தொடக்கம் |
01-10
|
|
|
1.
தமர் நினைவு கூறி வரைவு கடாதல்
|
|
|
|
அமுதமும்
தருவும் பணிவரப் படைத்த |
|
உடலக்கண்ணன்
உலகு கவர்ந்து உண்ட |
|
களவுடை
நெடுஞ் சூர்க் கிளை, களம் விட்டு ஒளித்த-- |
|
அருள்
நிறைந்து அமைந்த கல்வியர் உளம் எனத் |
|
தேக்கிய
தேனுடன் இறால் மதி கிடக்கும்-- |
5
|
எழு
மலை பொடித்த கதிர் இலை நெடு வேல் |
|
வள்ளி
துணைக் கேள்வன் புள்ளுடன் மகிழ்ந்த |
|
கறங்கு
கால் அருவிப் பரங்குன்று உடுத்த |
|
பொன்
நகர்க் கூடல் சென்னி அம் பிறையோன் |
|
(பொதியப்
பொருப்பன் மதியக் கருத்தினை, |
10
|
'கொங்கு
தேர் வாழ்க்கை'ச் செந்தமிழ் கூறி, |
|
பொற்குவை
தருமிக்கு அற்புடன் உதவி, |
|
என்
உளம் குடிகொண்டு இரும் பயன் அளிக்கும் |
|
கள்
அவிழ் குழல் சேர் கருணை எம்பெருமான்) |
|
மலர்ப்பதம்
நீங்கா உளப் பெருஞ் சிலம்ப! |
15
|
கல்லாக்
கயவர்க்கு அரு நூல் கிளை மறை |
|
சொல்லினர்
தோம் என, துணை முலை பருத்தன; |
|
பல
உடம்பு அழிக்கும் பழி ஊன் உணவினர் |
|
தவம்
என, தேய்ந்தது, துடி எனும் நுசுப்பே; |
|
கடவுள்
கூறார் உளம் என, குழலும், |
20
|
கொன்றை
புறவு அகற்றி, நின்ற இருள் காட்டின; |
|
சுரும்பு
படிந்து உண்ணும் கழுநீர் போல, |
|
கறுத்துச்
சிவந்தன கண் இணை மலரே; |
|
ஈங்கு
இவை நிற்க: சீறூர், பெருந் தமர், |
|
இல்லில்
செறிக்கும் சொல்லுடன், சில் மொழி |
25
|
விள்ளும்;
தமியில் கூறினர், |
|
உள்ளம்
கறுத்துக் கண் சிவந்து உருத்தே. |
|
|
|
உரை
|
|
|
|
|
2.
தாய் அறிவு கூறி வரைவு கடாதல்
|
|
|
|
'பூ',
'மணி', 'யானை', 'பொன்', என எடுத்து, |
|
திங்களும்,
புயலும், பரிதியும், சுமந்த |
|
மலை வரும்
காட்சிக்கு உரியஆகலின், |
|
நிறையுடைக்
கல்வி பெறு மதி மாந்தர் |
|
ஈன்ற
செங் கவி எனத் தோன்றி, நனி பரந்து, |
5
|
பாரிடை
இன்பம் நீளிடைப் பயக்கும் |
|
பெரு நீர்
வையை வளை நீர்க் கூடல் |
|
உடல்,
உயிர், என்ன உறைதரு நாயகன் |
|
(கடுக்கை
மலர் மாற்றி வேப்பலர் சூடி, |
|
ஐவாய்க்
காப்பு விட்டு அணி பூண் அணிந்து, |
10
|
விரிசடை
மறைத்து மணி முடி கவித்து, |
|
விடைக்கொடி
நிறுத்திக் கயற்கொடி எடுத்து, |
|
வழுதி
ஆகி முழுது உலகு அளிக்கும், |
|
பேர்
அருள் நாயகன்) சீர் அருள் போல, |
|
மணத்துடன்
விரிந்த கைதைஅம் கானல், |
15
|
நலத்
தொடர் வென்றிப் பொலம் பூண் குரிசில் |
|
சின்னம்
கிடந்த கொடிஞ்சி மான் தேர், |
|
நொச்சிப்
பூ உதிர் நள் இருள் நடு நாள், |
|
விண்ணம்
சுமந்து தோற்றம் செய்தென, |
|
தன் கண்போலும்
என்கண் நோக்கி, |
20
|
கள்வரைக்
காணும் உள்ளம் போலச் |
|
செம்
மனம் திருகி, உள்ளம் துடித்து, |
|
புறன்
வழங்காது, நெஞ்சொடு கொதித்தனள், |
|
மாறாக்
கற்பின் அன்னை-- |
|
கூறு ஆம்
