுத்தல்- தோன்றுதல்.
இஃது இராவணன் எயிற்றுக்குவமை. இருள் எழில் என்புழி எழில் நிறத்திற்காயிற்று.
10-15: அமுதம்.....................புகுந்து
(இ-ள்)
அமுதம் உண்டு இமையாதவரும் மங்கையரும்- அமிழ்தத்தை உண்ணலால் கண் இமைத்தலில்லாத
தேவர்களும் அவர்தம் மகளிரும்; குறவரும் குறவத்துணையரும் ஆகி-குறிஞ்சிநில மாக்களாகிய
குறவர்களும் அவர்தம் வாழ்க்கைத் துணைவியராகிய குறத்தியரும் ஆகி; நிலம்பெற்று இமைத்து-தம்முலகத்தை
விட்டு இந் நிலவுலகத்தே வந்து இமையாத தங்கண்களை இமைத்து; நெடுவரை இறும்பிடை-நெடிய
மலைச்சாரலில் உள்ள சோலையில்; பறவை உண்டு ஈட்டிய இறால்நறவு அருந்தி-வண்டுகள் மலர்தொறும்
சென்று கவர்ந்து சேர்த்த இறாட்டின் கண்ணுள்ள தேனை உண்டு; அ நிலத்தவர் என-அந்தக்
குறிஞ்சிநில மாக்களைப்போல; அடிக்கடி வணங்கும் வெள்ளி அம்குன்றகம் உள்உறப் புகுந்து-
இடைவிடாமல் வணங்குகின்ற சிறப்பினையுடைய வெள்ளி மலையிடத்தே உள்ளே நுழைந்து என்க.
(வி-ம்.)
இமையாமைக்கு அமுதம் உண்ணுதல் குறிப்பேதுவாய் நின்றது. குறவத்துணையர் என்புழிக் குறத்துணை
அத்துச்சாரியை பெற்றதென்க. இனி குறவர்த் துணையர் எனல்வேண்டிய சொற்றொடரின்கண்
ரகரம் ஏடெழுதுவோர் பிழையால் விடப்பட்டது என்று கருதவுங் கூடும். நிலம்பெற்று என்றமையால்
வானுலகத்தை விட்டு என்பது பெற்றாம். தம்மைப் பிறர் ஐயுறாமைப் பொருட்டுக் கண்ணிமைத்து
நறவும் அருந்தினர் என்க. இறும்பு-சோலை. பறவை-ஈண்டு வண்டு. தேனை உண்டுவந்து உமிழ்ந்து
சேர்த்துவைத்தலின் உண்டு ஈட்டிய இறால் எனப்பட்டது. இறால்- இறாட்டு; தேனடை. அந்நிலம்-மலையும்
மலைசார்ந்த இடமுமாகிய குறிஞ்சிநிலம். வெள்ளி மலையில் எழுந்தருளியுள்ள இறைவனை வணங்குதற்
பொருட்டுத் தேவரும் மகளிரும் குறவரும் குறத்தியருமாய் வந்து இடையறாது வணங்கினர் என்பது
கருத்து.
15-23:
ஒரு தேவனும்.........................................அந்தணன்
(இ-ள்)
அதன்முடி ஒருதேவனும் மேவும் உளனாம்- அவ்வெள்ளி மலையின் உச்சியை ஒருகடவுளும் பெரிதும்
விரும்பும் எனவும் மேலும் அவ்வுச்சியின்கண் அக்கடவுள் எப்பொழுதும் எழுந்தருளியிருக்கும்
எனவும் கேள்வியுற்று; புயங்கொட்டி நகைத்து-தன் தோளைக் கையால் தட்டிச்சிரித்து;
எடுத்து ஆர்க்க-அவ்வெள்ளிமலையைத் துக்கி ஆரவாரிக்க, அங்ஙனம் ஆரவாரித்த இராவணனுடைய;
பிலம் திறந்து அன்ன ஒருவாய் ஒருபதும்- குகையினைத் திறந்தாலொத்த பெரிய வாய் பத்தும்;
மலைநிரைத்து ஒழுக்கிய கரம் இருபத்தும்-மலைகளை வரிசையாய் வைத்தாலொத்த கைகள் இருபதும்;
விண் உடைத்து அரற்றவும்; விண்ணுலகம் உடையும்படி முறையே அழவும்; திசை உட்க முரியவும்-திசைநடுங்கும்படி
நெரியவும்; தாமரை அகவையின் சேஇதழ் வாட்டிய-தாமரைமலரின் உள்ளிடத்ததாகிய சிவந்த
இதழையும் வாடச்செய்த; திருவடி பெருவிரல் தலைநகம் நுதியால்-தனது அழகிய அடியின்கண்ணதாகிய
பெருவிரலின் நகத்தின் நுனியால்; சிறிது மலை உறுத்த- ஒரு சிறிது அம்மலையை அழுத்திய;
மதிமுடி அந்தணன்-பிறை சூடிய அறவாழி அந்தணனாகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள என்க.
