தொடக்கம் |
41-50
|
|
|
41.
அவயவங்கூறல்
|
|
|
|
வீதி
குத்திய குறுந் தாட் பாரிடம் |
|
விண்
தலை உடைத்துப் பிறை வாய் வைப்ப, |
|
குணங்கினம்
துள்ள, கூளியும் கொட்ப; |
|
மத்தியந்தணன்
வரம் சொலி விடுப்பத் |
|
தில்லை
கண்ட புலிக்கால் முனிவனும், |
5
|
சூயை
கை விடப் பாஞ்சலி ஆகிய |
|
ஆயிரம்
பணாடவி அருந்தவத்து ஒருவனும், |
|
கண்ணால்
வாங்கி, நெஞ்சு அறை நிறைப்ப; |
|
திருநடம்
நவின்ற உலகு உயிர்ப் பெருமான்; |
|
(கடல்
மாக் கொன்ற தீப் படர் நெடு வேல் |
10
|
உருள்இணர்க்
கடம்பின் நெடுந் தார்க் கண்ணியன், |
|
அரி-மகள்
விரும்பிப் பாகம் செய்து, |
|
களியுடன்
நிறைந்த ஒரு பரங்குன்றமும்; |
|
பொன்அம்
தோகையும், மணி அரிச் சிலம்பும், |
|
நிரைத்
தலைச் சுடிகை நெருப்பு உமிழ் ஆரமும், |
15
|
வண்டு
கிளை முரற்றிய பாசிலைத் துளவும், |
|
மரகதம்
உடற்றிய வடிவொடு மயங்க, |
|
மரக்கால்
ஆடி அரக்கர்க் கொன்ற |
|
கவைத்
தலை மணி வேல் பிறைத் தலைக் கன்னி |
|
வடபால்
பரிந்த பலி மணக் கோட்டமும்; |
20
|
சூடகம்,
தோள்வளை, கிடந்து வில் வீச, |
|
யாவர்தம்
பகையும், யாவையின் பகையும், |
|
வளனின்
காத்து, வருவன அருளும், |
|
ஊழியும்
கணம் என, உயர் மகன் பள்ளியும்; |
|
உவா
மதி கிடக்கும் குண்டு கடல் கலக்கி, |
25
|
மருந்து
கைக் கொண்டு வானவர்க்கு ஊட்டிய, |
|
பாகப்பக்க
நெடியோன் உறையுளும்; |
|
தும்பி
உண்ணாத் தொங்கல்-தேவர் |
|
மக்களொடு
நெருங்கிய வீதிப் புறமும்; |
|
மது
நிறை பிலிற்றிய பூவொடு நெருங்கி, |
30
|
சூரரக்கன்னியர்
உடல் பனி செய்யும் |
|
கடைக்கால்
மடியும் பொங்கர்ப் பக்கமும்; |
|
ஊடி
ஆடுநர்த் திரையொடு பிணங்கித் |
|
தோழியின்
தீர்க்கும் வையைத் துழனியும்; |
|
அளவா
ஊழி மெய்யொடு சூழ்ந்து, |
35
|
நின்றுநின்று
ஓங்கி, நிலை அறம் பெருக்கும் |
|
ஆனாப்
பெரும் புகழ் அருள் நகர்க் கூடல்) |
|
பெண்
உடல் பெற்ற சென்னிஅம் பிறையோன்; |
|
பொற்றகடு
பரப்பிய கருமணி நிரை என, |
|
வண்டும்,
தேனும், மருள் கிளை முரற்றி, |
40
|
உடைந்து
உமிழ் நறவு உண்டு, உறங்கு தார்க் கொன்றையன்- |
|
திருவடி
புகழுநர் செல்வம் போலும், |
|
அண்ணாந்து
எடுத்த அணி உறு வன முலை; |
|
அவன்
கழல் சொல்லுநர் அரு வினை மானும், |
|
மலை
முலைப் பகை அட மாழ்குறும் நுசுப்பு; |
45
|
மற்று-அவன்
அசைத்த மாசுணம் பரப்பி |
|
அமைத்தது
கடுக்கும், அணிப் பாம்பு அல்குல்; |
|
ஆங்கு-அவன்
தரித்த கலைமான் கடுக்கும், |
|
இரு
குழை கிழிக்கும் அரிமதர் மலர்க் கண்-- |
|
புகர்
முகப் புழைக்கை துயில் தரு கனவில் |
50
|
முடங்குளை
கண்ட பெருந் துயர் போல, |
|
உயிரினும்
நுனித்த அவ் உருக் கொண்டு, |
|
பொன்மலை
பனிப்பினும் பனியா |
|
என்
உயிர் வாட்டிய தொடி இளங்கொடிக்கே. |
|
|
|
உரை
|
|
|
|
|
42.
