|
|
செய்யுள்
95
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
பெருநிலத்
தேவர்கண் மறைநீ ருகுப்ப
மற்றவர் மகத்துள் வளரவி மாந்த
விடையோ னருச்சனைக் குரிமையின் முன்னவ
னன்னவன் றன்னுடன் கடிகையேழமர
வன்றியு மிமையாக் கண்ணெனல் காட்ட |
10
|
|
வாயிரம்
பணாடவி யரவுகடு வாங்கத்
தேவருண் மருந்துட னீட்நின் றுதவ
வுடன் முனி செருலின ருடல்வழி நடப்ப
நாரணன் முதலாந் தேவர்படைதோற்றத்
தண்மதிக் கலைக டானற வொடுங்க |
15
|
|
வெரிந்தெழு
மாக்க ரேனையர் மடிய
மறையவன் குண்ட முறைமுறை வாய்ப்ப
வலன்றரு முலகத் தருந்தொழி லோங்கப்
பாசுட லுளைமா வேழணிபெற்ற
வொருகாற் றேர்நிறைந் திருளுடைத் தெழுந்த |
20
|
|
செங்கதிர்
விரித்தசெந் திருமலர்த் தாமரைப்
பெருந்தே னருந்தியெப் பேரிசை யனைத்தினு முதலிசைச்
செவ்வழி விதிபெறப் பாடியத்
தாதுட றுதைந்தமென் றழைச்சிறைவண்டினம்
பசுந்தாட் புல்லிதழ்க் கருந்தா ளாம்பற் |
25
|
|
சிறிதுவா
மதுவமுங் குறைபெற வருந்தியப்
பாசடைக் குலகவர் பயிலாத் தாரியை
மருளொடு குறிக்கும் புனலணி யூர
தானவர்க் குடைந்து வானவரிரப்ப
வுழறேர் பத்தினன் மகபென நாறி |
30
|
|
முனிதழற்
சனகன் மிதிலையிற் கொடுமா
மிறுத்தவன் மகட்புணர்ந் தெரிமழு விராமன்
விற்கவர்ந் தன்னை வினையுள்வைத் தேவத்
துணையு மிளவலுந் தொடரக்கான் படர்ந்து |
35
|
|
மாக்குக
னதிவிட வூக்கி வனத்துக்
கராதிமா ரீசன் கவந்த னுயிர்மடித்
திருசிறைக் கழுகினற் குலந்த கடன்கழித்
தெறிவளி மகனைநட் டேழு மரத்தினுக்
கரிக்குக் கருங்கடற் கொரோவொரு கணைவிடுத் |
40
|
|
தக்கடல்
வயிறடைத் தரக்கனுயிர் வௌவி
யிலங்கையவ் வரக்கற் கிளையோன் பெறுகெனத்
தமதுார் புகுந்து முடிசுமந் தோற்கு
நான்முகத் தவர்க்கு மிருபாற் பகுத்த
வொருநுதற் கண்ணவ னுறைதரு கூடற் |
|
|
றெளிவேற்
கட்குறுந் தொடியினர் காணி
னின்பா லளியு நீங்கி
யின்புமின் றொழிக்குமெங் காறொடல் சென்மே, |
(உரை)
கைகோள் கற்பு, தலைவி கூற்று
துறை: பள்ளியிடத்துாடல்
(இ-ம்)
இதற்கு "" அவனறிவு ஆற்ற அறியு மாகலின்"" (தொல்கற்பி,6) எனவரும் நுாற்பாவின்கண்
"கொடுமை யொழுக்கம் கோடல் வேண்டி அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக் காதலெங்
கையர் காணி னன்றென மாதர் சான்ற வகையின் கண்ணம் எனவரும் விதி கொள்க,
1
- 6: பெருநிலத்.....................................வாங்க
(இ-ள்)
பெருநிலத்தேவர்கள் மறைநீர் உகுப்ப - பெரிய நில உலகத்துத் தேவர்கள் என்னும் அற்தணர்
மறைமொழி கூறி நீர் இறைக்கவும் அவர் மகத்துள் வளர் அவி மாந்த - அவ்வந்தணருடைய
வேள்விக் களத்திலிடும் மிக்க அவியை உண்ணவும் விடையோன் அருச்சனைக்கு உரிமையின்
- சிவன் வழிபாட்டிற்கு உரிமையுடைமையால் முன்னவன் - முதல்வனாகி அன்னவன் தன்னுடன்
ஏழ்கடிகை அமர - அச்சிவ பெருமான் தன்னோடே ஏழுநாழிகை அளவும் பொருந்தா நிற்பவும்
அன்றியும் இமையாக் கண் எனல் காட்ட - அல்லாமலும் தான் அச்சிவபெருமானுடைய இமைத்தலில்லாத
கண்களில் ஒன்றாய் இருத்தலை உலகினர்க்குக் காட்டவும் ஆயிரம பண அடவி அரவு கடு வாங்க
- ஆயிரம் படங்களையுடைய பாம்பு நஞ்சினைக் கவர்ந்து கொள்ளவும் என்க,
(வி-ம்.)