மதியத் திரு நுதற் கொடியே! |
25
|
|
|
உரை
|
|
|
|
|
3. பாங்கி அஞ்சி அச்சுறுத்தல்
|
|
|
|
பகையுடன்
கிடந்த நிலை பிரி வழக்கினைப் |
|
பொருத்தலும்,
பிரித்தலும், பொருபகை காட்டலும், |
|
உட்பகை
அமைத்தலும், உணர்த்து சொல் பொருத்தலும், |
|
ஒரு
தொழிற்கு இரு பகை தீராது வளர்த்தலும், |
|
செய்யா
அமைச்சுடன் சேரா அரசன் |
5
|
நாடு
கரிந்தன்ன காடு கடந்து இயங்கி-- |
|
இடும்பை
நிரப்பினர்க்கு ஈதலின்--இறந்தோர்க்கு, |
|
இதழ்
நிறை மதுவம் தாமரை துளித்தென, |
|
விழி
சொரி நீருடன் பழங்கண் கொண்டால், |
|
(உலகு
இயல் நிறுத்தும் பொருள் மரபு ஒடுங்க, |
10
|
மாறனும்
புலவரும் மயங்குறு காலை, |
|
முந்துறும்
பெரு மறை முளைத்தருள் வாக்கால், |
|
'அன்பின்
ஐந்திணை' என்று அறுபது சூத்திரம், |
|
கடல்
அமுது எடுத்துக் கரையில் வைத்ததுபோல், |
|
பரப்பின்
தமிழ்ச் சுவை திரட்டி, மற்று அவர்க்குத் |
15
|
தெளிதரக்
கொடுத்த தென் தமிழ்க் கடவுள், |
|
தழற்கண்
தரக்கின் சரும ஆடையன் |
|
கூடல்
அம் பெரும் பதி கூறார் கிளை என) |
|
'நிறை
நீர்க் கயத்துள் ஒரு தாள் நின்று, |
|
தாமரை,
தவம் செய்து, அளியுடன் பெற்ற |
20
|
திருமகட்கு
அடுத்தது என்?' என்று, |
|
ஒருமை
காண்குவர்--துகிர்க் கிளைக் கொடியே! |
|
|
|
உரை
|
|
|
|
|
4. பிரிவு அருமை கூறி வரைவு
கடாதல்
|
|
|
|
அண்டம்
ஈன்று அளித்த கன்னி முனிவாக, |
|
திரு
நுதல் முளைத்த கனல் தெறு நோக்கினில், |
|
ஆயிர
மணிக் கரத்து அமைத்த வான் படையுடன் |
|
சயம்
பெறு வீரனைத் தந்து, அவன் தன்னால், |
|
உள்ளத்து
அருளும் தெய்வமும் விடுத்த |
5
|
இருள்
மனத் தக்கன் பெரு மகம் உண்ணப் |
|
புக்க
தேவர்கள் பொரு கடற்படையினை |
|
ஆரிய
ஊமன் கனவு என ஆக்கிய |
|
கூடல்
பெருமான் பொதியப் பொருப்பகத்து-- |
|
அருவி
அம் சாரல் இருவி அம் புனத்தினும், |
10
|
மயிலும்,
கிளியும், குருவியும், 'நன்றி |
|
செய்குநர்ப்
பிழைத்தோர்க்கு உய்வு இல' என்னும் |
|
குன்றா
வாய்மை நின்று நிலை காட்டித் |
|
தங்குவன
கண்டும், வலி மனம் கூடி, |
|
ஏகவும்
துணிந்தனம்--எம் பெரும் படிறு |
15
|
சிறிது
நின்று இயம்ப, உழையினம்! கேண்மின்: இன்று, |
|
ஊற்று
எழும் இரு கவுட் பெரு மதக் கொலை மலைக் |
|
கும்பம்
மூழ்கி, உடல் குளித்து ஓட, |
|
பிறை
மதி அன்ன கொடுமரம் வாங்கி, |
|
தோகையர்
கண் எனச் சுடு சரம் துரக்கும் |
20
|
எம்முடைக்
குன்றவர் தம் மனம் புகுத, இப் |
|
புனக்
குடிக் கணியர் தம் மலர்க்கை ஏடு அவிழ்த்து, |
|
வரிப்புற
அணில் வாற் கருந் தினை வளை குரல் |
|
கொய்யும்
காலமும் நாள்பெறக் குறித்து, |
|
நிழலும்
கொடுத்து, அவர் ஈன்ற |
25
|
மழலை
மகார்க்கும் பொன் அணிந்தனரே. |
|
|
|
உரை
|
|
|
|
|
5.
