11-20
 
      11. கல்வி நலம் கூறல்  
 
நிலையினின் சலியா நிலைமையானும்,  
பல உலகு எடுத்த ஒரு திறத்தானும்,  
நிறையும் பொறையும் பெறும் நிலையானும்,  
தேவர் மூவரும் காவலானும்,  
தமனியப் பராரைச் சயிலம் ஆகியும்;
5
அளக்க என்று அமையாப் பரப்பினதானும்,  
அமுதமும் திருவும் உதவுதலானும்,  
பல துறைமுகத்தொடு பயிலுதலானும்,  
முள்ளுடைக் கோட்டு முனை எறி சுறவம்  
அதிர் வளை தடியும் அளக்கர் ஆகியும்;
10
நிறை உளம் கருதி நிகழ்பவை நிகழ்பவை  
தருதலின், வானத் தரு ஐந்து ஆகியும்;  
மறை வெளிப்படுத்தலின், கலைமகள் இருத்தலின்,  
அகமலர் வாழ்தலின், பிரமன் ஆகியும்;  
உயிர் பரிந்து அளித்தலின், புலமிசை போக்கலின்,
15
படி முழுது அளந்த நெடியோன் ஆகியும்;  
இறுதியில் சலியாது இருத்தலானும்,  
மறுமை தந்து உதவும் இருமையானும்,  
பெண் இடம் கலந்த புண்ணியன் ஆகியும்;  
அருள் வழி காட்டலின், இரு விழி ஆகியும்;
20
கொள்ளுநர் கொள்ளக் குறையாது ஆதலின்,  
நிறை உளம் நீங்காது, உறை அருள் ஆகியும்;  
இவை முதல் ஆகி, இரு வினை கெடுக்கும்--  
புண்ணியக் கல்வி உள் நிகழ் மாக்கள்,  
'பரிபுரக் கம்பலை இரு செவி உண்ணும்
25
குடக் கோச் சேரன் கிடைத்து, இது, காண்க' என,  
'மதி மலி புரிசை'த் திருமுகம் கூறி,  
'அன்பு உருத் தரித்த இன்பு இசைப் பாணன்  
பெற நிதி கொடுக்க' என உற விடுத்தருளிய,  
மாதவர் வழுத்தும் கூடற்கு இறைவன்
30
இரு சரண் பெறுகுநர் போல,  
பெரு மதி நீடுவர்; சிறுமதி நுதலே!  
உரை
   
12. முன் நிகழ்வு உரைத்து ஊடல் தீர்த்தல்
 
 
குரவம் மலர்ந்த குவை இருட் குழலீ!  
இருவேம், ஒருகால், எரி அதர் இறந்து,  
விரிதலை, தோல்முலை, வெள் வாய், எயிற்றியர்க்கு  
அரும் புது விருந்து எனப் பொருந்தி, மற்று-அவர் தரும்  
இடியும் துய்த்து, சுரைக் குடம் எடுத்து
5
நீள் நிலைக் கூவல் தெளிபுனல் உண்டும்,  
பழம் புற் குரம்பையிடம் புக்கு இருந்தும்,  
முடங்கு அதள் உறுத்த, முகிழ்நகை எய்தியும்,  
உடன்உடன் பயந்த கட ஒலி ஏற்றும்,  
நடைமலை எயிற்றினிடைத் தலை வைத்தும்,
10
உயர்ந்த இன்பு-அதற்கு, ஒன்று உவமமும் உண்டு எனின்,  
(முலை மூன்று அணைந்த சிலைநுதல்-திருவினை  
அரு மறை விதிக்கத் திருமணம் புணர்ந்து,  
மதிக் குலம் வாய்த்த மன்னவன் ஆகி,  
மேதினி புரக்கும் விதியுடை நல் நாள்,
15
நடுவூர் நகர் செய்து, அடுபவம் துடைக்கும்  
அருட்குறி நிறுவி, அருச்சனை செய்த  
தேவ நாயகன்) கூடல் வாழ் இறைவன்  
முண்டகம் மலர்த்தி, முருகு அவிழ் இரு தாள்  
உறைகுநர் உண்ணும் இன்பமே
20
அறையல் அன்றி, மற்றொன்றினும் அடாதே!  
உரை
   
