190
|
நிலைபயிலுங்
கலைபயிலிய
தவமலியு மவர்நடுவட்
கருங்கடலிற் செஞ்ஞாயிறும்
பொரத்தலைமை கொளத்தவிசில்
விரைப்பாண்டித் துரைத்தேவ |
195 |
னாற்றல்சால்
சிறப்பி னாங்கவீற் றிருக்குங்
காட்சி கண்டனிர் களித்தனி ரண்மின்
மாட்சியி னவனே மலர்ந்த முகத்தினன்
யாரை நீயிரென வினாவு மோரையிற்
போந்தனென் பெருமநின் னவைக்கள மோர்ந்தெனின் |
200 |
வருகெனத் தழீஇ
யிருக்கென வருகிரீ இப்
போற்றினிர் சென்றநுங் கவியரங் கேற்று
நச்சியாங் கிருக்குந ருளப்பட மெச்சி
வாயரும் புலவன் பெருங்கவி ராயன்
பாவலன் வித்துவா னியறெரி நாவல |
205
|
னென்றுயர் பெயர்களு
ளொன்றுற நுமக்குக்
களிவர நல்கி யூர்கோ ளொருதலை
மீனிருந் தென்ன வானிற வயிர
மின்செய் தொளிறும் பொன்செய் யாழியும்
பொலந்தகடு குழித்துப் பொற்புற வமைத்த |
210 |
வலந்த பொற்றொடரின்
மாண்பிற் றாகிப்
பழுதறச் சமைந்த பொழுதறி கருவியு
நொய்ம்மயி ராய்ந்து துய்யென நெய்த
மின்னிவர்ந் தென்ன பொன்னிழை நுழைத்த
மாசுகெடச் சிறந்த காசு மீரமும் |
215 |
விழுத்தலை யமைத்த
கழுத்தள வரையன்
பணயம் பலவு மிணையறத் தரீஇப்
பெருகிய மகிழ்விற் பேணுபு விடுக்கும்
வருகுவிர் மாதோ வளமலி தன்மையிற்
செம்பொன் பழுநிய செழுமரன் |
220 |
வம்பொடும் பொலிந்து
வந்ததா லெனவே. |