இளமை கூறி மறுத்தல்
|
|
|
|
இரண்டு
உடல் ஒன்றாய்க் கரைந்து, கண் படாமல், |
|
அளவு
இயல் மண நிலை பரப்பும் காலம் |
|
தளை
கரை கடந்த காமக்கடலுள் |
|
புல்
நுனிப் பனி என மன்னுதல் இன்றி, |
|
பீரம்
மலர்ந்த வயாவு நோய் நிலையாது, |
5
|
வளை
காய் விட்ட புளி அருந்தாது, |
|
செவ்
வாய் திரிந்து வெள் வாய் பயவாது, |
|
மனை
புகையுண்ட கரு மண் இடந்து |
|
பவள
வாயில் சுவை காணாது, |
|
பொற்குட
முகட்டுக் கரு மணி அமைத்தெனக் |
10
|
குங்குமக்
கொங்கையும் தலைக்கண் கறாது, |
|
மலர
அவிழ்ந்த தாமரைக் கயல் என |
|
வரி
கொடு மதர்த்த கண் குழியாது, |
|
குறி
படு திங்கள் ஒருபதும் புகாது, |
|
பொன்
பெயர் உடையோன் தன் பெயர் கெடுப்ப, |
15
|
தூணம்
பயந்த மாண் அமர் குழவிக்கு, |
|
அரக்கர்
கூட்டத்து அமர் விளையாட, |
|
நெருப்பு
உமிழ் ஆழி ஈந்தருள் நிமலன் |
|
(கூடல்
மாநகர், ஆட எடுத்த |
|
விரித்த
தாமரை குவித்த தாளோன்) |
20
|
பேர்
அருள் விளையாச் சீர்-இலர் போல, |
|
துலங்கிய
அமுதம் கலங்கிய தென்ன, |
|
இதழ்
குவித்துப் பணித்த குதலை தெரியாது; |
|
முருந்து
நிரைத்த திருந்து பல் தோன்றாது; |
|
தெய்வம்
கொள்ளார் திணி மனம் என்ன, |
25
|
விரிதரு
கூழையும் திரு முடி கூடாது; |
|
துணை
மீன் காட்சியின் விளை கரு என்ன, |
|
பார்வையின்
தொழில்கள் கூர்விழி கொள்ளாது; |
|
மறு
புலத்து இடுபகை வேந்து அடக்கியது என, |
|
வடுத்து
எழு கொலை முலை பொடித்தில அன்றே: |
30
|
செம்
மகள் மாலை இம் முறை என்றால், |
|
வழுத்தலும்
வருதலும் தவிர்தி-- |
|
மொழிக்
குறி கூடாச் செவ் வேலோயே! |
|
|
|
உரை
|
|
|
|
|
6.
