தொடக்கம் |
51-60
|
|
|
51.
குலமுறை கூறி மறுத்தல்
|
|
|
|
பெரு
மறை நூல் பெறக் கோன்முறை புரக்கும் |
|
பெருந்தகை
வேந்தன் அருங் குணம் போல, |
|
மணந்தோர்க்கு
அமுதும், தணந்தோர்க்கு எரியும், |
|
புக்குழிப்
புக்குழிப் புலன் பெறக் கொடுக்கும் |
|
மலையத்
தமிழ்க் கால் வாவியில் புகுந்து |
5
|
புல்
இதழ்த் தாமரைப் புது முகை அவிழ்ப்ப, |
|
வண்டினம்
படிந்து மதுக் கவர்ந்து உண்டு, |
|
சேயிதழ்க்
குவளையின் நிரை நிரை உறங்கும் |
|
நிலை
நீர் நாடன்--நீயே: இவளே-- |
|
மலை
உறை பகைத்து, வான் உறைக்கு அணக்கும் |
10
|
புட்குலம்
சூழ்ந்த பொருப்புடைக் குறவர்தம் |
|
பெருந்தேன்
கவரும் சிறுகுடி மகளே: நீயே--
|
|
ஆயமொடு
ஆர்ப்ப, அரிகிணை முழக்கி, |
|
மாயா
நல் அறம் வளர் நாட்டினையே: இவளே--
|
|
தொண்டகம்
துவைப்ப, தொழிற் புனம் வளைந்து, |
15
|
பகட்டினம்
கொல்லும் பழி நாட்டவளே: நீயே--
|
|
எழு
நிலை மாடத்து இள முலை மகளிர் |
|
நடம்
செயத் தரளவடம் தெறு நகரோய்: இவளே--
|
|
கடம்
பெறு கரிக் குலம் மடங்கல் புக்கு அகழத் |
|
தெறித்திடு
முத்தம் திரட்டு வைப்பினளே:நீயே--
|
20
|
அணிகெழு
நவமணி அலர் எனத் தொடுத்த |
|
பொற்கொடித்
தேர்மிசைப் பொலிகுவை அன்றே: இவளே--
|
|
மணி
வாய்க் கிள்ளை துணியாது அகற்ற, |
|
நெட்டிதண்
ஏறும் இப் புனத்தினளே: |
|
ஆதலின்,
பெரும் புகழ் அணைகுதி ஆயின், |
25
|
(நாரணன்
பாற, தேவர் கெட்டு ஓட, |
|
வளி
சுழல் விசும்பின் கிளர்முகடு அணவிக் |
|
கரு
முகில் வளைந்து பெருகியபோல, |
|
நிலை
கெடப் பரந்த கடல் கெழு விடத்தை |
|
மறித்து,
அவர் உயிர் பெறக் குறித்து உண்டருளி, |
30
|
திருக்களம்
கறுத்த அருட் பெரு நாயகன்) |
|
கூடல்
கூடினர் போல, |
|
நாடல்
நீ--இவள் கழைத் தோள் நசையே. |
|
|
|
உரை
|
|
|
|
|
52.
