|
|
செய்யுள்
92
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
வெறிமறி
மடைக்குரற் றோல்காய்த் தென்ன
விருக்கினு மிறக்கினு முதவாத் தேவர்தம்
பொய்வழிக் கதியக மெய்யெனப் புகாத
விழியுடைத் தொண்டர் குழீஇமுடி தேய்பத்
தளிர்த்துச் சிவந்த தண்டையந் துணைத்தாட் |
10
|
|
சேயோன்
பரங்குன் றிழையெனச் செறித்துத்
டமிழ்க்கலை மாலை சூடித் தாவாப்
புகழ்க்கலை யுடுத்துப் புண்ணியக் கணவன்
பன்னெறி வளனிறப் பூட்சியிற் புல்லுந்
தொன்னிலைக் கூடற் றுடியிடை யகந்தனை |
15
|
|
யன்புளத்
தடக்கி யின்பமுண் ணாரெனச்
சேவன்மண் டலித்துச் சினையடை கிடக்குங்
கைதைவெண் குருகெழ மொய்திரை யுகளு
முளைகடற் சேர்ப்ப னளிவிடந் தணிப்ப
நீலமுங் கருங்கொடி யடம்புஞ் சங்கமுங் |
20
|
|
கண்ணிற்
கிடையிற் களத்திற் கழிதந்து
அலர்ந்து முலர்ந்து முடைந்து மனுங்கலின்
வட்குடை மைய லகற்றியன் பொருகாற்
கூறவும் பெறுமே யாறது நிற்க
விவணடை பெற்று மிவட்பயின் றிரங்கியு |
|
|
மோருழி
வளர்ந்த நீரவிவ் வன்ன
மன்றெனத் தடையாக் கேண்மை
குன்றுமச் சூளினர் தம்மினுங் கொடிதே. |
(உரை)
கைகோள்: களவு. தோழி கூற்று
துறை: அன்னமோ
டாய்தல். குறிப்பு:-தலைவன்
பிரிவினால் வருந்திய தலைவியை ஆற்றக்கருதிய தோழி அன்னத்தை நோக்கிக் கூறியது.
இது தோழி கூற்றாக இதற்கெடுத்துக் காட்டாக வந்த திருக்கோவையார்ச் செய்யுள் தலைவி
கூற்றாதல் உணர்க. இனி அச்செய்யுளை இவ்வாசிரியர் தோழி கூற்றாகக் கருதினர் எனக்
கருதுதல் கூடும்.
(இ-ம்.)
இதற்கு, நாற்றமுந் தோற்றமும் தொல். களவி. 23) எனவரும் நூற்பாவின்கண் அவன்விலங்குறினும்
எனவரும் விதி கொள்க.
1 - 6: வெறிமறி......................................செறிந்து
(இ-ள்)
வெறிமறி ஆட்டின் குரல்மடை தோல் காய்த்து என்ன-வெறியாடுதற்குரிய ஆட்டினது குரல்வளையினிடத்துத்
தோலாகிய அதர் தோன்றியிருப்பதுபோல; இருக்கினும் இறக்கினும் உதவா-இயிரோடிருந்தாலும்
இறந்தாலும் உயிர்க்குறுதி செய்யமாட்டாத; தேவர்தம் பொய்வழிக் கதியகம் ஏனைத்
தேவர்களுடைய பொய்ந்நெறியாகிய கதியினிடத்தே; மெய்யெனப் புகாத விழியுடைத் தொண்டர்-அவற்றை
மெய்யென்று கருதிச்செல்லாத ஞானக்கண்ணையுடைய மெய்யடியார்கள்; குழீஇ தளிர்த்துமுடி
தேய்ப்ப சிவந்த-கூடி அகமகிழ்ந்து வணங்குங்கால் அவர்தம் முடியினால் தேய்ப்புண்டு சிவந்த;
தண்டை அம் துணைத்தாள்-தண்டையணிந்த அழகிய திருவடிகளையுடைய; சேயோன் பரங்குன்று-முருகப்பெருமானுடைய
திருப்பரங்குன்றத்தினை; இழை எனச் செறித்து-அணிகலனாக அணிந்து கொண்டு என்க.