      13. நிலவு வெளிப்பட வருந்தல்  
 
நண்ணிய பாதி பெண்ணினர்க்கு அமுதம்  
அடு மடைப்பள்ளியின் நடு அவதரித்தும்,  
திரு வடிவு எட்டனுள் ஒரு வடிவு ஆகியும்,  
முக்கணில் அருட்கண் முறைபெற முயங்கியும்,  
படி இது என்னா அடி முடி கண்டும்,
5
புண்ணிய நீறு எனப் பொலி கதிர் காற்றியும்,  
நின்றனை; பெரு மதி! நின்-தொழுதேற்கும்  
நன்னரின் செய்குறும் நன்றி ஒன்று உளதால்;  
ஆயிரம் தழற்கரத்து இருட்பகை மண்டிலத்து,  
ஓரொரு பனிக் கலை ஒடுங்கி நின்று அடைதலின்--
10
கொலை நுதி எயிறு என்று இரு பிறை முளைத்த  
புகர்முகப் புழைக் கை ஒரு விசை தடிந்தும்,  
மது இதழ்க் குவளை என்று அடுகண் மலர்ந்த  
நெடுஞ் சுனை புதைய, புகுந்து எடுத்து அளித்தும்;  
செறிபிறப்பு, இறப்பு, என இரு வகை திரியும்
15
நெடுங் கயிற்று ஊசல் பரிந்து கலுழ் காலை,  
முன்னையின் புனைந்தும், முகமன் அளித்தும்;  
தந்த எம் குரிசில், தனி வந்து, எமது  
கண் எனக் கிடைத்து, எம் கண் எதிர் நடு நாள்--  
(சமயக் கணக்கர் மதி வழி கூறாது,
20
உலகியல் கூறி, 'பொருள் இது' என்ற  
வள்ளுவன் தனக்கு, வளர் கவிப் புலவர் முன்,  
முதற்கவி பாடிய முக்கட் பெருமான்)  
மாதுடன் தோன்றிக் கூடலுள் நிறைந்தோன்-  
தன்னை நின்று உணர்ந்து, தாமும் ஒன்று இன்றி,
25
அடங்கினர் போல, நீயும்,  
ஒடுங்கி நின்று அமைதி, இந் நிலை அறிந்தே!  
உரை
   
        14. தேர் வரவு கூறல்  
 
சலியாப் பராரைத் தமனியப் பொருப்பு எனும்  
ஒரு கால் சுமந்த விண் படர் பந்தரின்,  
மூடிய நால் திசை முகில்-துகில் விரித்து;  
பொற்சிலை வளைத்து, வாயில் போக்கி;  
சுருப்பு அணி நிரைத்த கடுக்கை அம் பொலந் தார்
5
நிரைநிரை நாற்றி; நெடுங் காய் மயிர் அமைத்து;  
ஊதையில் அலகு இட்டு; உறை புயல் தெளித்து;  
போற்றுறு திருவம் நால் திசைப் பொலிய;  
மரகதத் தண்டின் தோன்றி விளக்கு எடுப்ப;  
குடத்தியர் இழுக்கிய அளை சிதறிய போல்
10
கிடந்தன ஆம்பி பரந்தன மறைப்ப,  
பிடவு அலர் பரப்பிப் பூவை பூ இட;  
[உயர் வான் அண்டர் கிளை வியப்பு எய்த,]  
உறவு, இணை, நட்பு, கிளை, வியப்பு எய்த,  
முகில் முழவு அதிர; ஏழ் இசை முகக்கும்
15
முல்லை யாழொடு சுருதி வண்டு அலம்ப;  
களவு அலர் சூடி, புறவு பாட்டு எடுப்ப;  
பசுந் தழை பரப்பிக் கண மயில் ஆல;  
முல்லை அம் திருமகள், கோபம் வாய் மலர்ந்து,  
நல் மணம் எடுத்து, நாள் அமைத்து அழைக்க--
20
வரி வளை முன்கை வரவர இறப்பப்  
போன நம் தனி நமர், புள் இயல் மான் தேர்,  
கடு விசை துரந்த கான் யாற்று ஒலியின்,  
எள்ளினர் உட்க, வள் இனம் மடக்கி, முன்  
தோன்றினர்: ஆகலின், நீயே, மடமகள்!
25
(முன் ஒரு காலத்து, அடுகொலைக்கு அணைந்த  
முகில் உருப் பெறும் ஓர் கொடுமரக் கிராதன்,  
அரு மறைத் தாபதன் அமைத்திடு செம்மலை,  
செருப்புடைத் தாளால், விருப்புடன் தள்ளி,  
வாய் எனும் குடத்தில் வரம்பு அற எடுத்த
30
அமுது கடல் தள்ளும் மணி நீர் ஆட்டி,  
பின்னல் விட்டு அமைத்த தன் தலை மயிர் அணை  
திரு மலர் விண் புக மணி முடி நிறைத்து,  
வெள் வாய் குதட்டிய விழுதுடைக் கருந் தடி  
வைத்து அமையாமுன் மகிழ்ந்து அழுது உண்டு, அவன்
35
மிச்சிலுக்கு இன்னும் இச்சை செய் பெருமான்)  
கூடல் நின்று ஏத்தினர் குலக் கிளை போலத்  
துணர்ப் பெறு கோதையும் ஆரமும் புனைக;  
புதை இருள் துரக்கும் வெயில் மணித் திருவும்,  
தண்ணம் பிறையும், தலை பெற நிறுத்துக;
40
இறை இருந்து உதவா நிறை வளைக் குலனும்;  
பெருஞ் சூடகமும், ஒருங்கு பெற்று அணிக;  
நட்டுப் பகையினர் உட்குடி போல,  
உறவு செய்து ஒன்றா நகை தரும் உளத்தையும்,  
கொலையினர் நெஞ்சம் கூண்ட வல் இருள் எனும்
45
ஐம் பால் குழலையும், அணி நிலை கூட்டுக;  
விருந்து கொண்டு உண்ணும் பெருந் தவர் போல,  
நீங்காத் திருவுடை நலனும்  
பாங்கில் கூட்டுக, இன்பத்தில் பொலிந்தே!  
உரை
   