நிலத்தேவர் - பார்ப்பனர்,இவரைப் பூசுரர் என்று வழங்கலும் காண்க, அந்தணர் விடியலில்
மறையோதி நீருகுத்தல் உண்மையின் அந்தணர் மறைநீருகுப்பவும் என்றார்,அவர் - அவ்வந்தணர்,மகம்
- வேள்விக் களம்.அவி -வேள்வித்தீயில் இடும் தேவருணவு, மாந்தல் - உண்ணல், விடையோன்
எருந்துார்தியாகிய சிவபெருமான், அவனுடைய எண்வகை வடிவங்களுள் ஓன்றுதலால் ஞாயிறு சிவவழிபாட்டிற்கு
உரிமையுடைய தாயிற்றென்க, விடியலில் ஏழுநாழிகையளவும் இறைவன் ஞாயிற்று மண்டிலத்தில்
அடியார் வழிபாட்டை ஏற்றுக்கொள்ளுதற்குப் பொருந்தியிருப்பன் என்பது கருத்து, அன்னவன்-
சிவபெருமான்,தன்னுடன் - ஞாயிறாகிய தன்னுடன் என்க, சிவபெருமானுடைய முக்கண்களுள் வைத்து
ஞாயிறு ஒரு கண் ஆதலின் கண்ணெனல் காட்ட என்றார், நச்சுப்பாம்புகள் அனைத்தும் கதிரவனிடத்திருந்தே
நஞ்சு கொள்கின்றன, ஆயினும் சிறப்புக் கருதி ஆதிசேடனை ஈண்டுக் கூறிஞர்,ஆயிரம் பணாடவி
அரவு என்றது ஆதிசேடனை,
7
- 12: தேவர்.................................வாய்ப்ப
(இ-ள்)
தேவர் உண்மருந்து உடல் நீட நின்று உதவ தேவர்கள் உண்ணுகின்ற அமிழ்தம் அவர் உடலினில்
நெடுங்காலம் நிலைபெற்றிருந்து அவை அழியாமல் உதவும்படியும் உடல் முனி செருவினர் -
தம் முடலை விரும்பாத மறவர்கள் உடல் வழி நடப்ப - போர்க்களத்தின்கண் விழுப்புண்
பட்டிறந்த பொழுது தன் உடலினுாடாக மெனிலையுலகத்திற்குச் செல்லவும் நாரணன் முதல் சூடத
தேவர் படைதோற்ற - திருமால் முதலிய தேவர்களின் சக்கரப்படையின் உருவத்தைக் கண்கூடாகக்
காட்டவும் தண்மதி கலைகள் அற ஓடங்க - குளிர்ந்த திங்களின் கலைகள் முழுவதும் தன்
பால் ஓடுங்கவும் எரிந்து எழும் அரக்கர் ஏனையும்
மடிய -சினந்தெழாநின்ற அரக்கர்களும் பிறருமாகிய தீயோர் மாளவும் மறையவன் குண்டம்
முறை முறை வாய்ப்ப - பிரமனுடைய வேள்வித்தொழில் விதிமுறைப்படி நடப்பவும் என்க.
