134 நன்று மன்னன் கருணை எனாநகும் நின்ற மைந்தனை நோக்கி நெடுஞ் சுரத்து என்று போவது எனாஎழும் இன்னுயிர் பொன்றும் போதுற்றது உற்றனள் போலுமே அறம் எனக் கிலையோ எனும் ஆவிநைந்து இறவிடுத்ததென் தெய்வதம் காள் எனும் பிற உரைப்பதென் கன்று பிரிந்துழிக் கறவை ஒப்பக் கரைந்து கலங்கினாள் (நகர் நீங்குடலம் 8, 11, 13) ஸ்ரீராமர் கோசலையைத் தேற்றி விடைகொளல் விருத்தம் 11 - தரு-6 சிறந்த தம்பி திருவுற எந்தையை மறந்தும் பொய்யிலன் ஆக்கி வனத்திடை உறைந்து போகும் உறுதிபெற்றேன் இதின் பிறந்து யான்பெறும் பேறென்பதியா வதோ விண்ணும் மண்ணும் இவ் வேலையும் மற்றும்வேறு எண்ணும் பூதம் எலாம் அழிந் தேகினும் அண்ணல் ஏவல்மறுக்க அடியே னேற்கு ஒண்ணு மோஇதற்கு உள்ளழியேல் என்றான் சித்தம் நீதிகைக் கின்றதேன் தேவரும் ஒத்த மாதவம் செய்துயர்ந்தார் அன்றே எத்தனைக் குள ஆண்டுகள் ஈண்டவை பத்துநாலு பகல் அலவோ என்றான் மகர வேலை மண் தொட்டவண் டாடுதார் சகரர் தாதை பணிதலை நின்றுதம் புகரில் யாக்கையின் இன்னுயிர் போக்கிய நிகரில் மாப்புகழ் நின்றதன்றோ எனா மான்மறிக் கரத்தான் மழு ஏந்துவான் தான் மறுத்திலன் தாதைசொல், தாயையே ஊனறக் குறைத்தான் உரவோன் உரை யான் மறுப்ப தென்றெண்ணுவதோ என்றான் (நகர் நீங்குபடலம் 16, 17, 21, 24, 25) |