பெருமழப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை


 
 

செய்யுள் 87

நேரிசையாசிரியப்பா

 
   
5
  மாயமு மின்பு மருட்சியுந் தெருட்சியு
நகைத்தொாகை கூட்டிக் கவைத்தெழு சொல்லி
வமுதமுங் கடவும் விழியில்வைத் தளிக்கு
மிருமனப் பொய்யுளத் தொருமக டன்னைக்
கரியோன் கடுப்பத் துகில்கவர்ந் தொளிர
10
  விதியினும் பன்மைசெய் முகம்படைத் தளவாச்
சோதியிற் படைக்கண் செலவுயத் தரும்புசெய்
முண்டக முலையிற் சாந்தழித் பெறிந்துநூல் வளர்த்த
கோதைவகை பரிந்து மணிக்கலன் கொண்டு
15
  கழைத்தோ ணெகிழத் தழையுடல் குழையத்
திரையெதிர் தள்ளி மலர்த்துகில் கண்புதைத்
தொண்ணிற வேங்கையின் றாதுத் பொன்னுஞ்
சுண்ணமுங் கலந்து திமிர்ந்துட லூற்றி
வண்டொடு மகிழ்ந்தவிழ் தோட்டலர் சூட்டி
20
  யிறால்புணர் புதுத்தே னீத்துடன் புணரும்
வையையின் மறித்து மன்னவ டன்னுடன்
கெழுமிய விழவுட் புகுமதி நீயே
கவைநாக் கட்செவி யணந்திரை துய்த்த
பாசுடற் பகுவாய்ப் பீழையைந் தவளையும்
25
  பேழ்வாய்த் தழல்விழித் தரக்கடத் தவிந்த
நிலம்படர் தோகைக் குலங்கொள்சே தாவு
மவ்வுழி மாத்திரை யரையெழு காலைத்
திருநுதற் கண்ணு மலைமகட் பக்கமு
மெரிமழு நவ்வியும் பெருமருட் டிருவுரு
30
  வெடுத்துட னந்தக் கடுக்கொலை யரவினைத்
தீவாய்ப் புலியினைத் திருத்தவர் நகைப்ப
வெடுத்தணி பூண புரித்துடை யுடுப்ப
முனிவருந் தேவருங் காமலர் முகிழ்ப்பத்
தருவன வன்றி மலரவ னவன்றொழி
35
  னாரண னாங்கவன் கூருடைக் காவல்
சேரத் துடைக்கும் பேரரு ணாளின்
முத்தொழி லிற்றன் முதற்றொழி லாக்கி
யொருதாட் டாரைகொண் முக்கவைச் சுடர்வேற்
றலையிருந் தருங்கதி முழுதுநன் றளிக்குந்
40
  திருநகர்க் காசிப் பதியகத் தென்றும்
வெளியுறத் தோன்றிய விருண்மணி மிடந்றோ
னேமியங் குன்றகழ் நெடுவேற் காளையன்
றன்பரங் குன்றத் தமர்பெறு கூடற்
கிறையோன் றிருவடி நிறையுடன் வணங்கும்
    பெரும்புன லூர வெம்மில்ல
மரும்புனல் வையைப் புதுநீ ரன்றே.

(உரை)
கைகோள் : கற்பு. தலைவிகூற்று

துறை : புனலாட்டுவித்தமை கூறிப்புலத்தல்.

     (இ-ம்.) இதற்கு, “அவன் அறிவு ஆற்ற அறியுமாகலின்” (தொல்.கற்பி. 6) எனவரும் நூற்பாவின்கண்,

“புகன்ற வுள்ளமொடு புதுவோர் சாயற்
 ககன்ற கிழவனைப் புலம்புநனி காட்டி
 யியன்ற நெஞ்சந் தலைப்பெயத் தருக்கி
 யெதிர்பெய்து மறுத்த வீரத்து மருங்கினும்”

எனவரும் விதிகொள்க.