(வி-ம்.)
வெறி-வெறியாடல். மறி-ஆடு. குரல் மடைத்டோல் என மாறுக. குரல்மடை-குரல்வளை; கழுத்து.
தோல்-தோலுறுப்பு. இதனை அதர் என்று கூறுவர். இவ்வதர் ஆட்டிற்கு யாதொரு பயனும் விளைத்தலின்று.
ஆதலால் பயன்படாத பொய்ந் நெறிகட்கு உவமையாக எடுத்தோதினார். இருக்கினும் இறக்கினும்
என்றது இம்மைக்கும் மறுமைக்கும் என்றவாறு. விழி-அறிவுக்கண். தண்டை- ஒருவகை காலணி.
துணைத்தாள்-இரண்டாகிய அடிகள். குழித் துளிர்த்து முடி தேய்ப்ப என மாறுக. தளிர்தல்-மகிழ்தல்.
சேயோன்-முருகன். இழை-அணிகலன்.
7
- 11: தமிழ்க்..................................உண்ணாரென
(இ-ள்)
தமிழ்க்கலை மாலை சூடி-முத்தமிழாகிய மணி மாலையை அணிந்து; தாவாப் புகழ்க்கலை உடுத்து-கெடாத
புகழாகிய ஆடையை உடுத்துக்கொண்டு; புண்ணியக்கணவன்- அறக்கடவுளாகிய தன் கணவன்; பல்
நெறி வளம் நிறப் பூட்சியில் புல்லும்-பலவகைப்பட்ட வளப்பங்களையும் உடைய மார்பினாலும்
மெய்யாலும் தழுவ நின்ற; தொல்நிலை கூடல்-பழம்பதியாகிய மதுரையில்; துடி இடை அகத்தனை-உடுக்கைபோன்ற
இடையையுடைய உமையையுடைய பாகத்தையுடைய சிவபெருமானை; அன்பு உளத்து அடக்கி இன்பம் உண்ணார்
என-அன்பினால் நெஞ்சத்திலிருத்திப் பேரின்பத்தை நுகரமாட்டாட அறிவிலிகள் போல
என்க.
(வி-ம்.)
தமிழ்க்கலை-இயல், இசை, நாடகம் என்னும் மூவகைக் கலைகள். தாவா-கெடாத. புகழ்க்கலை-புகழாகிய
ஆடை என்க. புண்ணியம்-அறம். நிறம்-மார்பு. பூட்சி-உடம்பு. புல்லுதல்- தழுவுதல். துடியிடை:
அன்மொழித்தொகை. இன்பம்-பேரின்பம்.
12 - 19: சேவல்....................நிற்க
(இ-ள்)
சேவல் மண்டலித்து சினை அடை கிடக்கும் கைதை வெள்ளெருக்கு எழ-சேவலுடனே கூடி முட்டைகளை
அடைகாக்கின்ற தாழத் தூற்றினின்றும் வெள்ளிய நாரை அஞ்சி மேலெழும்படி; மொய்திரை
உகளும்-நெருங்கிய அலைகள் வீசுகின்ற; உளைகடல் சேர்ப்பன்-முழங்கா நின்ற கடற்றுறையையுடைய
நம்பெருமான்; அளிவிடம் தணிப்ப-வழங்கிய நஞ்சு போன்ற துன்பத்தைத் தணிக்கும் பொருய்யு;
நீலமுங் கருங்கொடி அடம்பும் சங்கமும்-கருங்குவளை மலரும் கரிய கொடியாகிய அடம்பும்
சங்கும்; கண்ணிற்கு இடையின் களத்திற்கு அழிதந்து-எம்பெருமாட்டியின் கண்களுக்கும்
இடைக்கும் கழுத்திற்கும் தோல்வியுற்று நாணி; அலர்ந்தும் உலர்ந்தும் உடைந்தும் அனுங்கலின்-விரிந்தும்
வாடிஉலர்ந்தும் உடைந்தும் கெடுதலாலே; வட்குடை மையல் அகற்றி அன்பு ஒருகால் கூற்வௌம்
பெறுமே- மழுக்கமுடைய தம் மயக்கத்தைவிட்டு அன்பால் ஒருமுறை நெம்பெருமான்பாற் சென்று
இவள் மெலிவினைச் சொல்லவும் பெறுமோ" சொல்லமாட்டா; ஆரு அது நிற்க-அவ்வாறு அந்நினைவு
ஒழிக இனி என்க.