சுவடு கண்டு இரங்கல்
|
|
|
|
நிணம்,
உயிர் உண்ட, புலவு பொறாது, |
|
தலை
உடல் அசைத்து, சாணை வாய் துடைத்து, |
|
நெய்
குளித்து அகற்றும் நெடு வேல் விடலை-- |
|
அந்தணர்
உகும் நீர்க்கு அருட்கரு இருந்து |
|
கோடா
மறை மொழி நீடுறக் காணும் |
5
|
கதிர்
உடல் வழி போய்க் கல்லுழை நின்றோர் |
|
நெருப்பு
உருத்தன்ன செருத் திறல் வரைந்த |
|
வாசகம்
கண்டு மகிழ்ந்ததும் இவணே; |
|
துணை
விளக்கு எரியும் நிலைவிழிப் பேழ்வாய்த் |
|
தோகை
மண் புடைக்கும் காய்புலி மாய்க்க |
10
|
வாய்
செறித்திட்ட மாக் கடிப்பு இதுவே; |
|
செடித்தலைக்
கார் உடல் இடிக் குரற் கிராதர் |
|
மறைந்து
கண்டு அக் கொலை மகிழ் உழி இந் நிலை; |
|
தவ
நதி போகும் அரு மறைத் தாபதர் |
|
நன்னர்
கொள் ஆசி நாட்டியது இவ் உழை; |
15
|
கறை
அணல் புயங்கன் எரி தழல் விடத்தை |
|
மலை
மறை அதகம் மாற்றிய அதுபோல், |
|
கொடுமரக்
கொலைஞர் ஆற்றிடைக் கவர, |
|
எண்ணாது
கிடைத்த புண் எழு செரு நிலைக் |
|
கை
வளர் கொழுந்து மெய் பொடியாகென |
20
|
சிற்றிடைப்
பெரு முலைப் பொற்றொடி மடந்தை தன் |
|
கவைஇய
கற்பினைக் காட்டுஉழி இதுவே; |
|
குரவம்
சுமந்த குழல் விரித்து இருந்து |
|
பாடலம்
புனைந்த கற் பதுக்கை இவ் இடனே; |
|
ஒட்டு
விட்டு உலறிய பராரை நெட்டாக் கோட்டு, |
25
|
உதிர்
பறை எருவை உணவு ஊன் தட்டி, |
|
வளை
வாய்க் கரும் பருந்து இடை பறித்து உண்ணக் |
|
கண்டு
நின்று உவந்த காட்சியும் இதுவே; |
|
செம்மணிச்
சிலம்பும் மரகதப் பொருப்பும், |
|
குடுமி
அம் தழலும் அவண் இருட் குவையும், |
30
|
முளை
வரும் பகனும் அதனிடை மேகமும், |
|
சேயிதழ்
முளரியும் கார் இதழ்க் குவளையும், |
|
ஓர்
உழைக் கண்ட உவகையது என்ன, |
|
எவ்
உயிர் நிறைந்த செவ்வி கொள் மேனியின் |
|
அண்டப்
பெருந் திரள் அடைவு ஈன்று அளித்த |
35
|
கன்னி
கொண்டு இருந்த மன் அருட் கடவுள் |
|
(மலை
உருக் கொண்ட உடல் வாள் அரக்கர் |
|
வெள்ளமும்,
சூரும், புள் இயல் பொருப்பும், |
|
நெடுங்
கடற்கிடங்கும், ஒருங்கு உயிர் பருகிய |
|
மணி
வேற் குமரன் முதல் நிலை வாழும் |
40
|
குன்று
உடுத்து ஓங்கிய கூடல் அம் பதியோன்) |
|
தாள்
தலை தரித்த கோளினர் போல, |
|
நெடுஞ்
சுரம் நீங்கத் தம் கால் |
|
அடும்
தழல் மாற்றிய கால் குறி இவணே. |
|
|
|
உரை
|
|
|
|
|
7. நற்றாய்
வருந்தல்
|
|
|
|
பொடித்து
அரும்பாத சின் முலைக் கொடிமடந்தையள், |
|
மணி
மிளிர் பெருங் கட்கு இமை காப்பு என்ன, |
