பக்கம் எண் :

116

2.    அடிஓட்டின் மேற்கரணம் போடவந்தது போலே
     முடியத்துரத்தி என்ன மோசஞ்செய்ய வந்தாலும்
          முறியேனோ          வளைதடிகொண்
          டெறியேனோ         தலைதலையாப்
          பறியேனோ           கொல்ல
          அறியேனோ                      (என்ன)

3.   ஆனை கட்டச் சங்கிலிதான் எடுத்துக் கொடுத்தாற்போல்
     ஏனெதிர்த்துக் கொண்டாரென்னை இவரைப் பொடிபொடியா
          இடியேனோ          வரவொட்டாமல்
          அடியேனோ         வந்தமன்னரைப்
          பிடியேனோ          என்சொல்
          முடியேனோ                       (என்ன)

-----

லட்சுமணர் பரதர் சேனையைக் கண்டு கோபித்தல்

விருத்தம்-27

     திடம்பெருகு குகன்இவ்வா றெண்ணி ஐயம்
          தெளிந்துதெரி சிக்கவந்தான் பரதன் அன்பால்
     நடந்ததெல்லாம் குகனுக்குச் சொன்னான் கங்கா
          நதிகடந்தான் சேனைகளைப் பரத்து வாசன்
     மடந்தனிலே இளைப்பாற்றிச் சித்திர கூட
          மருங்குவந்தான் அவனைலட்சு மணன்கண் டிங்கே
     தொடர்ந்துகொல்ல வருமிவனைக் கொல்வேன் என்று
          துடிக்கின்றான் ராமன் முன்னே படிக்கின்றானே

தரு-16

அசாவேரி ராகம்                              ஆதிதாளம்

பல்லவி

     ஒருமொழி மாத்திரம் தாரும்சாமி-எனக்குத்தாரம்
     ஒருமொழி மாத்திரம் தாரும் சாமி

அநுபல்லவி

     பரதன் சேனையிது நான்மரம்              ஏறிப்
          பார்க்கத் தெரிந்த தைய்யா, பழி       காரி
     வரவிடுக்க வந்தான் நம்மைச்               சீறி
          வரட்டும் ஒருகை பார்க்கிறேன் எனத்   தேறி (ஒரு)