வன்புறை எதிரழிந்து இரங்கல்
|
|
|
|
ஈன்ற
செஞ் சூழல், கவர்வழி பிழைத்த |
|
வெறிவிழிப்
பிணர் மருப்பு ஆமான் கன்றினை, |
|
மென்
நடைக் குழைசெவி பெறா, வெறுங் கரும் பிடி, |
|
கணிப்
பணைக் கவட்டும், மணற் சுனைப் புறத்தும், |
|
தழைக்
குற மங்கையர் ஐவனம் அவைக்கும் |
5
|
உரற்குழி
நிரைத்த கல் அறைப் பரப்பும், |
|
மானிட
மாக்கள் அரக்கி கைப்பட்டென, |
|
நாச்
சுவை அடுக்கும் உணவு உவவாது |
|
வைத்துவைத்து
எடுக்கும் சாரல் நாடன் |
|
அறிவும்,
பொறையும், பொருள் அறி கல்வியும், |
10
|
ஒழுக்கமும்,
குலனும், அழுக்கு அறு தவமும், |
|
இனிமையும்,
பண்பும், ஈண்டவும் நன்றே!-- |
|
வெடிவால்
பைங் கண் குறு நரியினத்தினை, |
|
ஏழ்
இடம் தோன்றி, இனன் நூற்கு இயைந்து, |
|
வீதி
போகிய வால் உளைப் புரவி |
15
|
ஆக்கிய
விஞ்சைப் பிறை முடி அந்தணன், |
|
(கொண்டோற்கு
ஏகும் குறியுடை நல் நாள், |
|
அன்னையர்
இல்லத்து, அணி மட மங்கையர் |
|
கண்டன
கவரும் காட்சி போல, |
|
வேலன்
பேசி, மறி செகுத்து, ஓம்பிய, |
20
|
காலம்
கோடா வரை வளர் பண்டம் |
|
வருவன
வாரி; வண்டினம் தொடர, |
|
கண்
கயல் விழித்து; பூத்துகில் மூடி; |
|
குறத்தியர்,
குடத்தியர்; வழி விட நடந்து; |
|
கருங்கால்
மள்ளர், உழவச் சேடியர், |
25
|
நிரை
நிரை வணங்கி மதகு எதிர்கொள்ள; |
|
தண்ணடைக்
கணவற் பண்புடன் புணரும் |
|
வையை
மா மாது மணத்துடன் சூழ்ந்த) |
|
கூடல்
பெருமான், பொன் பிறழ் திருவடி |
|
நெஞ்சு
இருத்தாத வஞ்சகர் போல, |
30
|
சலியாச்
சார்பு நிலை அற நீங்கி, |
|
அரந்தை
யுற்று, நீடநின்று இரங்கும்-- |
|
முருந்து
எயிற்று, இளம் பிறைக் கோலம் |
|
திருந்திய
திரு நுதல் துகிர் இளங்கோடியே. |
|
|
|
உரை
|
|
|
|
|
43.
