|
|
செய்யுள்
96
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
வனப்புடை
யனிச்சம் புகைமுகிழ் கியதென
விவ்வணங் கவ்வதர்ப் பேய்த்தேர்க் கிடைந்தன
டென்றிசைக் கோமகன் பகடு பொலிந்தன்ன
கறையடிச் சென்னியி னகநுதி போக்கிக்
குருத்தயில் பேழ்வாய்ப் பற்படைச் சீய |
10
|
|
மதர்தொறுங்
குழுவு மவற்றினு மற்றவன்
கடுங்காற் கொற்றத் தடுந்தூ துவரெனத்
தனிபார்த் துழலுங் கிராதரும் பலரே
யொருகா லிரகத் தெழுபரி பூட்டி
யிருவான் போகிய வெரிசுடர்க் கடவுண் |
15
|
|
மாதவ
ராமென மேன்மலை மறைந்தனன்
மின்பொலி வேலோ யன்னபிர்க் கருளுங்
கூடற் பதிவரு மாடற் பரியோ
னெட்டெட் டியற்றிய கட்டமர் சடையோ
னிருசர ணடைந்த மறுவிலர் போல |
20
|
|
வருளுடன்
றமியை வாடினை யைய
தண்ணீர் வாய்தருஞ் செந்நிறச் சிதலை
யுதவுதி ரரிசி யன்ன செந்தினை
நுண்பதந் தண்டேன் விளங்கனி முயற்றசை
வெறிக்கட் கவைடியைக் கடுங்கான் மேதி |
25
|
|
யன்புமகப்
பிழைத்துக் கல்லறைப் பொழிந்த
வறட்பா லின்னவெம் முழையுள வயின்று காருட
லனுங்கிய பைங்கட் கறையடி
சென்னி தூங்கி நின்றது காட்டு
நெடுமரை யதள்வேய் சில்லிடக் குரம்பையின் |
|
|
மற்றதன்
றோலி லுற்றிரு வீருங்
கண்படுத் திரவி கீறுமு
னெண்பட நும்பதி யேகுதல் கடனே. |
(உரை)
கைகோள்: களவு. கண்டோர் கூற்று.
துறை: நெறிவிலக்கிக்
கூறல்
(இ-ம்.)
இதற்கு :பொழுது மாறு முட்குவரத் தோன்றி, வழுவினாகிய குற்றங் காட்டலு, மூரது சார்வ்ய்ஞ்
செல்லுந் தேயமு, மார்வ நெஞ்சமொடு செப்பிய கிளவியும் (தொல். அகத் 40) என்னும்
விதிகொள்க.
1
- 2: மின்......................................வேலோய்
(இ-ள்)
மின்பொலி வேலோய்-மின்னல்போல ஒளிருகின்ற வேற்படையை யுடையோய்! என்க.
(வி-ம்.)
மின்-மின்னல். வேலோய் என்றது தலைவனுடைய மறப் பண்பினைச் சிறப்பித்து நின்றது.
12:
வனப்பு...................................இடைந்தனள்
(இ-ள்)
இ அணங்கு-இப் பெருமகளோ-; வனப்பு உடை அனிச்சம் புகை மூழ்கியது என-அழகுடைய அனிச்ச
மலரானது புகையால் மூடப்பட்டது போல; அ அதர் பேய்த்தேர்க்கு இடைந்தனள்-நீவிர் நடந்து
வந்த அப்பாலை வழியில் எழுந்த கானலால் நலியப்பட்டுப் பெரிதும் வருந்தி இருக்கின்றனள்
என்க.
(வி-ம்.)
அணங்கு என்றது தலைவியை; உவமையாகுபெயர். அணங்கு-தெய்வப்பெண். அதர்-வழி. பேய்த்தேர்-கானல்.
இடைதல்- வருந்துதல். கானலால் தாக்குண்டு வருந்தியிருக்கின்றாள் என்பது கருத்து. தோற்றத்தால்
தலைவியின் தெய்வத்தன்மையைக் கண்டு இப்பணங்கு என்றார்.
3
- 8: தெந்திசை...........................பலரே.