(வி-ம்.)
மருந்து - அமிழ்தம், உடல் முனி செருவினர் என்றது மறவர்களை, இவர் போர்க்களத்தில்
இறந்தபொழுது ஞாயிற்று மண்டிலத்தின் ஊடாக மேனிலையுலகம் செல்வர் என்பது பற்றிச்
செருவினர் உடல்வழி நடப்ப என்றார், சக்கரப்படையுடையோரில் திருமாலே சிறந்தவன்
ஆதலின் நாரணன் முதலாம் தேவர் படைதோற்ற என்றார், தோற்ற பிறவினை தண்மதி -
திங்கள்மண்டிலம், தான் அசை, அற ஓடுங்குதல் - முழுதும் மறைதல், அரக்கர் ஏனையர் என்றது
அரக்கரும் பிறருமாகிய தீயோர் என்றவாறு, மறையவன்- பிரமன், குண்டம் ஆகுபெயர்,
13
- 18: அவன்.......................................பாடி
(இ-ள்)
அவன் தரும் உலகத்து அருந்தொழில் ஓங்க - அப்பிரமனால் படைக்கப்பட்ட உலகங்களிலே
செயற்கருந் தொழில்கள் எல்லாம் வளரவும் பாசுடல் உளை மா ஏழ் அணி பெற்ற ஓருகால்
தேர் நிறைந்து - பசிய உடலும் பிடரிமயிருமுடைய ஏழு குதிரைகளால் அழகு பெற்று ஒற்றை
உருளையையுடைய தேரின்கண் அமர்ந்து விண்ணெலாம் நிறைந்து, இருள் உடைத்து எழுந்த செங்கதிர்
-இருளைக் கிழித்துத் தோன்றின சிவந்த கதிரவன்,விரித்த செந்திருத் தாமரைமலர்
பெருந்தேன் அருந்தி - மலர்த்திய செவ்விய திருமகளுக்கிடமாகிய தாமரை மலரிடத்து மிக்க
தேனைப் பருகி எப்பேரிசை அனைத்தினும் முதலிசைச் செவ்வழி விதி பெறப் பாடி - எத்தகைய
பேரிசைகளுக்கும் முற்பட்ட இசையாகிய செவ்வழிப் பண்ணை முறையாகப் பாடி என்க,
(வி-ம்.)
அவன் - அப்பிரமன், அருந்தொழில் என்றது தவ முதலியவற்றை உளை - பிடரிமயிர், மா
- குதிரை, கால் - உருளை,செங்கதிர் - ஞாயிறு. திருமகட்கு இருக்கையாகலின் செந்திருத்
தாமரை மலர் என்றார், செவ்வழி விடியற்காலத்தே பாடும் பண்ணாகலின் எத்தகைய பேரிசைக்கும்
முதலிசை என்றார்,
18
- 23: அத்தாது......................................ஊர
(இ-ள்)
அ தாது உடல் துதைந்த மெல்தழைசிறை வண்டு இனம் - அந்தத் தாமரைப்பூந்துகளைத் தமதுடலிற்றிமிர்ந்து
கொண்ட மெல்லிய தளிர் போன்ற சிறகிளையுடைய வண்டுக்கூட்டம், பசுந்தாள் புல்லிதழ்
கருந்தாள் ஆம்பல் உவா சிறிது மதுவமும் குறை பெற அருந்தி - பசிய தாளினையும் பசிய
புறவிதழையும் உடைய அல்லி மலரினும் கரிய தாளையுடைய அல்லியாகிய
சருங்குவளை மலரினும் உவாநாளில் சிறிதேயுள்ள தேனையும் நிறைவின்றிப் பருகி அப் பாசடைக்கு
உலகவர் பயிலாத் தாரியை - அவ்வல்லியின் பசிய இலைகளின் மேலே நிலவுலகத்தினர்
நன்கு பயிலாத தேவகாந்தாரி என்னும் பண்ணை மருளொடு குறிக்கும் புனல் அணி ஊர - மயக்கத்தோடு
பாடுதற்கிடனான நீர் நிலைகளால் அழகுபெற்ற ஊரையுடைய தலைவனே என்க,
(வி-ம்.)