19 - 23: கவைநா......................................காலை

     (இ-ள்) கவைநா கட்செவி - தாருகவனத்து இருடிகளால் விடப்பட்ட பிளவுபட்ட நாவையுடைய பாம்பானது; அணந்து இரை துய்த்த - வாய்திறந்து இரையாகப் பற்றியுண்ட; பாசுடல் பகுவாய பகுவாய் பீழை அம் தவளையும் பச்சை உடலையும் பிறந்த வாயையும் சாதற்றுன்பத்தையும் உடைந்தாகிய தவளையும்; பேழ்வாய் தழல்விழி தரக்கு அடித்து அவிந்த - பெரிய வாயையும் சினத்தீக் காலும் கண்களையுமுடைய புலி தாக்குதலாலே இறந்துபட்ட; நிலம்படர் தோகை குலம்கொள் சேதாவும் - நிலத்திலே தோய்கின்ற வாலையும் உயர்ந்த பிறப்பினையுமூடைய செந்நிறமுடைய ஆவும்; அவ்வுழி அரைமாத்திரை எழு காலை - அங்ஙனம் அவை பட்டவிடத்தே அரை நொடியில் அவை உயிர் பெற்றெழுந்த காலத்தில் என்க.

     (வி-ம்.) கவைநா - இரட்டையாகிய நாக்கு, கட்செவி - பாம்பு; அன்மொழித்தொகை, கண்ணையே செவியாகவும் உடையது என்க. அணத்தல்- வாய்திறத்தல், துய்த்தல் - உண்ணுதல், பாசுடல்-பச்சை உடம்பு, பகுவாய் -பிளந்த வாய். பீழை - துன்பம். ஈண்டு சாத்துன்பம். தரக்கு - புலி, குலம்- மேன்மை, அவிதல் - இறத்தல், தோகை - வால், சேதா - செந்நீறப்பசு, இது பசுக்களுள் சிறந்தது என்பர். அவ்வுழி அரைமாத்திரை எழுகாலை என்றதனால் அவற்றை இறைவன் அரை நொடியில் உயிர்ப்பித்தனர் என்பதும் பெற்றாம்.

24 - 28: திருநுதல்............................உடுப்ப

     திருநுதல் கண்ணும் மலைமகள் பக்கமும் எரிமழு நவ்வியும் பெறும் அருள் திருஉரு எடுத்து - அழகிய நெற்றிக்கண்ணும் மலைமகள் வீற்றிருந்த பாகமும் எரிகின்ற மழுவும் மானும் உடைய திருவருட்பிழம்பாகிய திருவுருவம் எடுத்தருளி; உடன் அந்த கடுக்கொலை அரவினை தீவாய்ப் புலியினை - அப்பொழுதே மேற்கூறிய நஞ்சாற் கொல்லும் இயல்புடைய அப்பாம்மையும் தீக்காலும் வாயையுடைய அப் புலியையும்; திருத்தவர் நகைப்ப - தாருகவனத்திருடிகள் நகைக்கும்படி; எடுத்து அணி பூண உரித்து உடை உடுப்ப - முறையே அப்பாம்மை எடுத்து அணிகலனாக அணிந்து கொள்ளவும் அப்புலியின் தோலை உரித்து உடையாக உடுத்திக்கொள்ளவும் என்க.

     (வி-ம்.) நுதற்கண் - நெற்றிக்கண், மலைமகள் - பார்வதி, எரி மழு: வினைத்தொகை, நவ்வி - மான், இறைவன் மேற்கொள்ளும் உருவமெல்லாம் திருவருள் பிழம்பேயாகலின் அருள் திருஉருவெடுத்து என்றார்

“மாயைதான் மலத்தைப் பற்றி வருவதோர் வடிவ மாகும்
நெறிப்பட நிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமை யானும்
வெறுப்பொடு விருப்புத் தன்பால் மேவுதல் இலாமை யானும்
நிறுத்திடும் நினைந்த மேனி நின்மலன் அருளி னாலே” (சித்தி - 61)

எனவும்,

“குறித்ததொன் றாக மாட்டாக் குறைவிலன் ஆத் லானும்
 நெறிப்பட நிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமை யானும்
 வெறுப்பொடு விருப்புத் தன்பால் மேவுதல் இலாமை யானும்
 நிறுத்திடும் நினைந்த மேனி நின்மலன் அருளி னாலே” (சித்தி - 65)

எனவும் வரும் சித்தியாரானும் உணர்க. கடுக்கொலை - நஞ்சினாற் செய்யுங்கொலை, திருத்தவர் - தாருகவனத்திருடிகள், பாம்மை எடுத்து அணிபூணவும் புிலித்தோலை உரித்து உடை உடுப்பவும் என உம்மை விரித்தோதுக.