        15. அழுங்கு தாய்க்கு உரைத்தல்  
 
கல் உயர் வரைத்தோட் செம் மனக் குரிசிலும்,  
கல்லாதவர் உளம் புல்லிய குழலும்,  
இம் மனை நிறை புகுந்து, எழில் மணம் புணர,  
கோளொடு குறித்து வரும் வழி கூறிய  
மறை வாய்ப் பார்ப்பான்மகனும் பழுது இலன்;
5
சோதிடக் கலைமகள் தோற்றம் போல,  
சொரி வெள் அலகரும் பழுது இல் வாய்மையர்;  
உடல் தொடு குறியின், வரும் வழி குறித்த  
மூது அறி பெண்டிரும் 'தீது இலர்' என்ப;  
பெருந் திரட்கண்ணுள் பேச்சு நின்று ஓர்ந்து,
10
வாய்ச் சொல் கேட்ட நல் மதியரும் பெரியர்;  
ஆய் மலர் தெரிந்து இட்டு, வான் பலி தூவி,  
தெய்வம் பராய மெய்யரும் திருவினர்:  
(கருங் கொடி அடம்பும் கண்டலும் சூழ்ந்த  
பனைக் குடிப் பரதவர் கலத்தொடும் மறிய,
15
சுரிமுகச் செவ் வாய்ச் சூல் வளை தெறிப்ப,  
கழுக் கடை அன்ன கூர்வாய்ப் பெருங் கண்  
பனை கிடந்தன்ன உடல் முதல் துணிய,  
ஆர் உயிர் கவரும், கார் உடல் செங் கண்,  
கூற்றம் உருத்து எழுந்த கொள்கை போல,
20
நெட்டுடல் பேழ்வாய்ப் பெருஞ் சுறவு தடியும்--  
வரை நிரை கிடந்த திரை உவர் புகுந்து,  
நெடுஞ் சடைக் கிடந்த குறும் பிறைக் கொழுந்தும்,  
கரு முகில் வெளுத்த திரு மிடற்று இருளும்,  
நுதல் மதி கிழித்த அழல் அவிர் நோக்கமும்,
25
மறைத்து ஒரு சிறுகுடிப் பரதவன் ஆகி,  
பொன் தலைப்புணர் வலை கொடுங் கரம் ஆக்கி--  
நெடுங் கடல் கலக்கும் ஒரு மீன், படுத்த)  
நிறை அருள் நாயகன் உறைதரு கூடல்  
வணங்கார் இனம் என மாழ்கி,
30
குணம் குடிபோய்வித்த ஆய் உளம் தவறே.
உரை
   