அன்னமோடு அழிதல்
|
|
|
|
கவைத்
துகிர், வடவையின், திரள் சிகை பரப்பி, |
|
அரை
பெறப் பிணித்த கல் குளி மாக்கள் |
|
உள்ளம்
தீக்கும் உவர்க் கடல் உடுத்த |
|
நாவல்அம்
தண் பொழில் இன்புடன் துயில; |
|
உலகு
அற விழுங்கிய நள்ளென் கங்குல், |
5
|
துயிலாக்
கேளுடன், உயிர் இரை தேரும் |
|
நெட்டுடல்
பேழ்வாய்க் கழுதும் உறங்க; |
|
பிள்ளையும்
பெடையும் பறைவாய்த் தழீஇச் |
|
சுற்றமும்
சூழக் குருகு கண்படுப்ப; |
|
கீழ்
அரும்பு அணைத்த முள் அரை முளரி |
10
|
இதழ்க்
கதவு அடைத்து மலர்க்கண் துயில; |
|
விரிசினை
பொதுளிய பாசிலை ஒடுக்கி, |
|
பூவொடும்,
வண்டொடும், பொங்கரும், உறங்க-- |
|
(பால்
முகக் களவின் குறுங் காய்ப் பச்சிணர், |
|
புட்கால்-பாட்டினர்க்கு
உறையுள் கொடுத்த, |
15
|
மயிர்
குறை கருவித் துணைக் குழை அலைப்ப; |
|
வரிந்த
இந்தனச் சுமை, மதி, அரவு, இதழி, |
|
அகன்று
கட்டு அவிழ்ந்த சேகரத்து, இருத்தி; |
|
வீதியும்,
கவலையும், மிக வளம் புகன்று; |
|
பொழுது
கண் மறைந்த தீவாய்ச் செக்கர் |
20
|
தணந்தோர்
உள்ளத்துள் உறப் புகுந்த பின், |
|
கார்
உடல் காட்டி, கண்ட கண் புதைய, |
|
அல்
எனும் மங்கை மெல்லெனப் பார்க்க, |
|
முரன்று
எழு கானம் முயன்று, வாது இயைந்த |
|
வட
புல விஞ்சையன் வைகு இடத்து அகன் கடை, |
25
|
"தென்
திசைப் பாணன் அடிமை யான்" என, |
|
போகா
விறகுடன் தலைக் கடை பொருந்தி; |
|
உந்தித்
தோற்றம் ஓசை நின்று ஒடுங்க, |
|
பாலையில்
எழுப்பி, அமர் இசை பயிற்றி, |
|
தூங்கலும்
துள்ளலும், சுண்டி நின்று எழுதலும், |
30
|
தாரியில்
காட்டித் தரும் சாதாரி, |
|
உலகு
உயிர் உள்ளமும் ஒன்றுபட்டு ஒடுங்க, |
|
இசை
விதி பாடி, இசைப்பகை துரந்த |
|
கூடற்கு
இறையோன் தாள் விடுத்தோர் என) |
|
என்
கண் துஞ்சா நீர்மை |
35
|
முன்
கண்டு ஓதாது அவர்க்கு, இளங் குருகே. |
|
|
|
உரை
|
|
|
|
|
44.