தாது - பூந்துகள்,துதைதல் - திமிர்தல்,சிறைசிறகு, பசுந்தாட் புல்லிதழ் ஆம்பல் எனவும்
கருந்தாட் புல்லிதழ் ஆம் பல் எனவும் கொண்டு கூட்டிக்கொள்க, பசுந்தாள் ஆம்பல் என்றது
நெய்தல் அல்லியை, கருந்தாள் ஆம்பல் என்றது கருங்குவளை ஆம்பலை, உவா - முதிராத எனினுமாம்,
மதுவம் என்புழி அம்சாரியை. தாமரையில் மிக்க தேனை அருந்தி என்றமையின் அல்லியினும்
அவற்றிலுள்ள சிறிய தேனையும் குறைவுண்டாக அருந்தி என்றாள், தாமரையில் நிறையத் தேனுண்ட
வண்டு இழிந்த ஆம்பலினும் சென்று குறைபெற உண்ணம் என்றது நீ குலமகளாகிய என்னிடத்கினும்
இன்பம் நுகர்ந்து பழிபெற்றனை என உள்ளுறை கூறியவாறு, வண்டு பெருந்தேன் அருந்தியவழி
முதலிசை பாடிற்று என்றது, நீ இயற்கைப் புணர்ச்சிக்காலத்தே பேரன்பு காட்டினை என்றவாறு,
குறைபெற அருந்தி என்றது வண்டுக்குக் கொள்ளுங்கால் வயிறுநிறையாமல் உண்டு என்றும் தலைவனுக்குக்
கொள்ளுங்கால் பழியுணட்ாக நுகர்ந்து என்றும் நுண்ணிதிற் கொள்க, பரத்தையரும் பலர்
என்பாள் பசுந்தாள் ஆம்பல் கருந்தாள் ஆம்பல் என்றாள்.பாசடைக்கு மேல் என்க, தாரி
- சாதாரி என்பதன் முதற்குறை, இதற்குத் தேவகாந்தாரி என்னும் பெயரும் உண்மையின்
உலகவர் பயிலாத்தாரி என்றாள்,
24
- 29: தானவர்.....................ஏவ
(இ-ள்)
தானவர்க்கு உடைந்து வானவர் இரப்ப இராவணன் முதலிய அரக்கர்களுக்குத் தோற்று வருந்தி
இந்திரன் முதலிய தேவர்கள் வேண்டிக்கோடலால்; உழல் தேர் பத்தினன் மகவுஎன நாறி-ஓடுகின்ற
தேர் பத்தையுடையோன் என்னும் பொருள்படும் பெயரையுடைய தயரதனுக்கு மகனாகத் தோன்றி;
முனிதழல் செல்வம் முற்றி-விசுவாமித்திர முனிவனுடைய வேள்வியை நிறைவேற்றி; பழங்கல்
பெண்வர-பழைய கல்லொன்று அகலிகை என்னும் பெண்ணுருக்கொண்டு எழச் செய்து; சனகன் மிதிலையில்
கொடுமரம் இறுத்து அவன் மகள் புணர்ந்து-சனகமன்னனுடைய மிதிலை நகரத்திலே சென்று அவன்
காட்டிய வில்லையொடித்து அவன் மகளாகிய சீதையை மணந்து கொண்டு தன் நகர்க்கு வரும்
பொழுது; எரிமழு இராமன் வில் கவர்ந்து அன்னை வினையுள் வைத்து ஏவ-எரிகின்ற மழுப்படையையுடைய
பரசுராமனது வில்லினைக் கவர்ந்து
கொண்டு நகே எய்திய பின்னர்த் தன் சிற்றன்னையாகிய கைகேயி வஞ்சத்தை உள்ளே வைத்துக்
காடேகுக! என ஏவுதலாலே என்க.