       16. வெறி விலக்கல்  
   
உழைநின்றீரும், பிழை அறிந்தீரும்,  
பழங் குறி கண்ட நெடுங் கண் மாதரும்--  
ஒன்று கிளக்க, நின்று, இவை கேண்மின்:  
(ஒரு பால் பசுங்கொடி திருநுதல் பொடித்த  
குறு வெயர்ப்பு ஒழுக்கு எனப் பிறை அமுது எடுக்க.
5
படிறர் சொல் எனக் கடுவு நஞ்சு இறைப்ப,  
அண்டப் பொற் சுவர் கொண்ட அழுக்கை  
இறைத்துக் கழுவுவதென்னக் கங்கைத்  
துறை கொள் ஆயிரம் முகமும் சுழல,  
அப் பெருங் கங்கை கக்கிய திரை எனக்
10
கொக்கின் தூவல் அப்புறம் ஆக,  
மாணிக்கத்தின் வளைத்த சுவர் எனப்  
பாணிக்குள் பெய் செந் தழல் பரப்ப,  
தன்னால் படைத்த பொன் அணி அண்டம்  
எண் திக்கு அளந்து கொண்டன என்னப்
15
புரிந்த செஞ் சடை நிமிர்ந்து சுழல,  
மேருவின் முடி சூழ் சூரியர் என்னத்  
தங்கிய மூன்று கண் எங்கணும் ஆக--  
கூடல் மாநகர் ஆடிய அமுதை  
உண்டு களித்த தொண்டர்கள் என்ன)
20
இம் மது உண்ண உம்மையின் உடையோர்  
முருகு நாறப் பருகுதல் செய்க;  
வேலனும் வெறிக்களன் ஏறுதல் ஆக;  
அணங்கு ஆட்டு முதியோள் முறம் கொள் நெல் எடுக்க;  
பிணிதர விசித்த முருகு-இயம் துவைக்க;
25
ஐயவி அழலொடு செய்யிடம் புகைக்க;  
இன்னும் பல தொழிற்கு, இந் நிலை நின்று,  
மாறு பாடு கூறுதல் இலனே:  
ஈங்கு இவை நிற்க--யாங்கள் அவ் அருவியில்  
ஒழுக, புக்குத் தழுவி எடுத்தும்,
30
ஒரு மதி முறித்து, ஆண்டு, இரு கவுட் செருகிய  
ஏந்து கோட்டு உம்பல் பூம் புனம், எம் உயிர்,  
அழிக்கப் புகுந்த கடைக்கொள் நாளில்,  
நெடுங் கை வேலால் அடும் தொழில் செய்து,  
பெறும் உயிர் தந்து மருவி அளித்த
35
பொன் நெடுங் குன்றம் மன்னிய தோளன்  
செவ்வே தந்தமை துயர் இருப்ப,  
கூறு பெயரொடு வேறு பெயர் இட்டு,  
மறி உயிர் உண்ணக் குறுகி வந்திருந்த  
தெய்வம் கற்ற அறிவை
40
உய்யக் கூறில், ஓர் நெஞ்சு இடம் பொறாதே.
உரை
   