சொல்லாது ஏகல் |
|
|
|
இலது
எனின், உளது என்று, உள்ளமொடு விதித்தும் |
|
சொல்லா
நிலை பெறும்; சூளுறின், மயங்கிச் |
|
செய்
குறிக் குணனும் சிந்தையுள் திரிவும்; |
|
உழை
நின்று அறிந்து, பழங்கண் கவர்ந்தும்; |
|
கண்
எதிர் வைகி, முகன் கொளின் கலங்கியும்: |
5
|
வழங்குறு
கிளவியின், 'திசை' என, மாழ்கியும்; |
|
ஒரு
திசை நோக்கினும், இருக்கினும், உடைந்தும்; |
|
'போக்கு'
என உழையர், அயர்ப்பிடைக் கிளப்பினும், |
|
முலைக்
குவட்டு ஒழுக்கிய அருவி தண் தரளம் |
|
செம்மணி
கரிந்து தீத்தர, உயிர்த்தும்; |
10
|
'போம்'
என வாய்ச் சொல் கேட்பினும், புகைந்தும்; |
|
கொள்ளார்
அறுதியும், கொண்டோர் இசைத்தலும், |
|
ஈது
எனக் காட்டிய மயல் மடவரற்கு-- |
|
(முன்,
ஒரு வணிகன், மகப் பேறு இன்மையின், |
|
மருமான்தன்னை
மகவு எனச் சடங்கு செய்து, |
15
|
உள்ளமும்
கரணமும் அவனுழி ஒருக்கி, |
|
முக்கவர்த்
திருநதி துணையுடன் மூழ்கி, |
|
அப்
புலத்து உயிர் கொடுத்து, அருட்பொருள் கொண்டபின்; |
|
மற்று
அவன் தாயம் வவ்வுறு மாக்கள், |
|
காணி
கைக்கொண்ட மறு நிலை மைந்தனை, |
20
|
நிரைத்துக்
கிளை கொள் நெடு வழக்கு உய்த்தலும், |
|
மைந்தனும்,
கேளிரும், 'மதி முடிக் கடவுள்! நின் |
|
புந்தி
ஒன்று இன்றிப் புகல் இலம்' என்று அயர் |
|
அவ்வுழி;
ஒரு சார், அவன் மாதுலன் என, |
|
அறிவு-ஒளி
நிறைவே ஓர் உருத் தரித்து வந்து, |
25
|
அருள்
வழக்கு ஏறி, அவர் வழக்கு உடைத்த |
|
கூடல்
நாயகன் தாள் பணியார் என) |
|
எவ்வழிக்
கிளவியின் கூறிச் |
|
செவ்விதின்
செல்லும் திறன், இனி யானே? |
|
|
|
உரை
|
|
|
|
|
45.
தெளிதல் |
|
|
|
நின்று
அறி கல்வி ஒன்றிய மாந்தர் |
|
புனை
பெருங் கவியுள் தருபொருள் என்ன |
|
ஓங்கி,
புடை பரந்து, அமுதம் உள் ஊறி, |
|
காண்
குறி பெருத்து, கச்சு-அவை கடிந்தே, |
|
எழுத்து,
மணி, பொன், பூ, மலை, என யாப்புற்று |
5
|
அணி
பெரு முலைமேல் கோதையும் ஒடுங்கின; |
|
செங்கோல்
அரசன் முறைத் தொழில் போல, |
|
அமுதமும்,
கடுவும், வாளும், படைத்த |
|
மதர்
விழித் தாமரை மலர்ந்து, இமைத்து, அமர்த்தன; |
|
செய்
குறை முடிப்பவர் சென்மம் போலப் |
10
|
பதமலர்
மண்மிசைப் பற்றிப் பரந்தன; |
|
அமுதம்
பொடித்த முழுமதி என்ன |
|
முகம்
வியர்ப்பு உறுத்தின; உள்ளமும் சுழன்றன-- |
|
(இதழியும்,
தும்பையும், மதியமும், கரந்து |
|
வளை
விலை மாக்கள் வடிவு எடுத்தருளி, |
15
|
முத்தமிழ்
நான்மறை முளைத்தருள் வாக்கால் |
|
வீதி
கூறி, விதித்த முன் வரத்தால்-- |
|
கரு
முகில் விளர்ப்ப, அறல் நீர் குளிப்ப, |
|
கண்
புகை யாப்புத் திணி இருள் விடிய, |
|
உடல்தொறும்
பிணித்த பாவமும் புலர, |
20
|
கண்ட
நீள் கதுப்பினர் கை குவி பிடித்து-- |
|
குருகு
அணி செறித்த தனி முதல் நாயகன், |
|
குருகும்
அன்னமும் வால் வளைக் குப்பையை. |
|
'அண்டமும்