(வி-ம்.)
மண்டலித்தல்-கூடுதல். சினை-முட்டை. கைதை-தாழை. குருகு-நாரை. குருகு எழ மொய்திரை உகளும்
உளைகடற் சேர்ப்பன் என்றது நம்பெருமான் ஒருவழித் தணக்கும்படி அலரெழுகின்ற நம் மூர்
என்பதுபட நின்றது. இதனால் அவர் உண்மையாகப் பிரிவாரல்லர், அலருக்கஞ்சியே யிருக்கின்றனர்,
இனி வந்து அளிசெய்வர் எனக் குறிப்பால் ஆற்றுவித்தபடியாம். விடம் என்றது துன்பத்திற்கு
ஆகுபெயர். நீலமும் அடம்பும் சங்கமும் அவளுடனே பயிலுங் கேண்மையுடையன ஆயினும் அவளுடைய
கண் முதலியவற்றிற்குத் தோற்று வருந்துதலின் அவை தூதுபோய்ச் சொல்லமாட்டா என்பது
கருத்து. நீலம் கண்ணிற்கும் அடம்பங்கொடி இடைக்கும் சங்கம் கள்த்திற்கும் அழிந்தன.
ஈண்டு நீலம் அலர்தலும் கொடி உலர்தலும் சங்கு உடைதலும் அவற்றிற்கு இயல்பாதல் உணர்க.
வட்குதல்-மழுங்குதல். மையல்-மயக்கம். பெறுமே என்புழி ஏகாரம் எதிர்மறைப்பொருள்
குறித்து வந்த வினா.
20
- 23: இவள்.........................கொடிதே
(இ-ள்)
இவள் நடை பெற்றும்-இவளுடைய நடையைக் கற்றும்; இவள் பயின்றும்-இவளோடு பயில்வுற்றும்;
இரங்கியும்-இவள் நிலைமைக்கு இரங்கியும் (ஒலித்தும்); ஓருழி வளர்ந்த-இவளுடன் ஒரே
இடத்தில் வளர்ந்த; நீர இ அன்னம்-நீர்மையையுடைய இந்த அன்னப் பறவைதானும் இத்துணைக்
கேண்மை யுடையதாயிருந்தும்; அன்று என- கேண்மையுடைய தன்று
என்று கருதும்படி; தடையாக் கேண்மை குன்றும்-தடைபடாத காதற்கேண்மை குறைந்து இவளைப்பிரிந்த;
அ சூளினர் தம்மினும் கொடிது-அந்தச் சூண்மொழி கூறிய தலவரினுங்காட்டில் மிகவும் கொடியதாக
இருக்கின்றது என்க.
(வி-ம்.)
அன்னம் இவள்பால் நடை கற்றும் உடன் பயின்றும் ஓருழி வளர்ந்திருந்தும் என்க. தடையா-தடைபடாத.
சூளினர் எனறது இகழ்ச்சி. இது தலைவனை இயற்பழித்தபடியாம்.
இதனை,
கூடற்றுடியிடை யகத்தினை, அன்புளத்தடக்கி இன்பமுண்ணாரென, இவணடைபெற்றும் இவட் பயின்றிரங்கியும்,
ஓருழி வளர்ந்த நீர இவ்வண்ணம், அன்றெனத் தடையாக்கேண்மை குன்றுமச் சூளினர் தம்மினுங்
கொடிதேயென வினைமுடிவு செய்க, மெய்ப்பாடு-அழுகை. பயன்-தலைவியை ஆற்றுவித்தல்.
|