சதுரனீ யென்றுரைத்தார் விருத்தனா யிருக்கின்றாய்
சசியே-பாம்பின்
தன்வாய்ப் படுந்துயரஞ் சற்று நினைக்கிலையே
சசியே
அதன்ம மெவர்க்காகு மதுநின்னிடத்துளதால்
சசியே-தெய்வம்
அந்தரத்தில் விட்டதுன்னை யிந்தவா றலைந்திடென்று
சசியே
மருவவென்னை மயக்கியுன் வசஞ்செயப் பார்க்கிறாயோ
இந்துவே-தேவர்
மந்திரியின் மனையாளால் வந்த குறை போதாதோ
இந்துவே
உருவிற் கறுப்பையிந்த வுலகமா னென்றல்பொய்
இந்துவே-உனக்
குள்ளக் கறுப்பல்லவோ மெள்ளமே லுதித்ததிங்கு
இந்துவே
அரிவையோ டுதித்தும்பெண் ணருமை யறிந்திலையே
வெண்ணிலாவே-எண்ணின்
அதுவுமல் லாதுனக் கெதிரல்ல வேநானும்
வெண்ணிலாவே
இருநிலம் போற்றுந்தஞ்சை சரபோஜி மன்னருடன்
வெண்ணிலாவே-நாளை
இருந்திடுவே னங்கேவா விருந்திடு வேனுனக்கு
வெண்ணிலாவே ___
ஸ்வரம்.
கா ம பத, கப, மப, கம கா ரி சா, சப,
பாம, மகரிசா
சகாம, பநி பநீ சரி, சநி நிசா, நித,
நிதா பம கரிச
___
|