(வி-ம்.)
பிலம்-குகை. அரற்றுதல்-அழுதல். உட்குதல்- நடுங்குதல். மதிமுடி அந்தணன்-சிவபெருமான்.
24-29:
பொன்.....................................தீண்டலையே
(இ-ள்)
பொன் அணி மாடம் பொலிநகர்க்கூடல்-பொன்னால் இயன்ற அழகிய மாடங்களாலே பொலிவுபெற்ற
மதுரைமா நகரில் உள்ள; ஆவணவீதி அனையர்-கடைத்தெருவினை யொத்த நின்னுடைய பரத்தைமகளிர்;
அறிவுறின்-அறிவாராயின்; ஊருணி அன்ன நின்மார்பு அகம்தோய்ந்த-உருணியை யொத்த நின்
மார்பினிடத்தே புணர்ந்த; என் இணை முலை-என் இரண்டு முலைகளும்; நன்னர் இழந்தன-தமக்குரிய
நன்மையை இழந்ததுபோல; மற்றவர் கவைமனம் மாழ்கி செற்றம் நின் பகர்வர்-அப்பரத்தையர்களது
கவர்பட்ட நெஞ்சமானது நலம் இழந்து வருந்தி நின்னையும் சினப்பர்; இ கால் தீண்டலை-ஆதலால்
நீ என்னுடைய இந்தக் கால்களைத் தீண்டாதொழிக என்க.
(வி-ம்.)
பொன் அணி மாடம்-பொன்னாலியன்ற மாடம், நிழல்பட்ட மாடம் எனத் தனித்தனி கூட்டுக.
ஆவணவீதி- கடைத்தெரு. கடைத்தெருவில் எல்லோரும் சென்று பண்டம் கொள்ளுதல்போல்
பரத்தையரிடத்தும் வரையறையின்றி எல்லோரும் சென்று இன்பங் கோடலின் ஆவணவீதி அனையவர்
என்றாள். ஊருணி-ஊர்ப் பொதுக்குளம். ஊருணியின்கண் எல்லோரும் சென்று நீருண்ணுதல்
போல நின்மார்பையும் பரத்தை மகளிரெல்லாம் பொதுஉண்பர் என்பாள் ஊருணி அன்ன
நின் மார்பு என்றாள். பரத்தையரைத் தோய்ந்த நின்மார்பைத் தோய்தலின்
என்முலைகள் நலம் இழந்தாற்போல என்னைத் தோய்த்தலின் நின்பரத்தையர் மனநலம்
இழந்து வருந்துவர் என்பது கருத்து. செற்றம் பகர்தல்- சினந்து வைதல். இக்கால் என்பது
தூயவாகிய என்னுடைய இந்தக் கால்கள் என்பதுபட நின்றது.
இனி, இசெய்யுளில்
வெள்ளாங்குருகு புலால் நாறும் கயல் மீனைத் தின்று தன் வாயினைத் தூயமலரில் துடைத்து
அதன் தூய்மையைக் கெடுத்தாற்போல நீ இழிந்த பரத்தையரைத் தோய்ந்து என்னையும் தோய
வருதலின் என் துய்மையும் கெடுத்தொழிவை என உள்ளுறை காண்க.
இதனை ஊரனே!
அரக்கன் ஒருபதுவாயானு மரற்றவும் இருபது கைகளும் நெரியவும் பெருவிரனகநுதியால் மலையறுத்த
மதிமுடி யந்தணன் கூடல் ஆவண்வீதி யனையவர், அறிவுறின், நின்மார்பகந் தோய்ந்த என்னிணை
முலை நன்னரிழந்தனபோல, மற்றவர் மனநல மிழந்து மாழ்கிச் செற்றம் பகர்வராதலால்
இக்கால் தீண்டலையென வினை முடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.
|