பார்ப்பும் ஆம்' என அணைக்கும், |
|
அலை
நீர்ப் பழன முது நகர்க்) கூடல் |
25
|
ஒப்புடைத்து
ஆய இப் பொற்றொடி மடந்தை, |
|
'அணங்கினள்
ஆம்' என நினையல், |
|
பிணங்கி
வீழ்ந்து மாழ்குறும் மனனே! |
|
|
|
உரை
|
|
|
|
|
46. பருவம் கண்டு பெருமகள்
புலம்பல்
|
|
|
|
பசி
மயல் பிணித்த பிள்ளை வண்டு அரற்ற, |
|
ஆசையின்
செறிந்த பொங்கர்க் குலத்தாய் |
|
அருப்புமுலைக்
கண் திறந்து உமிழ் மதுப் பால், |
|
சினை
மலர்த் துணைக் கரத்து அன்புடன் அணைத்து, |
|
தேக்கிட
அருத்தி, அலர்மலர்த் தொட்டில் |
5
|
காப்புறத்
துயிற்றும் கடி நகர்க் கூடல் |
|
அருளுடன்
நிறைந்த கரு உயிர் நாயகன் |
|
(குரவு
அரும்பு உடுத்த வால் எயிற்று அழல்விழிப் |
|
பகுவாய்ப்
பாம்பு முடங்கல் ஆக, |
|
ஆலவாய்
பொதிந்த மதிமுடித் தனி முதல்) |
10
|
சேக்கொள்
முளரி அலர்த்திய திருவடி |
|
கண்
பருகாத களவினர் உளம் போல், |
|
காருடன்
மிடைந்த குளிறு குரல் கண முகில் |
|
எம்
உயிர் அன்றி இடை கண்டோர்க்கும் |
|
நெஞ்சு
அறை பெருந் துயர் ஓவாது உடற்றக் |
15
|
கவையா
நெஞ்சமொடு பொருவினைச் சென்றோர் |
|
கண்ணினும்
கவரும் கொல்லோ-- |
|
உள்
நிறைந்து இருந்து வாழிய மனனே? |
|
|
|
உரை
|
|
|
|
|
47. முகிலொடு கூறல்
|
|
|
|
கருங்
குழற் செவ் வாய்ச் சிற்றிடை மடந்தைக்கு |
|
உளத்துயர்
ஈந்து, கண் துயில் வாங்கிய |
|
ஆனா
இன்னல் அழிபடக் காண்பான், |
|
(விரிபொரி
சிந்தி, மண மலர் பரப்பி, |
|
தெய்வக்
குலப் புகை விண்ணொடும் விம்ம, |
5
|
இரு-நால்
திசையும், உண்பலி தூவி, |
|
நல்
நூல் மாக்கள் நணிக் குறி சொற்று, |
|
பக்கம்
சூழ்ந்த நெடு நகர் முன்றில் |
|
கோடு
அகழ்ந்து எடுத்த மறி நீர்க் காலும், |
|
வெங்கார்
பெய்து நாள் குறித்து உழுநரும், |
10
|
சூல்
நிறைந்து உளையும் சுரி வளைச் சாத்தும், |
|
இனக்
கயல் உண்ணும் களிக் குருகினமும், |
|
வரைப்
பறை அரிந்த வாசவன்-தொழுது |
|
நிரைநிரை
விளம்பி வழி முடி நடுநரும், |
|
நாறு
கழி துற்ற சகடு ஈர்க்குநரும், |
15
|
தாமரை
பாடும் அறுகால்-கிளையும், |
|
உறைத்து
எழு கம்பலை உம்பரைத் தாவி |
|
முடித்தலை
திமிர்ப்ப அடிக்கடி கொடுக்கும் |
|
அள்ளற்
பழனத்து அணிநகர்க்) கூடல் |
|
நீங்காது
உறையும் நிமிர்சடைப் பெருமான்-- |
20
|
உரகன்
வாய் கீண்ட மாதவன் போல |
|
மண்
அகழ்ந்து எடுத்து வருபுனல் வையைக் |
|
கூலம்
சுமக்கக் கொற்றாள் ஆகி, |
|
நரைத்
தலை முதியோள் இடித்து அடு கூலி கொண்டு |
|
அடைப்பது
போல, உடைப்பது நோக்கி, |
25
|
கோமகன்
அடிக்க, அவன் அடி வாங்கி, |
|
எவ்
உயிர், எவ் உலகு, எத் துறைக்கு எல்லாம், |
|
அவ்
அடி கொடுத்த அருள் நிறை நாயகன்-- |
|
திரு
மிடற்று இருள் எனச் செறி தரும் மா முகில்! |
|
எனது
கண் கடந்து நீங்கித் |
30
|
துனைவுடன்
செல்லல், ஒருங்குபு புரிந்தே. |
|
|
|
உரை
|
|
|
|
|
48.