       17. உலகியல்பு உரைத்தல்  
 
'பழமை நீண்ட குன்றக் குடியினள்,  
வருந்தாது வளர்த்தும், குடங்கை துயிற்றியும்,  
மானின் குழவியொடு கெடவரல் வருத்தியும்,  
பந்து பயிற்றியும், பொற்கழங்கு உந்தவும்,  
பாவை சூட்டவும், பூவை கேட்கவும்,
5
உடைமை செய்த மடமையள் யான்' என,  
எம் எதிர் கூறிய இம் மொழிதனக்குப்  
பெருமை நோக்கின் சிறுமை-அது உண்டே:  
செறி திரைப் பாற்கடல் வயிறு நொந்து ஈன்ற  
செம்மகள் கரியோற்கு அறுதி போக,
10
மகவின் இன்பம் கடல் சென்றிலவால்;  
அன்றியும், விடிமீன் முளைத்த தரளம்,  
வவ்வின ரிடத்தும் அவ்வழி ஆன;  
திரைக் கடல் குடித்த கரத்த மா முனிக்கும்,  
திங்கள் வாழ் குலம் தங்கும் வேந்தற்கும்,
15
அமுத ஊற்று எழுந்து நெஞ்சம் களிக்கும்  
தமிழ் எனும் கடலைக் காணி கொடுத்த  
பொதியப் பொருப்பும், நெடு முதுகு வருந்திப்  
பெற்று வளர்த்த கல் புடை ஆரம்  
அணியும் மா மகிழ்நர் பதி உறை புகுந்தால்,
20
உண்டோ சென்றது? கண்டது உரைக்க:  
பள்ளிக் கணக்கர் உள்ளத்துப் பெற்ற  
புறம் ஆர் கல்வி, அற மா மகளைக்  
கொண்டு வாழுநர்க் கண்டு அருகு இடத்தும்,  
அவர் மன அன்னை கவரக் கண்டிலம்;
25
பெருஞ் சேற்றுக் கழனி கரும்பு பெறு காலை,  
கொள்வோர்க்கு அன்றி அவ் வயல் சாயா;  
பூம் பணை திரிந்து பொதி அவிழ் முளரியில்,  
காம்பு பொதி நறவம் விளரியோடு அருந்தி,  
கந்தித் தண்டலை வந்து வீற்றிருந்து,
30
கடி மலர்ப் பொழிலில் சிறிது கண் படுத்து,  
மயக்கம் நிறை காமத்து இயக்கம் கொண்டு,  
நின்ற நாரணன் பரந்த மார்பில்  
கலவாக் குங்குமம் நிலவிய தென்னக்  
கார் வான் தந்த பேர் கொள் செக்கரில்,
35
வீதி வாய்த் தென்றல் மெல்லென்று இயங்கும்  
மூதூர்க் கூடல் வந்தருள் முக்கணன்  
(காமனை, அயனை, நாமக் காலனை,  
கண்ணால், உகிரால், மலர் கொள் காலால்,  
சுட்டும், கொய்தும், உதைத்தும், துணித்த
40
விட்டு ஒளிர் மாணிக்க மலையின்) ஒரு பால்,  
அடங்கப் படர்ந்த பசுங்கொடி-அதனை  
வளர்த்த சேண் மலை, உளத் துயர் கொண்டு  
தொடர்ந்ததும் இலை: கீழ் நடந்த சொல் கிடக்க--  
பாலைக்கிழத்தி திருமுன் நாட்டிய
45
சூலத் தலையின் தொடர்ந்து சிகை படர்ந்து  
விடுதழல் உச்சம் படு கதிர் தாக்க,  
பாடல்சால் பச்சைக் கோடகக் காற்றை,  
மை இல் காட்சிக் கொய் உளை நிற்ப,  
வயிற்றில் இருந்து வாய் முளைத்தென்ன
50
இரு கால் முகனிற்கு அருகா, துரந்து,  
படும் அழல் நீக்கக் குட கடல் குளிக்கும்  
நா-வாய் குறியாத் தீ வாய் பாலையில்--  
தம்மில் இன்பம் சூளுடன் கூடி,  
ஒன்றி விழைந்து சென்றாட்கு உடைந்து,
55
பொன் பதி நீங்கி, உண்பது மடங்கி,  
முழங்கப் பெருங்குரல் கூஉய்ப்  
பழங்கண் எய்தியது பேதைமை அறிவே.
உரை
   