காவற்பிரிவு அறிவித்தல்
|
|
|
|
நடைத்
திரைப் பரவை நாற் கடல் அணைத்து |
|
வரையறுத்து,
அமைந்த வகை நான்கு ஆக, |
|
விதிவரத்
திருத்திய மேதினிப் பொறையை-- |
|
குரு
மணி விரித்தலின், தேனொடு கிடந்து |
|
மாயாது
தொடுத்த மண மலர் சுமத்தலின்-- |
5
|
வரை
என நிறுத்திய திரு உறை பெருந்தோள் |
|
தரித்தும்,
அணைத்தும், தான் எனக் கண்டும், |
|
செய்ததும்
அன்றி, திருமனம் பணைத்துக் |
|
காக்கவும்
குரிசில் கருத்துறும் போலும்-- |
|
(விடையா
வடந்தை செய் வெள்ளிஅம் சிலம்பினும், |
10
|
தென்கால்
விடுக்கும் செம்பின் பொருப்பினும், |
|
கொண்டல்
வந்து உலவும் நீலக் குவட்டினும், |
|
கோடை
சென்று உடற்றும் கொல்லிக் கிரியினும், |
|
பிறந்தவர்
பிறவாப் பெரும் பதியகத்தும், |
|
முடிந்தவர்
முடியா மூதூரிடத்தும், |
15
|
கண்டவர்
காணாக் காட்சி செய் நகரினும், |
|
வேதத்
தலையினும், விதி ஆகமத்தினும், |
|
கல்வியர்
உளத்தும், கலர் நெஞ்சகத்தும், |
|
தெய்வம்
விடுத்துப் பொய் கொள் சிந்தையினும், |
|
கொலையினர்
கண்ணும்; குன்றாது இயைந்து, |
20
|
வெளியுறத்
தோன்றி, இருளுற மறைந்த |
|
விஞ்சை
வந்தருளிய, நஞ்சு அணி மிடற்றோன்-- |
|
சந்தமும்,
பதமும், சருக்கமும், அடக்கமும், |
|
சின்னக்
குறளும், செழுங் கார் போலப் |
|
பெரு
மறை முழங்கும்--திரு நகர்க் கூடல் |
25
|
ஒப்புற்று)
அடை மலர் சுமந்த |
|
மைப்புறக்
கூந்தல் கொடி வணங்கு இடையே! |
|
|
|
உரை
|
|
|
|
|
53. உள் மகிழ்ந்து உரைத்தல்
|
|
|
|
நுனிக்
கவின் நிறைந்த திருப் பெரு வடிவினள்! |
|
உயிர்
வைத்து உடலம் உழன்றன போல, |
|
நெடும்
பொருள் ஈட்ட, நிற்பிரிந்து இறந்து, |
|
கொன்று
உணல் அஞ்சாக் குறியினர் போகும் |
|
கடுஞ்
சுரம் தந்த கல் அழல் வெப்பம்-- |
5
|
தேவர்
மருந்தும், தென் தமிழ்ச் சுவையும், |
|
என்
உயிர் யாவையும் இட்டு அடைத்து ஏந்தி, |
|
குருவியும்,
குன்றும், குரும்பையும், வெறுத்த நின் |
|
பெரு
முலை மூழ்க என் உளத்தினில் தொடாமுன்-- |
|
(வீழ்
சுற்று ஒழுக்கிய பராரைத் திரு வடக் |
10
|
குளிர்
நிழல் இருந்து, குணச் செயல் மூன்றும், |
|
உடலொடு
படரும் நிலை நிழல்போல |
|
நீங்காப்
பவத்தொகை நிகழ் முதல் நான்கும், |
|
உடன்
நிறைந்து ஒழியா உட்பகை ஐந்தும், |
|
மதியினின்
பழித்த வடு இரு மூன்றும், |
15
|
அணுகாது
அகற்றி, பணிமுனி நால்வர்க்கு |
|
அறம்
முதல் நான்கும் பெற அருள் செய்த |
|
கூடற்
பெருமான் நீடு அருள் மூழ்கி, |
|
இரு
பதம் உள் வைத்திருந்தவர் வினைபோல்) |
|
போயின
துணைவினை நோக்கி |
20
|
ஏகின
எனக்கே அற்புதம் தருமே! |
|
|
|
உரை
|
|
|
|
|
54. புனல் ஆட்டுவித்தமை
கூறிப் புலத்தல்
|
|
|
|
கொன்றைஅம்
துணரில் செவ்வழி குறித்து, |
|
வால்
உளை எருக்கில் வளர் உழை பாடி, |
|
கூவிளங்கண்ணியில்