தழை விருப்பு உரைத்தல்
|
|
|
|
அறுகும்
தும்பையும் அணிந்த செஞ் சடையும், |
|
கலைமான்,
கணிச்சியும், கட்டிய அரவமும், |
|
பிறிதும்
கரந்து, ஒரு கானவன் ஆகி, |
|
அருச்சுனன்
அருந் தவம் அழித்து அமர் செய்து, அவன் |
|
கொடுமரத்
தழும்பு திருமுடிக்கு அணிந்து, |
5
|
பொன்னுடை
ஆவம் தொலையாது சுரக்கப் |
|
பாசுபதக்
கணை பரிந்து அருள் செய்தோன்-- |
|
வாசவன்
மகட் புணர்ந்து, மூன்று எரி வாழ, |
|
தென்
கடல் நடுத் திடர் செய்து உறைந்து இமையவர் |
|
ஊர்
உடைத்து உண்ணும் சூர் உடல் துணித்த |
10
|
மணி
வேற் குமரன் களிமகிழ் செய்த |
|
பேர்
அருட் குன்றம் ஒரு பால் பொலிந்த |
|
அறப்
பெருங்கூடல் பிறைச் சடைப் பெருமான்-- |
|
திருவடிப்
பெருந்தேன் பருகுநர் போல, |
|
மணமுடன்
பொதுளிய வாடா மலர்த் தழை |
15
|
ஒரு
நீ விடுத்தனை; யான் அது கொடுத்தனன்; |
|
அவ்வழிக்
கூறின்; அத் தழை வந்து |
|
கண்
மலர் கவர்ந்தும், கைமலர் குவித்தும், |
|
நெட்டுயிர்ப்பு
எறிந்தும் முலைமுகம் நெருக்கியும், |
|
ஊடியும்,
வணங்கியும், உவந்து அளி கூறியும், |
20
|
பொறை
அழி காட்சியள் ஆகி |
|
நிறை
அழிந்தவட்கு நீ ஆயினவே! |
|
|
|
உரை
|
|
|
|
|
49. விரவிக் கூறல்
|
|
|
|
வெயர்-அமுது
அரும்பி, முயல் கண் கறுத்து, |
|
தண்ணம்
நின்று உதவலின், நிறைமதி ஆகி; |
|
பொன்அம்
பொகுட்டுத் தாமரை குவித்து, |
|
நிறை
அளி புரக்கும் புது முகத்து அணங்கு!--நின் |
|
ஒளி
வளர் நோக்கம் உற்றனை ஆயின், |
5
|
இன்
உயிர் வாழக்கை உடலொடும் புரக்கலை: |
|
(ஒரு
தனி அடியாற்கு உதவுதல் வேண்டி, |
|
மண்ணவர்
காண, வட்டணை, வாள், எடுத்து, |
|
ஆதி
சாரணை, அடர் நிலைப் பார்வை, |
|
வாளொடு
நெருக்கல், மார்பொடு முனைத்தல், |
10
|
பற்றி
நின்று அடர்த்தல், உள்-கையின் முறித்தல், |
|
ஆனனத்து
ஒட்டல், அணி மயிற் புரோகம், |
|
உள்
கலந்து எடுத்தல், ஒசிந்து இடம் அழைத்தல், |
|
கையொடு
கட்டல், கடிந்து உள் அழைத்தல், என்று |
|
இவ்வகைப்
பிறவும், எதிர் அமர் ஏறி, |
15
|
அவன்
பகை முறித்த அருட் பெருங் கடவுள் |
|
கூடல்
அம் கானல்) பெடையுடன் புல்லி, |
|
சேவல்
அன்னம், திருமலர்க் கள்ளினை, |
|
அம்
மலர் வள்ளம் ஆக நின்று உதவுதல் |
|
கண்டுகண்டு,
ஒருவன் மாழ்கி, |
20
|
விண்டு
உயிர் சோர்ந்த குறி நிலை மயக்கே. |
|
|
|
உரை
|
|
|
|
|
50.