(இ-ள்)
தெந்திசைக் கோமகன் பகடு பொலிந்து அன்ன- தெற்கின் கண்ணதாகிய உலகிற்கு அரசனாகிய
கூற்றுவனுடைய ஊர்தியாகிய எருமைக்கடா பொலிவுற்றிருந்தாற்
போன்ற; கறையடி சென்னியில் நகநுதி போக்கி-யானையினது மத்தகத்தில் தனது நகத்தின்
நுனியை ஊன்றிப் பிளந்து; குருத்து அயில் பேழ்வாய் பல்படை சீயம்-மூளையைப் பருகுகின்ற
பெரிய வாயையும் பல்லாகிய படைக்கலத்தையு முடைய சிங்கங்கள்; அதர்தொறும் குழுவும்-இனி
நீயிர் செல்லும் வழிகள்தொறும் நும்மை நெருங்குவனவாம்; அவற்றினும்-அச்சிங்கங்களினுங்காட்டில்
கொடியோராய்; மற்றவன் கடுங்கால் கொற்றத்து அடும் தூதுவர் என-அக்கூற்றுவனது கடிய நடையையும்
வெற்றியையுமுடைய கொல்கின்ற தூதுவர் போல; தனிபார்த்து உழலும் கிராதரும் பலர்-தனியே
ஆறு செல்வோர் வரவினை எதிர்பார்த்துத் திரிகின்ற வேடரும் பலராவார் என்க.
(வி-ம்.)
தென்றிசைக் கோமகன்-கூற்றுவன். பகடு- எருமைக்கடா. இது யானைக்குவமை. கறையடி-யானை.
நுதி-நுனி. அயிலுதல்-உண்ணுதல். பல்லாகிய படைக்கலன் என்க. அதர்-வழி. மற்றவன்-மேலே
கூறிய கூற்றுவன். கடுங்கால்-விரைந்து நடக்குங் கால். கொற்றம் வெற்றி. அடுந்தூதுவர்:
வினைத்தொகை. அடுதல்- கொல்லுதல். தனி-தனிமை. உழலுதல்-திரிதல். கிராதர்-வேடர்.
வேடர் சிங்கங்களினும் பலர் என்றவாறு.
9
- 16: ஒருகால்.....................................ஐய
(இ-ள்)
ஒருகால் இரதத்து எழுபரி பூட்டி இருவான் போகிய எரிசுடர்க்கடவுள்- ஒற்றையாழித்தேரில்
ஏழு குதிரைகளைப் பூட்டி ஊர்ந்து பெரிய வானத்திலே செல்லுகின்ற கதிரவன்; மாதவராம்
என-சிறந்த துறவிகளைப்போலத் தன்னிற்றானாயடங்கி; மேல்மலை அறைந்தனன்-மேற்றிசை
மலையில் ஒளித்தான் ஆதலின்; அன்பினர்க்கு அருளும் கூடல்பதி வரும் ஆடல்பரியோன்-
மெய்யன்பராகிய மணிவாசகருக்கு அருள் செய்தற்கிடமாகிய மதுரை நகரத் தெழுந்தருளி வந்த
வெற்றியுள்ள மறைப்புரவையையுடைய இறைவனும்; எட்டு எட்டு இயற்றிய கட்டு அமர்ச்சடையோன்-
அறுபத்து நான்கு திருவிளையாடல் செய்தருளிய சுற்றப்பட்ட சடையையுடையவனுமாகிய சிவபெருமானுடைய;
இருசரண் அடைந்த தூயோர்போல அருளுடன் தமியை ஐய வாடினை-இரண்டு திருவடியையும் புகலாய்
அடைந்த தூயோர்போல அருளோடே தமியையாய் ஐயனே! நீயும் வருந்தியுள்ளாய் என்க.
(வி-ம்.)
ஒருகால்-ஓர் உருளை. இருவான்-பெரிய வானம். எரிசுடர்க்கடவுள்-கதிரவங் எரிகின்ற சுடர்களுக்கெல்லாம்
முதல்வனாகலின் அங்ஙனம் கூறினர். மாதவர்-சிறந்த துறவோர். துறவோர் தன்மனத்தைப்
புலன்களிற் செல்லாமல் தடுத்துத் தம்முள்ளே தாமாய் அடங்குதலின்
விண்ணிற்பரவிய கதிர்களைச் சுருக்கித் தன்னிலேதானாய் அடங்கும் கதிரவனுக்கு உவமை
கூறினார். அன்பினர்க்கு வரும் ஆடல் பரியோன் என்றதனால் அன்பினர் மணிவாசகப் பெருமான்
என்பது பெற்றாம். எட்டெட்டு- அறுபத்துநான்கு திருவிளையாடல். மறு: காமவெகுளி மயக்கம்.
அடியார் அருளுடனே தனித்தல்போல அருளுடன் தமியை என்றார். அணங்கு இடைந்தனள்; அவளேயன்றி
நீயும் வாடினை என்பது கருத்து.