       18. மகிழ்ந்து உரைத்தல்  
   
குங்குமக் கோட்டு அலர் உணங்கல் கடுக்கும்  
பங்குடைச் செங் கால் பாட்டு அளி அரிபிடர்க்  
குரு, வில், தோய்ந்த அரி கெழு மரகதக்  
'கல்' எனக் கிடப்பச் சொல்லிய மேனித்  
திருநெடு மாலுக்கு, ஒருவிசை, புரிந்து
5
சோதி வளர் பாகம் ஈந்தருள் நித்தன்;  
முனிவர் ஏமுற வெள்ளிஅம் பொதுவில்,  
மனமும் கண்ணும் கனியக் குனிக்கும்  
புதிய நாயகன்; பழ மறைத் தலையோன்;  
கைஞ்ஞின்றவன்--செங் கால் கண்டனர் போல,
10
விளக்கமும், புதுமையும், அளப்பு இல் காட்சியும்,  
வேறு ஒப்பு எடுத்துக் கூறுவது நீக்கமும்,  
அறிவோர் காணும் குறியாய் இருந்தன--  
(இருந் திண் போர்வைப் பிணி விசி முரசம்,  
முன்னம் எள்ளினர் நெஞ்சு கெடத் துவைப்ப;
15
மணம் கொள் பேர் அணி பெருங் கவின் மறைத்தது என்று,  
எழுமதி குறைத்த முழுமதிக் கருங் கயல்,  
வண்டு மருவி உண்டு களியாது,  
மற்று, அது பூத்த பொன் திகழ் தாமரை  
இரண்டு முகிழ் செய்து நெஞ்சுறப் பெருகும்,
20
வற்றா மேனி வெள்ளத்துள் மறிய;  
நுனித்தலை அந்தணர் கதழ் எரி வளர்த்துச்  
சிவந்த வாய்தோறும் வெண் பொரி சிதறிச்  
செம்மாந்து மணத்த வளரிய கூர் எரி  
மும் முறை சுழன்று, தாயர் உள் மகிழ;
25
இல் உறை கல்லின், வெண்மலர் பரப்பி,  
இலவு அலர் வாட்டிய செங் கால் பிடித்து,  
களி தூங்கு உளத்தொடும் மெல்லெனச் சேர்த்தி;  
இரண்டு பெயர் காத்த தோலாக் கற்பு  
முகன் உறக் காணும் கரியோர் போல,
30
இடப்பால் நிறுத்தி, பக்கம் சூழ  
வடமீன் காட்டி; விளக்கு அணி எடுத்துக்  
குலவாழ்த்து விம்ம, மண அணிப் பக்கம்  
கட்புலம் கொண்ட இப் பணி அளவும்)  
வாடி நிலை நின்றும், ஊடி ஏமாந்தும்,
35
என் முகம் அளக்கும் காலக் குறியைத்  
தாமரைக் கண்ணால் உட்புக அறிந்தும்,  
'உலகம் மூன்றும் பெறுதற்கு அரியது' என்று,  
எண்ணா வாய்மை எண்ணிக் கூறியும்,  
கல் உயர் நெடுந் தோள் அண்ணல்
40
மல் உறத் தந்த ஈர்ந் தழைதானே.
உரை
   
      19. பிறை தொழுக என்றல்  
   
நெடு வளி உயிர்த்து, மழைமதம் ஒழுக்கி,  
எழுமலை விழுமலை புடைமணி ஆக,  
மீன்புகர் நிறைந்த வான்குஞ்சர முகம்  
வால் பெற முளைத்த கூன் கோடுஆனும்;  
பேச நீண்ட பல் மீன் நிலைஇய
5
வானக்கடலில் தோணி-அதுஆனும்;  
கொழுநர் கூடும் காம-உததியைக்  
கரைவிட உகையும் நாவாய் ஆனும்;  
கள் அமர் கோதையர், வெள்ளணி-விழவில்,  
ஐங்கணைக் கிழவன் காட்சி உள் மகிழ
10
இழைத்து வளைத்த கருப்பு வில்ஆனும்--  
நெடியோன் முதலாம் தேவர் கூடி,  
வாங்கிக் கடைந்த தேம் படு கடலில்,  
அமுதுடன் தோன்றிய உரிமை யானும்;  
நின் திரு நுதலை ஒளி விசும்பு உடலில்
15
ஆடி நிழல் காட்டிய பீடு-அதுவானும்;  
கரை அற அணியும் மானக் கலனுள்  
தலை பெற இருந்த நிலைபுகழானும்;  
மண் அகம் அனைத்தும் நிறைந்த பல் உயிர்கட்கு  
ஆயா அமுதம் ஈகுத லானும்;
20
(பாற்கடல் உறங்கும் மாயவன் போல,  
தவள மாடத்து அகல் முதுகு பற்றி,  
நெடுங் கார் கிடந்து படும் புனல் பிழியும்  
கூடல் வீற்றிருந்த நாடகக் கடவுள்  
பொன்சுடர் விரித்த கொத்து அலர் கொன்றையும்,
25
தாளியும், அறுகும், வால் உளை எருக்கமும்,  
கரந்தையும், வன்னியும், மிடைந்த செஞ் சடையில்,  
இரண்டு-ஐஞ்ஞூறு திரண்ட முகம் எடுத்து,  
மண், பிலன், அகழ்ந்து, திக்கு நிலை மயக்கி,  
புரியாக் கதமோடு ஒருபால் அடங்கும்)
30
கங்கையில் படிந்த பொங்கு தவத்தானும்;  
அந் நெடு வேணியின் கண்ணி என இருந்து,  
தூற்றும் மறு ஒழிந்த ஏற்றத்தானும்--  
மணி வான் பெற்ற இப் பிறையைப்  
பணிவாய், புரிந்து, தாமரை மகளே!
35
உரை
   