ஊடல் தணிவித்தல்
|
|
|
|
அவ்வுழிஅவ்வுழிப்
பெய் உணவு உன்னி, |
|
முகன்
பெறும் இரு செயல் அகன் பெறக் கொளுவும் |
|
புல்லப்
பாண்மகன் சில்லையும் இன்றி; |
|
இன்பக்
கிளவி அன்பினர்ப் போக்கி; |
|
முடித்தலை
மன்னர் செருக்கு நிலை ஒருவி; |
5
|
பொன்னுறு
ஞாழற் பூவுடன் கடுக்கும் |
|
பேழ்வாய்ப்
புலி உகிர் சிறு குரல் விளங்க, |
|
அமுதம்
துளிக்கும் குமுதவாய் குதட்டிப் |
|
பழம்
கோள் தத்தை வழங்கு சொல் போலும் |
|
மழலைக்
கிளவியும், இரு நிலத்து இன்பமும், |
10
|
ஒரு
வழி அளிக்கும் இருங் கதிர்ச் சிறுவனை, |
|
தழல்
விழி மடங்கல் கொலை அரிக் குருளையைப் |
|
பொன்மலை
கண்ட பொலிவு போல, |
|
மணிகெழு
மார்பத்து அணிபெறப் புகுதலின்; |
|
(கறங்கு
இசை அருவி அறைந்து நிமிர் திவலையும், |
15
|
துருத்தி
வாய் அதுக்கிய குங்குமக் காண்டமும், |
|
குற
மகார் கொழிக்கும் கழை நித்திலமும், |
|
நெடு
நிலை அரங்கில் பரிபெறு தரளமும், |
|
புனம்
பட எறிந்த கார் அகில் தூமமும், |
|
அந்தணர்
பெருக்கிய செந் தீப் புகையும், |
20
|
வேங்கையின்
தாதுடன் விரும்பிய சுரும்பும், |
|
கந்தி
விரி படிந்த மென் சிறை வண்டும், |
|
சந்தனப்
பொங்கர்த் தழைச் சிறை மயிலும், |
|
முன்றில்
அம் பெண்ணைக் குடம்பை கொள் அன்றிலும், |
|
ஒன்றினொடு
ஒன்று சென்று தலை மயங்கும் |
25
|
குளவன்
குன்றக் கூடல் அம் பதி நிறை, |
|
மஞ்சு
அடை குழல் பெறு செஞ் சடைப் பெருமான்-- |
|
அருந்
தமிழ்க் கீரன் பெருந் தமிழ்ப் பனுவல் |
|
வாவியில்
கேட்ட காவிஅம் களத்தினன்-- |
|
திருக்கண்
கண்ட பெருக்கினர்போல) |
30
|
முளரிஅம்
கோயில் தளைவிட வந்து, |
|
நல்லறம்
பூத்த முல்லைஅம் திருவினள்! |
|
நின்
உளத்து இன்னல் மன் அறக் களைந்து, |
|
பொருத்தம்
காண்டி--வண்டு ஆரும் |
|
அருத்தி
அம் கோதை மன்னவன் பாலே. |
35
|
|
|
உரை
|
|
|
|