|
விழித்துழி
விழித்தும், அடங்குழி அடங்கியும், |
|
தன்னை
நின்று அளித்த என்னையும் ஒருவுக; |
|
பல்
மணிக் கலன்கள் உடற்கு அழகு அளித்தென, |
5
|
சுற்று
உடுத்து ஓங்கிய ஆயமும் துறக்குக; |
|
பிணிமுக-மஞ்ஞை
செருமுகத்து ஏந்திய |
|
மூ-இரு
திருமுகத்து ஒரு வேலவற்கு, |
|
வான்
உற நிமிர்ந்த மலைத்தலை முன்றிலின், |
|
மனவு
அணி மடந்தை, வெறியாட்டாளன், |
10
|
வேல்மகன்,
குறத்தி, மா மதி முதியோள்-- |
|
தொண்டகம்
துவைப்ப, முருகு-இயம் கறங்க-- |
|
ஒருங்கு
வந்து, இமையா அருங் கடன் முற்றிய |
|
பின்னர்,
நின்று ஏற்ற கைத்தாயையும் பிழைக்குக; |
|
கருந்
தலைச் சாரிகை, செவ் வாய்ப் பசுங்கிளி, |
15
|
தூவி
அம் தோகை, வெள் ஓதிமம், தொடர் உழை, |
|
இவையுடன்
இன்பமும் ஒருவழி இழக்குக; |
|
(சேயிதழ்
இலவத்து உடைகாய்ப் பஞ்சி |
|
புகை
முரிந்து எழுந்தென விண்ணத்து அலமர, |
|
குழை
பொடி கூவையின் சிறை, சிறை தீந்த |
20
|
பருந்தும்
ஆந்தையும் பார்ப்புடன் தவழ, |
|
உடை
கவட்டு ஓமை உலர் சினை இருக்கும் |
|
வளை
கட் கூகையும் மயங்கி வாய் குழற, |
|
ஆசையின்
தணியா அழல் பசி தணிக்கக் |
|
காளிமுன்
காவல் காட்டி வைத்து ஏகும் |
25
|
குழிகட்
கரும் பேய் மகவு கண் முகிழ்ப்ப, |
|
வேம்
உடல் சின்னம் வெள்ளிடை தெறிப்ப, |
|
நெடுந்
தாட் குற்றிலை வாகை நெற்று ஒலிப்ப, |
|
திசை
நின்று எழாது, தழல் முகம் தெறிப்ப, |
|
சுடலையில்,
சூறை இடை இடை அடிக்கும் |
30
|
பேர்
அழற் கானினும், நாடும் என் உளத்தினும், |
|
ஒரு
பால் பசுங்கொடி நிறை பாட்டு அயர, |
|
பாரிடம்
குனிப்ப, ஆடிய பெருமான்) |
|
வையகத்து
உருவினர் மலர் ஆவறிவினைப் |
|
புலன்
நிரை மறைத்த புணர்ப்பு-அதுபோல, |
35
|
குளிர்
கொண்டு உறையும் தெளிநீர் வாவியை |
|
வள்ளை,
செங்கமலம், கள் அவிழ் ஆம்பல், |
|
பாசடை
மறைக்கும் கூடல் பெருமான் |
|
செந்
தாள் விடுத்து உறை அந்தர்கள் தம்மினும், |
|
மூவாத்
தனி நிலைக்கு இருவரும் ஓர் உயிர் |
40
|
இரண்டு
எனக் கவைத்த நல் அரண் தரு தோழியை, |
|
செரு
விழும் இச்சையர், தமது உடல் பெற்ற |
|
இன்புகள்
நோக்கா இயல்பு-அது போல, |
|
மருங்கு
பின் நோக்காது, ஒருங்கு விட்டு அகல, |
|
பொருந்தியது,
எப்படி, உள்ளம்-- |
45
|
அருந்
தழற் சுரத்தின் ஒருவன் அன்பு எடுத்தே? |
|
|
|
உரை
|
|
|
|
|
8. செலவு நினைந்து உரைத்தல்
|
|
|
|
உயிர்
புகும் சட்டகம் உழிதொறும் உழிதொறும் |
|
பழவினை
