பக்கம் எண் :

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி

97

தால் தோன்றிய பேரின்ப) வேட்கை.  கள்ளர் நாவுறாத கனியை யான் கண்ட மாத்திரையில் வேட்கை தீர்ந்தது என்றலின், உண்டு பயன்பெறுதல் ஒரு தலை யென்பது தானே பெறப்படும்.  கனி என்பது ஈண்டுப் பழம் என்னும் பொருளில் இயற்சொல்லாகவும், சிவபெருமான் என்னும் பொருளில் உவமை யாகுபெயராகவும் கொள்ளக் கிடப்பது கண்டுகொள்க. திருநாவுக்கரசு சுவாமிகள்,

    மனிதர்காள் இங்கே வம்மொன்று சொல்லுகேன்
    கனிதந்தாற் கனியுண்ணவும் வல்லிரே
    புனிதன் பொற்கழ லீசன் எனும்கனி
    இனிதுசாலவும் ஏசற்றவர் கட்கே.

என்றருளிச் செய்தமை ஈண்டு நோக்கற்பாலது.

    கடவுளையன்றி ஒருபொருள் இல்லாமையால் கடவுளே உள் பொருள் எனவும், உலகத்துப் பொருள்களை ஒவ்வொன்றாய் எடுத்து இத கடவுளோ இது கடவுளோ என்று ஆராய்வுழி அவையாவும் கடவுள் அல்ல என்று கழிக்கப்படுத லின் கடவுளை இல்லது எனவும் கூறும் நூல்கள்.  ஆதலின் ‘உள்ள தில்ல தென்றுரைத்திடும் ’ என்றார்.  இல்லது என்றது கடவுளின் இன்மையைக் குறியாது அன்மையையே குறிக்கும்.  ஆதலின் ‘உரைத்திடும் பொருளை ’ என்றார்.  பொருளாவது உண்மை; ‘ பொருண்மை சுட்டலாவது உண்மைசுட்டல் ’ என்றார் சேனாவரையரும்.  இல்லது என்பது கடவுளின் இன்மையைச் சுட்டியதன்று என்பதை ‘ இல்லையில்லை யென்னின் ஒன்று மில்லாதல்ல; என்றுமுள்ள இயற்கையாகி’ என வரும் தாயுமானவர் திருவாக்கினும் கண்டு கொள்க.  இங்ஙனமாகிய இறைவன் இயல்பு அவனருள் வழிநின்று அனுபவ வாயிலான் உணரப்படுவதன்றி, வெறும் அறிவின் ஆற்றல்கொண்டு அறியப்படுவ தன்றாகலான் ‘ உய்த்து உணரா ’ என்றார்.

    அவன் அருள்வழிநின்று இவ்வுணர்வைப் பெறாதவர்கள் பேரின்பவீடுபெற்றுப் பிறவிநோய் தீரவொட்டாமல் தம்மைத் தாமே வஞ்சித்தலின் ‘ கள்ளர் ’ என்றார்.  அவ் வஞ்சர் ஒருகால்