(வி-ம்.)
தானவர்-அரக்கர். அவர் இராவணன் முதலியோர். வானவர்-தேவர்கள். அவர் இந்திரன்
முதலியோர். தயரதன் என்னும் பெயர்க்கு, பத்துத்தேரினன் என்பது பொருளாகலின் தேர்
என்னும் முதலுக்கேற்ப அடை கொடுத்து உழல்தேர் பத்தினல் என்றார். தன்னுடைய தேரினால்
பத்துத் திசைகளையும் வென்றமையின் இராமன் தந்தை தயரதன் எனப்பட்டான். நாறுதல்-தோன்றுதல்.
முனி-விசுவாமித்திர முனிவன். தழற்செல்வம்- வேள்வியாகிய செல்வம். பழங்கல் என்றது
கௌதமனால் சபிக்கப்பட்டுக் கல்லாய் கிடந்த அகலிகையை மிதிலை- சனகமன்னனுடைய நகரம்.
கொடுமரம்-வில். அவன்மகள்- சனகனுடைய மகளாகிய சிதை என்க. மழுவிராமன்-பரசுராமன்.
அன்னை என்றது கைகேயியை. வினை என்றது வஞ்சம் என்பதுபட நின்றது.
30
- 35: துணையும்..............................விடுத்து
(இ-ள்)
துணையும் இஅவலும் தொடர-வாழ்க்கைத் துணைவியாகிய சீதையும் தம்பியாகிய இலக்குவனும்
பின் தொடர்ந்துவர; கான்படர்ந்து-காட்டிற்குச் சென்று; மாகுகன் நதிவிட ஊக்கி-வேடர்
தலைவனாகிய சிறப்பினையுடைய குகன் கங்கையாற்றினின்றும் அப்பாற் செலுத்த மேலும் சென்று;
வனத்து கவந்தன் கராதி மாரீசன் உயிர்மடித்து-அக்காட்டின்கண் கவந்தனையும் கரனையுள்ளிட்ட
அரக்கர் பலரையும் மாரீசனையும் கொன்று; இருசிறை கழுகினற்கு-இஅண்டு சிறகுகளையுடைய கழுகினத்திற்றோன்றிய
சடாயுவிற்கு; உலந்த கடன் கழித்து- இறுதிக்கடன் செய்து முடித்து; எறிவளி மகனை நட்டு-வீசாநின்ற
காற்றின் மகனாகிய அனுமனை நட்புக் கொண்டு; ஏழு மரத்தினிக்கும் அரிக்கும் கருங்கடற்கும்
ஒரோஒரு கணை விடுத்து-மரா மரம் ஏழிற்கும் வாலி என்னும் குரங்க்ற்கும் கரிய கடலுக்குந்
தனித்தனி ஒவ்வோரம்பு எய்து என்க.
(வி-ம்.)
துணை-வாழ்க்கைத்துணவி (சீதை). இளவல்-தம்பி என்றது இலக்குவனை. வேடர்களுக்கு அரசனாதல்
பற்றிக் குகனை மாகுகன் என்றார். நதி கங்கையாறு. கராதி-கரன் தூடணன் முதலிய அரக்கர்கள்.
கவந்தன் கராதி மாரீசன் என முறைப்படுத்தாமல் செய்யுளாகலின் கராதி மாரீசன் கவந்தன்
என முறை பிறழ வைத்தார். கழுகினன்-கழுகினத்திற்றோன்றியவன்; என்றது சடாயுவை. உலந்த
கடன்-இறந்துழிச் செய்யும் கடமை. வளிமகன்-காற்றின் மகன்: என்றது அனுமனை. நடுதல்-நட்புச்
செய்தல். அரி-குரங்கு; என்றது வாலியை.