29 - 36 : முனிவரும்.................................பதியகத்து

     (இ-ள்) முனிவரும் தேவரும் கரமலர் முகிழ்ப்பத் தருவன அன்றி- அதுகண்ட முனிவர்களும் தேவர்களும் மலர் போன்ற தம் கைகளைக் குவித்து வனங்காநிற்பவும் அருள் செய்வனவாகிய இவை அல்லாமலும்; மலரவனவன் தொழில் ந்ரனன் ஆங்கு அவன் கூறுடைக் காவல் சேரத்துடைக்கும் பேரருள் நாளில்-பிரமனத் படைப்புன் அங்ஙனமே திருமாலினது பெருமையுடைய காப்பும் ஒருங்கே அழிகின்ற பேரருளையுடைய ஊழிக்காலத்தும்; முத்தொழிலில் தன் தொழில் ஆக்கி-படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூவகைத் தொழிலுள்ளும் இறுதியில் நின்ற அழித்தல் என்னும் தந்தொழிலை முதன்மையுடையதாக்கி; ஒருதாள் தாரைகொள் முச்சுடர் கவைவேல்தலை இருந்து-ஒரு தண்டின்மேல் கூர்மை கொண்ட மூன்றாகிய ஒளிவிசும் கவைகளையுடைய சூலத்தின் உச்சியில் தங்கி; அருங்கதி முழுதும் நன்று அளிக்கும் திருநகர் காசிப்பதியகத்து-அரிய கதியனைத்தும் குறைவின்றி வழங்காநின்ற அழகிய நகரமாகிய காசி என்னும் திருப்பதியில் என்க.

     (வி-ம்.) மலரவனவன் என்புழி இறுதியில் நின்ற அவன் பகுதிப் பொருலது. மலரவன் தொழில் என்றது படைப்பினை. நாரணனவன் என்புழியும் அவன் பகுதிப்பொருட்டு. கூர்-ஈண்டுப் பெருமை மேற்று. அழித்தலும் அருட்செயலேயாதலால் துடைக்கும் பேரருள் நாள் என்றார். இதனை,

“அழிப்பிளைப் பாற்றல் ஆக்கம் அவ்வவர் கன்ம மெல்லாம்
 கழித்திடல் நுஅரச் செய்தல் காப்பது கன்ம வொப்பில்
 தெழித்திடல் மலங்க ளெல்லாம் மறைப்பருள் செய்திதானும்
 பழிப்பொழி பந்தம் விடு பார்த்திடின் அருளே எல்லாம்”
                                        (சித்தி - 57)

எனவரும் சித்தியாரானும் உணர்க.

36 - 41: என்றும்............................புனலூர

     (இ-ள்) என்றும் வெளியுற தோன்றிய-எந்த நாளினும் வெளிப்படத் தோன்றாநின்ற; இருள் மணிமிடற்றோன்-நீலமணி போலும் நிறமுடைய மிடற்றையுடையவனும்; நேமி அம்குன்று அகழ் நெடுவேற் காளையன்தன்- வட்டமான குருகுப் பெயர்க் குன்றத்தைப் பிளந்த நெடிய வேலையுடைய முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள; பரங்குன்றம் தமர் பெறு கூடற்கு இறையோன்-திருப்பரங்குன்றத்தைத் தன் இனமாகப்பெற்றுள்ள மதுரைய்ன்கன் எழுந்தருளி யுள்ளவனுமாகிய சிவபெருமானுடைய; திருவடி நிறையுடன் வனங்கும் பெருமபுனல் ஊர-அழகிய அடிகளை அன்புடனே வனங்குகின்ற மிக்க நீரையுடைய ஊரையுடையோய் என்க.

     (வி-ம்.) நேமி-வட்டம்; மூங்கிலுமாம். குன்று-கிரவுஞ்சமலை. காளையன்-என்றும் இளையோன். தமர்-தன்னினம். நிறை-ஈண்டு அன்பு. ஊரன்-தலைவன்.