புகுந்த, பாடகம் போல, |
|
முதிர்
புயல் குளிறும் எழு மலை புக்க |
|
கட்டுடைச்
சூர் உடல் காமம் கொண்டு |
|
பற்றி
உட்புகுந்து, பசுங் கடல் கண்டு, |
5
|
மாவொடும்
கொன்ற மணி நெடுந் திரு வேல் |
|
சேவல்அம்
கொடியோன் காவல் கொண்டிருந்த |
|
குன்றம்
உடுத்த கூடல் அம் பதி இறை, |
|
தொடர்ந்து
உயிர் வவ்விய விடம் கெழு மிடற்றோன் |
|
(புண்ணியம்
தழைத்த முன் ஓர் நாளில், |
10
|
இரு
விரல் நிமிர்த்துப் புரிவொடு சேர்த்தி, |
|
குழை
உடல் தலை விரி கைத்திரி கறங்க; |
|
ஒரு
விரல் தெறித்தும், ஐவிரல் குவித்தும், |
|
பெரு
வாய் ஒரு முகப் படகம் பெருக்க; |
|
தடா
உடல் உம்பர்த் தலை பெறும் முழவம் |
15
|
நான்
முகம் தட்டி, நடு முகம் உரப்ப; |
|
ஒரு
வாய் திறந்து உள் கடிப்பு உடல் விசித்த |
|
சல்லரி
அங்கைத் தலை விரல் தாக்க; |
|
கயந்தலை
அடி என, கயிறு அமை கைத்திரி, |
|
இரு
விரல் உயர்த்திச் செரு நிலை, இரட்ட; |
20
|
இரு
தலை குவிந்த நெட்டுடல்-தண்ணுமை |
|
ஒரு
முகம் தாழ்த்தி, இரு கடிப்பு ஒலிப்ப; |
|
திருமலர்
எழுதிய வரை இருபத்தைந்து |
|
அங்குலி
இரண்டு இரண்டு அணைத்து விளர் நிறீஇ, |
|
மும்
முகக் கயலுடன் மயிர்க் கயிறு விசித்த |
25
|
கல்லவடத்
திரள் விரல்-தலை கறங்க; |
|
மரக்கால்
அன்ன ஒருவாய்க்கோதை |
|
முகத்தினும்
தட்ட, மூக்கினும் தாக்க; |
|
நாடு
இரு முனிவர்க்கு ஆடிய பெருமான்) |
|
திருவடி
வினவாக் கரு உறை மாக்கள் |
30
|
நெஞ்சினும்
கிடந்து நீண்ட வல் இரவில், |
|
செல்லவும்
உரியம், தோழி, நில்லாது-- |
|
எம்
எதிர்வு இன்றி, இருந்து எதிர்ப்பட்டு, |
|
மறைவழி
ஒழுகா மன்னவன் வாழும் |
|
பழி
நாட்டு ஆர்ந்த பாவம் போலச் |
35
|
சேர
மறைத்த கூர் இருள் நடு நாள், |
|
'அரிதின்
போந்தனிர்' என்று, ஓர் |
|
பெரிது
இன் வாய்மை வெற்பனின் பெறினே! |
|
|
|
உரை
|
|
|
|
|
9. அறத்தொடு நிற்றல்
|
|
|
|
தன்னுழைப்
பல உயிர் தனித்தனி படைத்துப் |
|
பரப்பிக்
காட்டலின், பதுமன் ஆகியும்; |
|
அவ்
உயிர், எவ் உயிர், அனைத்தும் காத்தலின், |
|
செவ்வி
கொள் கரு முகிற் செல்வன் ஆகியும்; |
|
கட்டிய
கரை வரம்பு உட்புக அழித்து, |
5
|
நீர்
தலை தரித்தலின், நிமலன் ஆகியும்; |
|
தருவும்
மணியும் சங்கமும் கிடைத்தலின், |
|
அரி
முதிர் அமரர்க்கு அரசன் ஆகியும்; |
|
மூன்று
அழல், நான்மறை, முனிவர் தோய்ந்து, |
|
மறை
நிர் உகுத்தலின், மறையோன் ஆகியும்; |
10
|
மீனும்,
