பக்கம் எண் :

158

தொகையில் அன்பினால் இறைவன் துஞ்சநீ
புகையும் வெஞ்சுரம் புகுத புந்தியால்
வகையில் வஞ்சனாய் அரசு வவ்வயான்
பகைவனே கொலாம் இறவு பார்க்கின்றேன்
 

உந்தை தீமையும் உலகுறாத நோய்
தந்த தீவினைத் தாய்செய் தீமையும்
எந்தை நீங்கமீண் டரசு செய்கெனாச்
சிந்தை யாவதும் தெரியக் கூறினான்
               (திருவடிசூட்டுப்படலம் 77, 79, 94, 96, 97, 100, 101) 

ஸ்ரீ ராமர் பரதருக்குப் புத்தி சொல்லுதல்

விருத்தம்-31 - தரு-18

சொற்ற வாசகம் துணிவு ணர்ந்தபின்
இற்றதோ இவன் மனமென் றெண்ணுவான்
வெற்றி வீரயான் விளம்பக் கேள்எனா
முற்றும் நோக்கினான் மொழிதல் மேயினான்
 

பரவு கேள்வியும் பழுதில் ஞானமும்
விரவு சீலமும் வினையின் மேன்மையும்
உரவிலோய் தொழற் குரிய தேவரும்
குரவரே எனப் பெரிது கோடியால்
 

தாய் வரங்கொளத் தந்தை ஏவலால்
மேய நங்குலத் தருமம் மேவினேன்
நீவரங் கொளத் தவிர்தல் மேன்மையோ
ஆய்வரும் புலத் தறிவு மேயினாய்
 

தனைய ராயினும் தந்தை தாயரை
வினையின் நல்லதோர் இசையை வேய்தலோ
நினையல் ஓவிடா நெடிய வன்பழி
புனைதலோ ஐய புதல்வர் ஆதல்தான்
 

இம்மை பொய்உரைத்து இவறி எந்தையார்
அம்மை வெம்மைசேர் நரகம் ஆளயான்
கொம்மை நல்நிதிக் குவையின் வைகிவாழ்
செம்மை சேர்நிலத்து அரசு செய்வெனோ