1 - 7: மாயமும்...........................................உய்த்து

     (இ-ள்) நகைத்தொகை கூட்டி-நகைப்பினை மிகுதியும் சேர்த்து; கவைத்து எழுசொல்லில் மாயமும் இன்பமும் மருட்சியும் தெருட்சியும்- இருவேறாகிய சொல்லினிடத்தே வஞ்சகமும் இன்பமும் மயக்கமும் தெளிவும்; விழியில் அமுதமும் கடுவும் வைத்து அளிக்கும்- கண்ணினிடத்தே அமுதமும் நஞ்சமும் வைத்து வழங்குகின்ற; இருமனம் பொய்உளத்து ஒருமகள் தன்னை-இருவகைப்பட்ட மனத்தையும் பொய்யாய உள்ளத்தையுமுடைய கீழ்மக்களாகிய பரத்தை ஒருத்தியை; கரியோன் கடுப்பத் துயில் கவர்ந்து-கண்ணனைப்போல் ஆடையைக் கவர்ந்தும்; ஒளிர-அவள்தம் மேனி ஒளிருங்கால்; விதியினும் பன்மைசெய் முகம்படைத்து-நான்முகனையுங்காட்டில் பலவாகிய முகத்தைப் பெற்று; அளவாச் ச்தியின் படைகன் செல உய்த்து- அளவுபடாத ஒளியுடைமையாலே கூர்த்த வேலையொத்த நின்கண்கள் பதியும்படி கூர்ந்து நோக்கியும் என்க.

     (வி-ம்.) தொகை-ஈண்டு மிகுதி குறித்து நினது. கவைத்தெழு சொல்-உள்ளொன்று வைத்துப் புறத்தொன்றாக எழும் கவர்பட்ட சொல். மாயம்-வஞ்சகம். மருட்சி-மயக்கம். த்ருட்சி-தெளிவு. அமுதம்- அமிழ்தத்தன்மை. இருமனம்-ஒருவனோடு புணர்தலும் புணராமையும் ஒருகாலத்தேயுடைய மனம். இருமனப்பொய்யுள்ளத்து ஒருமகள் என்றதனால் கீழ் மகளாகிய பரத்தை ஒருத்தி என்றாம்.

“இருமனப் பெண்டிருங் கள்ளுங் கவறுந்
 திருநீக்கப் பட்டார் தொடர்பு”
(குறள். 920)

எனவரும் திருக்குறளும் நினைக. கரியோன்-கண்ணன். கடுப்ப: உவமவுருபு. கண்ணன் யமுனையாற்றில் ஆய்ச்சியர் நீராடுங்கால் அவர் துகிலைக் கவர்ந்தான் என்பது கதை; அதுபோல நீயும் நின் பரத்தை நீராடுங்கால் அவள் துகிலை உரிந்து விளையாடி என்பது தலைவியின் கருத்து. ஒளிர என்றது துகில் உரியப்பட்டமையால் ஒளிருகின்ற என்பதுபட நின்றது. விதி-நான்முகன். விதியினும் பன்மை செய் முகம்படைத்து என்றது நாற்றிசையினும் முகம்படைத்து நோக்குகின்ற பிரமனைக் காட்டிலும் மிகுதியாக நீ அப்பரத்தையின் மேனியை நான்கு பக்கங்களினும் நோக்குதலேயன்றி மேலும் கீழும் நோக்கினை என்றவாறு. படைக்கண் என்றது கூர்த்த கண் என்பதுபட நின்றது. செல் உய்த்தல்-பதியும்படி நோக்குதல்.