கொடியும், விரிதிணை ஐந்தும், |
|
தேன்
உறை தமிழும், திரு உறை கூடலும், |
|
மணத்தலின்,
மதிக் குல மன்னவன் ஆகியும்; |
|
நவ
மணி எடுத்து நல் புலம் காட்டலின், |
|
வளர்
குறி மயங்கா வணிகன் ஆகியும்; |
15
|
விழைதரும்
உழவும், வித்தும், நாறும், |
|
தழைதலின்,
வேளாண் தலைவன் ஆகியும்; |
|
விரிதிரை
வையைத் திரு நதி சூழ்ந்த |
|
மதுரை
அம் பதி நிறை மைம்மலர்க் களத்தினன்-- |
|
இணை
அடி வழுத்தார் அணை தொழில் என்ன, |
20
|
கைதைஅம்
கரை சேர் பொய்தற்பாவையோடு, |
|
இரு
திரை எடுக்கப் பொருதிரை எடுத்தும், |
|
பூழிப்
போனகம் பொதுவுடன் உண்டும், |
|
சாய்
தாள் பிள்ளை தந்து கொடுத்தும், |
|
முட
உடற் கைதை மடல் முறித்திட்டும், |
25
|
கவைத்
துகிர்ப் பாவை கண்ணி சூடக் |
|
குவலயத்
திரு மலர் கொணர்ந்து கொடுத்தும், |
|
நின்றான்
உண்டு ஒரு காளை; |
|
என்றால்,
இத் தொழில் செய்வது புகழே? |
|
|
|
உரை
|
|
|
|
|
10. பரத்தையிற் பிரிவு
கண்டவர் கூறல்
|
|
|
|
வடி
விழிச் சிற்றிடைப் பெரு முலை மடவீர்!- |
|
தொழுமின்;
வணங்குமின்; சூழ்மின்; தொடர்மின்; |
|
கட்டுதிர்
கோதை கடி மலர்; அன்பொடு |
|
முண்டக
முகையின் முலை முகம் தருமின்; |
|
உருளின்
பூழி உள்ளுற ஆடுமின்; |
5
|
எதிர்மின்;
இறைஞ்சுமின்; ஏத்துமின்; இயங்குமின்; |
|
கருப்புரம்
துதைந்த கல் உயர் மணித் தோள் |
|
வாசம்
படரும் மருத்தினும் உறுமின்; |
|
பெருங்
கவின், முன்நாள், பேணிய அருந் தவம் |
|
கண்ணிடை,
உளத்திடை, காண்மின்; கருதுமின்; |
10
|
பூவும்
சுண்ணமும் புகழ்ந்து எதிர் எறிமின்; |
|
யாழில்
பரவுமின்; ஈங்கு, இவை அன்றி, |
|
'கலத்தும்'
என்று எழுமின்; கண்ணளி காண்மின்-- |
|
வெண்சுடர்
செஞ்சுடர், ஆகிய விண்ணொடு, |
|
புவி,
புனல், அனல், கால், மதி புலவோன், என, |
15
|
முழுதும்
நிறைந்த முக்கட் பெருமான் |
|
(பனிக்
கதிர் குலவன் பயந்தருள் பாவையைத் |
|
திருப்
பெரு வதுவை பொருந்திய அந் நாள், |
|
சொன்றிப்
பெரு மலை தின்று நனி தொலைத்த, |
|
கார்
உடல் சிறு நகைக் குறுந் தாட் பாரிடம் |
20
|
ஆற்றாது
அலந்த நீர் நசை அடக்க, |
|
மறிதிரைப்
பெரு நதி வரவழைத்தருளிய |
|
கூடல்
அம் பதி உறை குணப் பெருங் கடவுள்) |
|
முண்டகம்
அலர்த்தும் முதிராச் சேவடி |
|
தரித்த
உள்ளத் தாமரை ஊரன் |
25
|
பொன்
துணர்த் தாமம் புரிந்து ஒளிர் மணித் தேர், |
|
வீதி
வந்தது; வரலான் நும் |
|
ஏதம்
தீர இரு மருங்கு எழுந்தே. |
|
|
|
உரை
|
|
|
|