124 ஸ்ரீ அயோத்தியா காண்டம் (கம்பராமாயண ஒப்புமைப்பகுதி) சக்கிரவர்த்தி முடிசூட ஸ்ரீராமரை வேண்டுதல் விருத்தம்-1 - தரு-1 சந்திரற் குவமைசெய் தரள வெண்குடை அந்தரத் தளவும்நின் றளிக்கும் ஆணையான் இந்திரற்கு இமையவர் குருவை ஏய்ந்ததன் மந்திரக் கிழவரை வருகென் றேவினான் கன்னியர்க் கமைவரும் கற்பின் மாநிலம் தன்னையித் தகையதாய்த் தருமம் கைதர மன்னுயிர்க் குறுவதே செய்து வைகினேன் என்னுயிர்க் குறுவதும் செய்ய எண்ணினேன் விரும்பிய மூப்பெனும் வீடு கண்டயான் இரும்பியல் அநந்தனும் இசைந்த யானையும் பெரும்பெயர்க் கிரிகளும் பெயரத் தாங்கிய அரும்பொறை இனிச்சிறி தாற்ற ஆற்றலேன் புரசை மாக்கரி நிருபர்க்கும் புரத்துறை வோர்க்கும் உரைசெய் மந்திரக் கிழவர்க்கும் முனிவர்க்கும் உள்ளம் முரச மார்ப்பநின் முதன்மணிப் புதல்வனை முறையால் அரச னாக்கிப்பின் அப்புறத் தடுத்தது புரிவாய் என்ற வாசகம் சுமந்திரன் இயம்பலும் இறைவன் நன்று சொல்லினை நம்பியை நளிமுடி சூட்டி நின்று நின்றது செய்வது விரைவினில் நீயே சென்று கொண்டுஅணை திருமகள் கொழுநனை என்றான் ஐய சாலவும் அலசினென் அரும்பெரு மூப்பும் மெய்ய தாயது வியலிடப் பெரும்பரம் விசித்த தொய்யல் மாநிலச் சுமைஉறு சிறைதுறந் துஇனியான் உய்ய லாவதோர் நெறிபுக உதவிட வேண்டும் ஒருத்தல் எட்டொடு திருத்தலை பன்மைசால் உரக எருத்தம் மேல்படி புயம்அறச் சுமந்துஇடர் உழக்கும் |