குலக் கிளை முரற்றி, |
|
வெண்
கூதளத்தில் விளரி நின்று இசைத்து, |
|
வண்டும்,
தேனும், ஞிமிறும், சுரும்பும், |
5
|
உமிழ்நறவு
அருந்தி உறங்கு செஞ் சடையோன்; |
|
மது
மலர் மறித்துத் திருவடி நிறைத்த |
|
நான்மறைப்
பாலனை நலிந்து உயிர் கவரும் |
|
காலற்
காய்ந்த காலினன்; கூடல் |
|
திரு
மறுகு அணைந்து வரு புனல் வையை |
10
|
வரை
புரண்டென்னத் திரை நிரை துறையகத்து, |
|
அணந்து
எடுத்து ஏந்திய அரும்பு முகிழ் முலையோள் |
|
மதிநுதல்
பெருமதி மலர்முகத்து ஒருத்தியை-- |
|
ஆட்டியும்
அணைத்தும், கூட்டியும் குலவியும், |
|
ஏந்தியும்
எடுத்தும், ஒழுக்கியும் ஈர்த்தும், |
15
|
முழுக்கியும்
தபுத்தியும், முலை-ஒளி நோக்கியும், |
|
விளி
மொழி ஏற்றும், விதலையின் திளைத்தும், |
|
பூசியும்
புனைந்தும், பூட்டியும் சூட்டியும், |
|
நிறுத்தியும்
நிரைத்தும், நெறித்தும் செறித்தும், |
|
எழுதியும்
தப்பியும், இயைத்தும் பிணித்தும், |
20
|
கட்டியும்
கலத்தியும், கமழ்த்தியும் மறைத்தும்-- |
|
செய்தன
எல்லாம் செய்யலர் போல, என் |
|
நெட்டிலை
பொலிந்த பொன் நிறை திரு உறையுளில்-- |
|
பாசடைக்
குவளைக் சுழல் மணக் காட்டினைக் |
|
கரு
வரிச் செங் கண் வராலினம் கலக்க, |
25
|
வேரி
மலர் முண்டகத்து அடவி திக்கு எறிய |
|
வெள்
உடற் கருங் கட் கயல் நிரை உகைப்ப, |
|
மரகதப்
பன்னத்து ஆம்பல்அம் குப்பையைச் |
|
சொரி
எயிற்றுப் பேழ்வாய் வாளைகள் துகைப்ப, |
|
படிந்து
சேடு எறியும் செங் கட் கவரியும், |
30
|
மலை
சூழ் கிடந்த பெருங் குலைப் பரப்பும், |
|
மலையுடன்
அலைந்த முதுநீர் வெள்ளமும், |
|
மிடைந்து,
வயல் இரிந்து முதுகு சரிந்து உடைந்து |
|
சிறியோன்
செரு என முறிய, போகி, |
|
உழவக்கணத்தைக்
குலைக் குடில் புகுத்தும்-- |
35
|
பெரு
நீர் ஊரர், நிறைநீர் விடுத்துச் |
|
செறிந்தது
என்? எனக் கேண்மின், |
|
மறிந்துழை
விழித்த மறி நோக்கினரே! |
|
|
|
உரை
|
|
|
|
|
55. தன்னை வியந்து உரைத்தல்
|
|
|
|
விடம்
கொதித்து உமிழும் படம் கெழு பகு வாய்க் |
|
கண்டல்
முள் முளைத்த கடி எயிற்று அரவக் |
|
குழுவினுக்கு
உடைந்து குளிர் மதி ஒதுங்க, |
|
தெய்வப்
பிறை இருந்த திரு நுதற் பேதையைக் |
|
கண்டு
உகண்டு அரவம் மயில் எனக் கலங்க, |
5
|
நெடுஞ்
சடைக் காட்டினை அடும் தீக்கொழுந்து என, |
|
'தலை
ஏது' அலையா நகு தலை தயங்க, |
|
அணி
தலைமாலையை நிறைமதித் திரள் எனப் |
|
புடைபுடை
ஒதுங்கி அரவு வாய் பிளப்ப, |
|
ஒன்றினுக்கு
ஒன்று கன்றிய நடுக்கொடு |
10
|
கிடந்து
ஒளி பிறழும் நெடுஞ் சடைப் பெருமான், |
|
(படை
நான்கு உடன்று, பஞ்சவன்-துரந்து, |
|
மதுரை
வவ்விய கருநட வேந்தன் |
|
அருகர்ச்
சார்ந்து நின்று அருட்பணி அடைப்ப, |
|
மற்று-அவன்தன்னை
நெடுந்துயில் வருத்தி; |
15
|
இறையவன்