36 - 40: அக்கடல்..............................கண்ணவன்
(இ-ள்)
அக்கடல் வயிறு அடைத்து-இக்கடலின்கண் திருவனை கட்டி; அரக்கன் உயிர் வௌவி-இராவணனைக்
கொன்று; இலங்கை அ அரக்கற்கு இளையோன் பெஉம என-இலங்கையை அந்த இராவணனுடைய தம்பியாகிய
விபீடணன் பெறுவானாக என்று முடிசூட்டி; தமது ஊர் புகுந்து முடி சுமந்தோர்க்கும்- தமக்குரிய
அயோத்தியில் மீண்டும் வந்து முடிசூட்டிக் கொண்டு அரசாட்சி செய்தருளிய இராமனாகிய
திருமாலுக்கும்; நான்முகத்தவற்கும்-பிரமதேவனுக்கும்; இருபால் பகுத்த ஒருநுதல் கண்ணவன்-தனது
இரண்டு பாகத்தையும் பகுத்து வழங்கிய ஒப்பற்றிக் கண்ணையுடைய சொக்கலிங்கக் கடவுள்
என்க.
(வி-ம்.)
அரக்கன் என்றது இராவணனை. இளையோன் என்றது அவன் தம்பியருள் விபீடணனை. தமது என்றது
அயோத்தியில் வாழ்வோரை உளப்படுத்திக் கூறியபடியாம். ஒருமைபன்மை மயக்கம் அன்று,
யான் எம்மூர் செல்வன் என்றாற்போலக் கொள்க. இருபாற் பகுத்த ஒருநுதற் கண்ணவன்
என்புழிச் செய்யுளின்பம் உணர்க.
40
- 43: உறைதரு................................சென்மே
(இ-ள்)
உறைதரு கூடல்-வீற்றிருக்கின்ற மதுரையின்கண்; தெளிவேல் கண் குறுந்தொடியினர்-ஒளியையுடைய
வேல் போன்ற கண்ணையும் குறிய தொடியினையும் உடைய நின்பரத்தையர் நீ ஈண்டு வந்ததனை;
காணின்-கண்டால்; நின்பால் அளியும் நீங்கி இன்பும் இன்று ஒழிக்கும் எம் கால் தொடல்-அவர்க்கு
உன்னிடத்துள்ள அருளும் ஒழியும்; மேலும் நீ அவர்பால் நுகரும் இன்பத்தையும் அக்காட்சிதானே
இன்றே ஒழிக்கும் ஆதலால் எமது காலைத் தீண்டாதே கொள்; சென்மே-நீ அவர்பால் செல்லுவாயாக!
என்க.
(வி-ம்.)
தெளி-ஒளி. தெளிவளர் வான்சிலை (திருக்கோவையார் 16) எனவரும் திருக்கோவையார்
உரையானும் உணர்க. தெளிகண் வேற்கண் என்க்கொண்டு தெளிந்த கண் எனினுமாம். ஈண்டுத்
தெளிவு விளக்கம். குறுந்தொடியினர் என்றது பரத்தையரை. இன்பம் இன்று ஒழிக்கும் என்றதற்குக்
காணின் அக்காட்சி தானே இன்பத்தையும் இன்று ஒழிக்கும் என எழுவாய் வருவித்தோதுக.
சென்மே என்புழி ஏகாரம் அதற்குரிய மெய்யூர்ந்து வந்த முன்னிலையசை.
இதனை,
புனலணியூர! முடிசுமந்தோர்க்கும் நான்முகத்தவற்கும் இருபாற் பகுத்த ஒருநுதற் கண்ணவன்
கூடலில், தொடியினர் காணின், நின்பாளணியுமுன்பு நீங்குவர், ஆதலா எங்கால் தொடல்
சென்மே! என வினை முடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.
|