பக்கம் எண் :

160

ஸ்ரீ

ஸ்ரீராமஜெயம்

மூன்றாவது

ஆரணிய காண்டம்

ஸ்ரீராமர் அந்திரியைக் கண்டு தண்டகம் சேர்தல்

விருத்தம்-1 

    துதிபெறு தம்பியர் தாய்மார் மந்திரிமார்கள்
        தொல்முனிவர் புரசனங்கள் குகன் போனாலும்
     பதிவுறும்நம் இருப்பிடத்தைக் கண்டு கொண்டார்
          பரிவினால் வந்துதினம் சூழ்வார் என்று
     சதியெனும் சானகிபின்னும் தம்பி முன்னும்
          தான்சரச் சித்திரகூட மலைக்கப் பாலே
     உதயரவி முன்பனிபோல் முனிவர் துன்பம்
          ஒழிக்கின்றான் ஸ்ரீராமன் வழிக்கொண்டேனே

திபதை-1

தோடிராகம்                          அடதாளசாப்பு

கண்ணிகள்

1. வழிகொண்டு ராகவன்              விண்டான்-அந்த
     வழியில் அத்திரி முனியைக்      கண்டான்-முனி
  பொழியும் ஆசீர்வாதம்             கொண்டான்-தந்த
     பூங்கனி கிழங்கமு              துண்டான்.

2. அழுக்கில்லாத சொர்ணச்           சாயை-ஆன
     ஆடை பணிகள் வெகு          வாயே-அன்பு
  செழிக்கும் சீதைக்கொரு            தாயைப்-போலே
     செய்தாளே முன் அந           சூயை.

3. அதுகொண்டு முனிவன் அவ்        அன்னை-இடத்து
     அனுமதி கொண்டு அவர்        முன்னே-நல்ல
  முதுதண்ட காரணியம்              தன்னைக்-கண்டு
     மூவரும் சென்றாரே             பின்னே.