குலத்து முறையர் இன்மையினால், |
|
கருதி,
தோரை கல்லொடு பிறங்க |
|
மெய்
அணி அளறாக் கைம் முழம் தேய்த்த |
|
பேர்
அன்பு உருவப் பசுக் காவலனை, |
|
உலகினில்,
தமது முக் குறி ஆக, |
20
|
மணி
முடி வேணியும், உருத்திரக் கலனும், |
|
நிலவு
உமிழ் புண்ணியப் பால் நிறச் சாந்தமும், |
|
அணிவித்து,
அருள் கொடுத்து, அரசன் ஆக்கி, |
|
அடுமால்
அகற்றி, நெடு நாள் புரக்க |
|
வையகம்
அளித்த மணி ஒளிக் கடவுள்) |
25
|
நெடு
மதிற் கூடல் விரிபுனல் வையையுள் |
|
பிடி
குளிசெய்யும் களிறு-அது போல, |
|
மயில்
எனும் சாயல் ஒரு மதி நுதலியை |
|
மருமமும்,
தோளினும், வரை அறப் புல்லி |
|
ஆட்டுறும்
ஊரன் அன்பு கொள் நலத்தினை, |
30
|
பொன்னுலகு
உண்டவர் மண் உலகு இன்பம் |
|
தலைநடுக்
குற்ற தன்மை போல, |
|
ஒன்று
அற அகற்றி உடன் கலந்திலனேல்-- |
|
அன்ன
ஊரனை எம் இல் கொடுத்து, |
|
தேரினும்,
காலினும், அடிக்கடி கண்டு, |
35
|
நெட்டுயிர்ப்பு
எறிந்து, நெடுங் கண் நீர் உகுத்துப் |
|
பின்னும்
தழுவ உன்னும் அவ் ஒருத்தி- |
|
அவளே
ஆகுவள், யானே--தவல் அருங் |
|
கரு
நீர்க் குண்டு அகழ் உடுத்த |
|
பெரு
நீர் ஆழித் தொல் உலகுழிக்கே. |
40
|
|
|
உரை
|
|
|
|
|
56.
புதல்வன்மேல் வைத்துப் புலவி தீர்தல்
|
|
|
|
அடியவர்
உளத்து இருள் அகற்றலின் விளக்கும், |
|
எழு
மலை பொடித்தலின் அனல் தெறும் அசனியும், |
|
கருங்
கடல் குடித்தலின் பெருந்தழற் கொழுந்தும், |
|
மா
உயிர் வௌவலின் தீவிழிக் கூற்றும், |
|
என்
உளம் இருத்தலின் இயைந்து உணர் உயிரும், |
5
|
நச்சின
கொடுத்தலின் நளிர் தரு ஐந்தும், |
|
கரு
வழி நீக்கலின் உயர் நிலைக் குருவும், |
|
இரு
நிலம் காத்தலின் மதியுடை வேந்தும், |
|
ஆகிய
மணி வேல் சேவல்அம் கொடியோன்-- |
|
வானக
மங்கையும், தேன் வரை வள்ளியும், |
10
|
இரு
புறம் தழைத்த திரு நிழல் இருக்கும்-- |
|
ஒரு
பரங்குன்றம் மருவிய கூடல், |
|
பெருநதிச்
சடைமிசைச் சிறுமதி சூடிய |
|
நாயகன்
திருவடி நண்ணலர் போல, |
|
பொய்
பல புகன்று, மெய் ஒளித்து, இன்பம் |
15
|
விற்று
உணும் சேரி விடாது உறை ஊரன், |
|
ஊருணி
ஒத்த பொது வாய்த் தம்பலம் |
|
நீயும்
குதட்டினை ஆயின்--சேயாய்! |
|
நரம்பு
எடுத்து உமிழும் பெரு முலைத் தீம் பாற்கு |
|
உள்ளமும்
தொடாது, விள் அமுது ஒழுக்கும் |
20
|
குதலைவாய்
துடிப்பக் குலக் கடை உணங்கியும், |
|
மண்
உறு மணி எனப் பூழி மெய் வாய்த்தும், |
|
புடை
மணி விரித்த உடைமணி இழுக்கியும், |
|
சுடிகையும்
சிகையும் சோர்ந்து கண் பனித்தும், |
|
பறையும்
தேரும் பறிபட்டு அணங்கியும், |
25
|
மறிக்கட்
பிணாவினர் இழைக்கும் சிற்றிலில் |
|
சென்று
அழியாது நின்று அயர் கண்டும், |
|
உறுவதும்
இப் பயன்: அன்றேல், |
|
பெறுவது
என் பால்; இன்று நின் பேறே. |
|
|
|
உரை
|
|
|
|
|
57.