20. ஆற்றாமை கூறல்
   
பொருப்பு மலி தோளினும், நெருப்பு உமிழ் வேலினும்,  
செந் திருமகளை, செயம் கொள் மங்கையை,  
வற்றாக் காதலின் கொண்ட மதி அன்றி--  
களவு அலர் தூற்ற, தளவு கொடி நடுங்க,  
வேயுளம் பட்டுப் பூவை கறுக்க,
5
தண்டா மயல்கொடு வண்டு பரந்து அரற்ற,  
காலம் கருதித் தோன்றி கை குலைப்ப,  
துன்பு பசப்பு ஊரும் கண் நிழல் தன்னைத்  
திரு மலர் எடுத்துக் கொன்றை காட்ட,  
'இறை வளை நில்லாது' என்பன நிலைக்க,
10
கோடல் வளைந்த வள் அலர் உகுப்ப;  
கண் துளி துளிக்கும் சாயாப் பையுளை,  
கூறு பட நாடி ஆசையொடு மயங்கி,  
கருவிளை மலர், நீர், அருகு நின்று, உகுப்ப;  
பேர் அழல் வாடை ஆர் உயிர் தடவ,
15
விளைக்கும் காலம் முளைத்த காலை--  
அன்பும், சூளும், நண்பும், நடுநிலையும்,  
தடையா அறிவும், உடையோய் நீயே!  
எழுந்து காட்டிப் பாடு செய் கதிர்போல்,  
தோன்றி நில்லா நிலைப் பொருள் செய்ய,
20
மருங்கில் பாதி தரும் துகில் புனைந்தும்,  
விளைவயல் ஒடுங்கும் முதிர்நெல் உணவினும்  
தம்மில் வீழுநர்க்கு இன்பம் என்று அறிந்தும்,  
(தண் மதி, கடுஞ் சுடர், வெவ் அழல், கண் வைத்து;  
அளவாப் பாதம், மண் பரப்பு, ஆக;
25
தனி நெடு விசும்பு திரு உடல் ஆக;  
இருந் திசைப் போக்குப் பெருந் தோள் ஆக;  
வழு அறு திருமறை ஓசைகள் அனைத்தும்,  
மொழிதர நிகழும் வார்த்தை ஆக;  
உள் நிறைந்து உழலும் பாடு இரண்டு உயிர்ப்பும்,
30
பகல் இரவு ஒடுங்கா விடுவளி ஆக--  
அடுபடைப் பூழியன் கடு முரண் பற்றி,  
இட்ட வெங் கொடுஞ் சிறைப் பட்ட கார்க் குலம்  
தளையொடு நிறைநீர் விடுவன போல,  
புரைசையொடு பாசம் அற உடல் நிமிர்ந்து,
35
கூடமும் கந்தும் சேறு நின்று அலைப்ப,  
மூன்று மத நெடும் புனல் கான்று, மயல் உவட்டி,  
ஏழ் உயர் கரித்திரள் கதமொடு பிளிறும்  
பெரு நகர்க் கூடல்--உறைதரு கடவுளை  
நிறையப் பேசாக் குறையுளர் போலவும்)
40
கல்லா மனனினும், செல்லுதி, பெரும!  
இளமையும், இன்பமும், வளனும், காட்சியும்,  
பின்புற, நேடின், முன்பவை அன்றால்,  
நுனித்த மேனித் திருவினட்கு: அடைத்த  
வினைதரும் அடைவின் அல்லது,
45
புனையக் காணேன், சொல் ஆயினவே.
உரை