17 - 22: தண்ணீர்............................................அயின்று
(இ-ள்)
தண்ணீர் வாய்தரும் செந்நிறச் சிதலை அதவு உதிர் அரிசி அன்ன-குளிர்ந்த நீரினை
உமிழ்கின்ற செவந்த நிறமுடைய செல்லினையும் அத்திக்கனியினின்றும் உதிருகின்ற வித்தினையும்
ஒத்த; செந்தினை நுண்பதம்-சிவந்த தினையால் ஆக்கிய சோறும்; தண்தேன்-குளிர்ந்த
தேனும்; விளங்கனி-விளாம்பழமும்; முயல்தசை- முயலிறைச்சியும்; வெறிக்கண் கவையடி கடுங்கால்
மேதி-வெறித்த கண்கலையும் பிளவுபட்ட குளம்பினையும் கடிய நடையினையுடைய காலையுமுடைய
காட்டெருமைகள்; அன்பு மகப்பிழைத்து கல்லறை பொழிந்த வறட்பால்-தமக்கு இனிய கன்றுகளைக்
காணாமையால் கற்பாறைகளின் மேலே சொரிந்த உலர்ந்த பாற்கட்டியும் ஆகிய; எம்உழை
உளஇன அயின்று-எம்பால் உள்ள இவ்வுணவுகளை உண்டு என்க.
(வி-ம்.)
செல் தன்வாய்நீரை உமிழ்ந்தே மண்ணைப்பதம் செய்து புற்றெடுத்தல் இயல்பு. இதனால்
கரையான் தன்வாய்நீரைக் கொண்டே பிழைக்கும் என்னும் பழமொழி வழங்குவதாயிற்று.
சிதலை, செல், கரையான் என்பன ஒருபொருட்கிளவி. அதவு- அத்திக்கனி: ஆகுபெயர். அரிசி
என்றது அத்தீவிதையினை சிதலையும் அத்திவிதையும் தினைச் சோற்றிற்குவமை. மேதி-எருமை.
மக-ஈண்டுக் கன்று. கல்லறை-கற்பாறை. வறட்பால்-உலர்ந்த பாற்கட்டி. அயிலுதல்-உண்ணுதல்.
23
- 28: கார்........................கடனே
(இ-ள்)
கார் உடல் அனுங்கிய பைங்கண் கறையடி-கரிய முகிலைத் தன்நிறத்தால் தோற்கச் செய்த
பசிய கண்ணையுடைய யானை; சென்னி தூங்கி நின்றது காட்டும்-தலையைத் தொங்கவிட்டு நின்ற
தன்மையைக் காட்டுகின்ற; நெடுமரை அதள் வேய் சில்இடக் குரம்பையில்-நெடிய மானினுடைய
தோல்களாலே மேற்கூரை வேயப்பட்ட சிறிய இடத்தையுடைய எம் குடிலில்; மற்று அதன் தோலில்-அம்மானின்
தோலாகிய பாயலிலே; இருவீரும் உற்று-நீவிர் இருவீரும் இருந்து; கண்படுத்து-இன்றிரவு
துயில்கொண்டு; இரவி கீறுமுன்-ஞாயிறு கால் சீக்குமுன்; எண்பட நும்பதி ஏகுதல் கடன்-நுங்கருத்து
நிறைவேறும்படி நும்மூர்க்குச் செல்லுதல் முறைமையாம் என்க.
(வி-ம்.)
அனுங்குதல்-வருந்துதல். ஈண்டுத் தோற்பித்தல்- தலையைத் தொங்க விட்டுக்கொண்டு நின்ற
யானை குடிலுக்குவமை. மரை-ஒருவகை மான.் சில்லிடம் என்றது சிறுமையான இடம் என்னும் பொருள்பட
நின்றது. குடம்பை-குடில். அதன் தோல்-அந்த மானிந்தோல். கண்படுத்தல்-துயிலல். கீறுதல்-அகற்றல்.
இரவி இருளைக் கீறுமுன்னர் என்றவாறு. எண்-எண்ணம். கடன்-முறைமை.
இதனை,
வேலோய்! நின் தலைவி அவ்வதர்ப் பேய்த்தேர்க் கிடைந்தனள். சீயம் அதர்தொறுங்
குழுவும்; கிராதரும் பலருளர்; சுடர்க் கடவுளும் மலைமறைந்தனன்; அன்பர்க்கருளும் கூடல்வரும்
பரியோனாகிய எட்டெட்டியற்றிய சடையோனது சரணடைந்த மறுவிலர் போல நியும் அருளுடன்
தமியை. வாடினை; (ஆதலால்) தினைச்சோறும் தேனும் முதலிய எமதில்லின்கண்ணுள்ளவற்றை
யுண்டு இருவிரும் இற்றையிரவில் எமது குரம்பையிற் றுயின்று, விடியுமுன் நும் எண்ணப்படி
நும்பதிக் கேகுதல் கடனாமென வினை முடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.
|