7 - 14: அரும்பு...............ஊற்றி

     (இ-ள்) முண்டகஅரும்பு செய் முலையின் சாந்து அழித்து- தாமரைமொட்டுப் போல அழகுசெய்கின்ற அவள் முலையின்மேற் பூசப்பட்ட சந்தனத்தை அழித்தும்; அமைதோள் கழை கரும்பு எறிந்தும்-அவளுடைய மூங்கில்போன்ற தோளின் கண் எழுதிய கோலாகிய கரும்புருவத்தைக் கரைத்தும்; நூல் வளர்த்த கோதைவகை பரிந்தும்-நாரால் நீளக்கட்டிய மலர்மாலை வகைகளை அறுத்தும்; மணிக்கலன் கொண்டு-அவளணிந்த மணியணிகலன்களைக் கழற்றியும்; கழைத்தோள் நெகிழ தழைஉடல் குழைய திரை எதிர் தள்ளி- அவளுடைய மூங்கில் போன்ற தோள் நெகிழவும் பூரித்த உடல் குழையவும் அவளை அலையின் எதிராகத் தள்ளியும்; மலர்த்துகில் கன் புதைத்து-பூந்துகிலாலே அவள் கண்ணை மூடியும்; ஒள்நிற வேங்கையின்தாதும் பொன்னும் சுண்ணமும் கலந்து உடல் திமிர்ந்து ஊற்றி-நன்னிறமுள்ள வேங்கைமலரின் துகளையும் பொற்றுகளையும் நறுமணப்பொடியையும் கலந்து அவள் உடலிற் பூசியும் பெய்து என்க.

     (வி-ம்.) மணிக்கலன்-மணியிழைக்கப்பட்ட அணிகலன்கள். கழை-மூங்கில். இங்ஙனம் நீ விளையாடுதலாலே புரித்த அவள் உடல் குழைய என்பாள் தழையுடல் குழைய என்றாள். மலர்த்துகில்- மலர்வடிவம் பொறித்த துகில். தாது-பூந்துகள். பொன்-ஈண்டுப் பொற்சுண்ணம். சுண்ணம் என்றது நறுமணப்பொடியை. திமிர்தல்-பூசுதல். ஊற்றுதல்-பெய்தல்.

15 - 18: வண்டொடு....................நீயே

     (இ-ள்) வண்டொடு மகிழ்ந்து அவிழ் தோட்டு அலர் சூட்டி-வண்டுகளோடு சிரித்து மலருகின்ற இதழ்களையுடைய மலர் மாலையை அவளுக்குச் சூட்டியும்; இறால்புணர் புதுத்தேன் ஈத்து- இறாட்டிற் பொருந்திய புதிய தேனைப் பருகும்படி அவளுக்கு வழங்கியும்; உடன் புணரும் வையையில்-அவளொடே கூடுதற்கிடமான வையையாற்றிலே; மறித்தும்-மீண்டும்; கெழுமிய விழவுள்-பொருந்திய அந்நீர்விழாவின்கண்; அன்னவள் தன்னுடன் நீ புகுமதி- அப்பரத்தையோடே நீ செல்வாயாக என்க.

     (வி-ம்.) மகிழ்ந்தவிழ்தல்-சிரிப்பதுபோல மலர்தல். இறால்-இறாட்டு (தேனடை) புணரும் வையை-புணர்தற்கிடனான வையை. கெழுமுதல்- பொருந்துதல். விழவு-நீராட்டுவிழா. அன்னவள்-அப்பரத்தை. ஏகாரம்: ஈற்றசை. மதி: முன்னிலையசை.

41 - 42: எம்மில்லம்..............................அன்றே

     (இ-ள்) எம்மில்லம் அரும்புனல் வையைப் புதுநீர் அன்று- எம்முடைய எளிய இவ்வில்லம் பெறுதற்கரிய வெள்ளத்தையுடைய அவ்வையையாறு போலப் புதிய தன்மை யுடையதன்று என்க.

     (வி-ம்.) எம்மில்லம் என்றது எளிய எம்மில்லம் என்பதுபட நின்றது. வையைபுதுநீர்-வையையாறுபோலப் புதுத்தன்மையுடையது. நீர்-தன்மை.

     இதனை, கூடற்கிறையோன் றிருவடி நிறையுடன் வனங்கும் பெரும்புனலூர! இருமனப் பொய்யுள்ளத்து ஒருமகடன்னைத் துகில் கவர்ந்து படைக்கண் செலவுய்த்தும் முலையிற் சாந்தழித்துத் தோளெழுதிய கழைக்கரும் பெறிந்தும் கோதைவகை பரிந்துத் திரையெதிர் தள்ளி மலர்த்துகில் கண்புதைத்து உடலூற்றி அலர் சூட்டிப் புதுத்தேனீத்துடன் புணரும் வையையின் மறித்துவங் கெழுமிய விழவுள் நீயே அன்னவடன்னுடன் புகுமதி எம்மில்லம் அரும்புனல் அவ்வையைப் புதுநீரன்றென வினை முடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.