எடுத்தேத்துவதற்குரியவன்.
எல்லாம் வல்லவன். எல்லாம் அறிந்தவன்.
எறும்புமுதல் எறும்பிவரை எல்லாவற்றையும் பாதுகாப்பவன்.
ஏகன்.
ஏத்துதலுக்குரியோன். ஏகத்துவத்தின் ஏந்தல். ஏய்ப்புக்காரரை
ஏமாற்றுபவன். ஏற்புடைய ஏற்பாடுகளை ஏற்படுத்தும் ஏற்புடைக் கடவுள்.
ஏழை ஏற்போன் ஏனையோருக்கும் ஏற்றக் குறைச்சல் ஏற்படாதவாறு
பார்த்துக் கொண்டு இருப்பவன்.
ஐம்பது
வேளையை ஐவேளையாக்கித் தந்தவன். ஐந்தடக்கி
ஐயந்திரிபற ஐவேளையும் தொழுதல் வேண்டுமென்று விதித்தவன். ஐயோன்.
ஐம்புலன் அடக்க ஐங்கடமையையும் ஏற்றுக் கொள்ளுமாறு
கட்டளையிட்டவன்.
ஒஞ்சரி
தீர்ப்பற்றவன். ஒடுக்கத்து நாளின் அதிபதி. ஒப்பற்றவன்.
ஒருவன். ஒப்புற ஒழுகப் பணிப்பவன். ஒளி. ஒருதனிப் பட்டவன். ஒரு
பொருள். ஒவ்வோன். ஒன்றானவன்.
ஓசிவனம்
வழங்குபவன். ஓதல்களை ஓதி ஓதி ஓங்குவோரை
ஓம்புபவன். ஓரவாரம் அற்றவன்.
ஒளடதமான
ஒளராதுகளை ஓதுவதற்குரியவன். ஒளலாதுகளை
அளிப்பவன். அவனுக்கே புகழ் அனைத்தும்.
அவன் அருளால்
புலவராற்றுப்படை என்னும் இந்நூலை
வெளியிடுகிறோம். நாகூர் தறுகா மகா வித்துவானாகக் கடமையாற்றிய
குலாம் காதிறு நாவலர் அவர்களால் இயற்றப்பட்டது இந்நூல். இந்நூலை
வெளியிடும் உரிமையை அளித்தவர் அவர் தம்புதல்வர் ஆரிபு நாவலர்
அவர்கள். அவ்வுரிமையை எமக்குப் பெற்றுத் தந்தவர்
ஹாஜி செ. முஹம்மது ஹனிபா, பி.ஏ. அவர்கள். அவ்விருவர்க்கும் எமது
மனமார்ந்த நன்றி.
இந்நூலையும்
வெளியிட எமக்குப் பொருள் உதவி புரிந்தோர் பிரபல
மாணிக்க வியாபாரிகள் இருவர். ஒருவர் ஜனாப் எம். எஸ். எம். பளீல்.
இவர் இரத்தினபுரி நகரசபை உறுப்பினர். மற்றவர் வேர்விலை,
சீனங்கோட்டையைச் சேர்ந்த ஜனாப் எம். எஸ். எம். முபாறக். இவர்கள்
இருவருக்கும் சகல பாக்கியங்களையும் அல்லாஹ் அளிப்பானாக.
ம.
முகம்மது உவைஸ்.
மர்கஸி,
ஹேனமுல்லை,
பாணந்துறை.
இலங்கை
1968-11-21
|