தலைவி தோழியோடு புகல்தல்
|
|
|
|
நடைமலை
பிடித்த சொரி எயிற்று இடங்கரை |
|
ஆழி
வலவன் அடர்த்தன போல, |
|
புன்
தலை மேதி புனல் எழ முட்டிய |
|
வரி
உடற் செங் கண் வராலுடன் மயங்க, |
|
உள்
கவைத் தூண்டில் உரம் புகுந்து உழக்கும் |
5
|
நிறை
நீர் ஊரர்--நெஞ்சகம் பிரிக்கும் |
|
பிணி
மொழிப் பாணனுடன் உறை நீக்கி; |
|
நூலொடு
துவளும் தோல் திரை உரத்தின் |
|
மால்
கழித்து அடுத்த நரை முதிர் தாடி செய் |
|
வெள்ளி
குமிழ்த்த வெரூஉக் கட் பார்ப்பான் |
10
|
கோலுடன்
படரும் குறு நகை ஒருவி; |
|
பூ
விலைத் தொழில்மகன் காவல் கைவிட்டு; |
|
திக்கு
விண் படர் நதி, திரு மதி, கயிலை, |
|
நாமகள்,
பெருங்கடல், நாற் கோட்டு ஒருத்தல், |
|
புண்ணியம்,
இவை முதல் வெள் உடல் கொடுக்கும் |
15
|
புகழ்க்
கவிப் பாவலர் புணர்ச்சி இன்பு அகற்றி; |
|
எல்லாக்
கல்வியும் இகழ்ச்சி செய் கல்வியர் |
|
பெரு
நகைக் கூட்டமும் கழிவு செய்து; இவ் இடை, |
|
மயக்குறு
மாலை மா மகள் எதிர-- |
|
ஒருவழிப்
படர்ந்தது என்னத் திருமுகம் |
20
|
ஆயிரம்
எடுத்து வான்வழி படர்ந்து, |
|
மண்
ஏழ் உருவி மறியப் பாயும் |
|
பெருங்
கதத் திரு நதி ஒருங்குழி மடங்க, |
|
ஐம்
பகை அடக்கிய அருந் தவ முனிவன் |
|
இரந்தன
வரத்தால், ஒரு சடை இருத்திய |
25
|
கூடல்
பெருமான் குரைகழல் கூறும் |
|
செம்மையர்
போல--கோடா |
|
நம்மையும்
நோக்கினர், சிறிது கண் புரிந்தே. |
|
|
|
உரை
|
|
|
|
|
58.
