126 திரு அயோத்தியை அலங்கரித்தல் விருத்தம்-3 - திபதை-1 நிருப நின்குல மன்னவர் நேமி பண்டு உருட்டிப் பெருமை எய்தினர் யாவரே இராமனைப் பெற்றார் கரும மும்இது கற்றுணர்ந்தோர்க்கு இனிக்கடவ தருமமும் இது தக்கதே உரைத்தனை தகவோய்                                          (மந்திரப்படலம் 34)      ஏற்றிட ஆண்தகை இனிது இருந்துழி நூற்றட மார்பனும் நொய்தின் எய்தப்போய் ஆற்றல்சால் அரசனுக் கறிவித்தான் அவன் சாற்றுக நகரணி சமைக்க என்றனன்      ஏவின வள்ளுவர் இராமன் நாளையே பூமகள் கொழுநனாய் புனையும் மௌலிஇக் கோநகர் அணிகஎனக் கொட்டும் பேர்இயம் தேவரும் களிகொளத் திரிந்து சாற்றினார்      திணிசுடர் இரவியைத் திருத்துமாறு போல் பணியிடைப் பள்ளியான் பரந்த மார்பிடை பணியினை வேகடம் வகுக்கு மாறுபோல் அணிநகர் அணிந்தனர் அருத்திமாக்களே      மங்கையர் குறங்கென வகுத்த வாழைகள் அங்கவர் கழுத்னெக் கமுகும் ஆர்த்தன தங்கொளி முறுவலின் தாமம் நான்றன கொங்கையின் நிறைந்த கனக கும்பமே      துனியறு செம்மணித் தூணில் நீல்நிறம் வனிதையோர் கூற்றினன் வடிவு காட்டின புனைதுகில் உறைதொறும் புனைந்து தோன்றின பனிபொதி கதிர்எனப் பவளத் தூண்களே      முத்தினின் முழுநில வெறிப்ப மொய்ம்மணிப் பத்தியின் இளவெயில் பரப்ப நீலத்தின் தொத்தினம் இருள்வரத் தூண்ட சோதிட வித்தகர் விரித்தநாள் ஒத்த வீதியே                       (மந்தரைசூழ்ச்சிப்படலம் 32, 33, 35, 37, 39, 40)    |