வழிபாடு கூறல்
|
|
|
|
நிரை
இதழ் திறந்து மது வண்டு அருத்தும் |
|
விருந்து
கொள் மலரும் புரிந்து உறை மணமும், |
|
செந்தமிழ்ப்
பாடலும் தேக்கிய பொருளும், |
|
பாலும்
சுவையும், பழமும் இரதமும், |
|
உடலும்
உயிரும், ஒன்றியது என்ன-- |
5
|
கண்டும்,
தெளிந்தும், கலந்த உள் உணர்வால், |
|
பாலும்,
அமுதமும், தேனும், பிலிற்றிய |
|
இன்பு
அமர் சொல்லி, நண்பும், மனக் குறியும், |
|
வாய்மையும்,
சிறப்பும், நிழல் எனக் கடவார்-- |
|
விண்ணவர்
தலைவனும் வீயா மருந்தும், |
10
|
அளகைக்கு
இறையும் அரும் பொருள் ஈட்டமும், |
|
கண்ணனும்
காவலும், முனியும் பசுவும், |
|
ஒன்றினும்
தவறா ஒருங்கு இயைந்தனபோல், |
|
நீடி
நின்று உதவும் கற்புடை நிலையினர் |
|
தவம்
கற்று ஈன்ற நெடுங் கற்பு அன்னை! |
15
|
(முன்
ஒரு நாளில் முதல் தொழில் இரண்டினர், |
|
பன்றியும்,
பறவையும், நின்று உரு எடுத்து, |
|
கவையா
உளத்துக் காணும் கழலும், |
|
கல்வியில்,
அறிவில், காணும் முடியும், |
|
அளவு
சென்று எட்டா அளவினர் ஆகி, |
20
|
மண்ணும்
உம்பரும், அகழ்ந்தும் பறந்தும், |
|
அளவா
நோன்மையில் நெடு நாள் வருந்திக் |
|
கண்ணினில்
காணாது, உளத்தினில் புணராது, |
|
நின்றன
கண்டு, நெடும் பயன் படைத்த |
|
திரு
அஞ்செழுத்தும் குறையாது இரட்ட, |
25
|
இரு
நிலம் உருவிய ஒரு தழல்-தூணத்து, |
|
எரி,
மழு, நவ்வி, தமருகம், அமைத்த |
|
நாற்
கரம், நுதல்விழி, தீப் புகை கடுக் களம், |
|
உலகு
பெற்று எடுத்த ஒரு தனிச் செல்வி, |
|
கட்டிய
வேணி, மட்டு அலர் கடுக்கை, |
30
|
ஆயிரம்
திருமுகத்து அருள் நதி, சிறுமதி, |
|
பகை
தவிர் பாம்பும், நகை பெறும் எருக்கமும், |
|
ஒன்றிய
திருஉரு நின்று நனிகாட்டிப் |
|
பேர்
அருள் கொடுத்த) கூடல் அம் பதியோன் |
|
பதம்
இரண்டு அமைத்த உள்ளக் |
35
|
கதி
இரண்டு ஆய ஓர் அன்பினரே. |
|
|
|
உரை
|
|
|
|
|
59.
ஆதரம் கூறல்
|
|
|
|
நெடு
வரைப் பொங்கர்ப் புனம் எரி கார் அகில் |
|
கரும்
புகை வானம் கையுறப் பொதிந்து, |
|
தருநிழல்
தேவர்தம் உடல் பனிப்பப் |
|
படர்ந்து
எறி கங்கை விடும் குளிர் அகற்றும் |
|
பொன்அம்
பொருப்ப! நின் உளத்து இயையின்-- |
5
|
கனல்தலைப்
பழுத்த திரள் பரல் முரம்பு, |
|
வயல்
வளை கக்கிய மணி நிரைப் பரப்பே! |
|
அதர்
விரிந்து எழுந்த படர்புகை நீழல், |
|
பொதுளிய
காஞ்சி மருது அணி நிழலே! |
|
தீ
வாய்ப் புலிப் பற் சிறு குரல் எயிற்றியர், |
10
|
கழுநீர்
மிலையும் வயல் மாதினரே! |
|
அயற்புலம்
எறியும் எயினர் மாத் துடி, |
|
நடு
நகர்க்கு இரட்டும் களி அரி கிணையே! |
|
இருள்
கவர் புலன் எனச் சுழல்தரும் சூறை, |
|
மதுமலர்
அளைந்த மலையக் காலே! |
15
|
எழுசிறை
தீயும் எருவையும் பருந்தும், |
|
குவளை
அம் காட்டுக் குருகொடு புதாவே! |
|
வலி
அழி பகடு வாய் நீர்ச் செந்நாய், |
|
தழை
மடி மேதியும் பிணர் இடங்கருமே! |
|
பட்டு
உலர் கள்ளி நெற்றுடை வாகை, |
20
|
சுருள்
விரி சாலியும் குலை அரம்பையுமே! |
|
(வட
திரு ஆலவாய், திருநடவூர், |
|
வெள்ளியம்பலம்,
நள்ளாறு, இந்திரை, |
|
பஞ்சவனீச்சரம்,
அஞ்செழுத்து அமைத்த |
|
சென்னி
மாபுரம், சேரன் திருத்தளி, |
25
|
கன்னி
செங்கோட்டம், கரியோன் திருஉறை-- |
|
விண்
உடைத்து உண்ணும் கண்ணிலி ஒருத்தன், |
|
மறிதிரைக்
கடலுள் மா எனக் கவிழ்ந்த |
|
களவு
உடற் பிளந்த ஒளி கெழு திரு வேல், |
|
பணிப்பகை
ஊர்தி, அருட்கொடி இரண்டுடன், |
30
|
முன்னும்,
பின்னும், முதுக்கொள நிறைந்த |
|
அருவிஅம்
சாரல் ஒரு பரங்குன்றம்-- |
|
சூழ்கொள
இருந்த) கூடல்அம் பெருமான் |
|
முழுதும்
நிறைந்த இரு பதம் புகழார் |
|
போம்
வழி என்னும் கடுஞ் சுரம் மருதம்!-- |
35
|
மாமை
ஊரும் மணி நிறத்து இவட்கே. |
|
|
|
உரை
|
|
|
|
|
60.
முகம் கண்டு மகிழ்தல்
|
|
|
|
நிறைமதி
புரையா! நிறைமதி புரையா! |
|
'தேரான்
தெளிவு' எனும் திருக்குறள் புகுந்து |
|
குறைமதி
மனனே! நிறைமதி புரையா!-- |
|
உவர்க்
கடற் பிறந்தும், குறைஉடல் கோடியும், |
|
கருங்
கவைத் தீ நாப் பெரும் பொறிப் பகுவாய்த் |
5
|
தழல்விழிப்
பாந்தள்தான் இரை மாந்தியும், |
|
மிச்சில்
உமிழ்ந்து மெய்யுள் கறுத்தும், |
|
தணந்தோர்க்கு
எரிந்தும் மணந்தோர்க்கு அளித்தும், |
|
குமுதம்
மலர்த்தியும் கமலம் குவித்தும், |
|
கடல்
சூழ் உலகில் மதி நடு இகந்தும்-- |
10
|
பெரு
மறை கூறி அறை விதிதோறும், |
|
'முத்
தழற்கு உடையோன் முக்கட் கடவுள்' என்று |
|
உய்த்திடும்
வழக்குக் கிடக்க என்று, ஒருகால், |
|
வானவர்
நதிக் கரை மருள் மகம் எடுத்த |
|
தீக்குணத்
தக்கன் செருக்களம்தன்னுள், |
15
|
(கண்தொறும்
விசைத்த கருப்புத் தரளமும், |
|
வளை
உமிழ் ஆரமும், சுரிமுகச் சங்கும், |
|
வலம்புரிக்
கூட்டமும், சலஞ்சலப் புஞ்சமும், |
|
நந்தின்
குழுவும், வயல்வயல் நந்தி |
|
உழவக்
கணத்தர் படைவாள் நிறுத்தும்) |
20
|
கூடற்கு
இறையோன் குரை கழற்படையால் |
|
ஈர்-எண்
கலையும் பூழிபட்டு உதிர |
|
நிலனொடு
தேய்ப்புண்டு அலமந்து உலறியும், |
|
சிதைந்து
நைந்து எழு பழித் தீ மதி புரையா!-- |
|
முண்டகம்
மலர்த்தி முதிராது அலர்ந்தும், |
25
|
தீக்
கதிர் உடலுள் செல்லாதிருந்தும், |
|
திளையாத்
தாரைகள் சேரா |
|
முளையா
வென்றி இவள் முகமதிக்கே! |
|
|
|
உரை
|
|
|
|